உள்ளே, பதற்றமும், பரபரப்புமாக ஒரே களேபரமாய் இருந்தது. நான், அதையெல்லாம் ஒன்றும் சட்டையே செய்யவில்லை!. எனக்கு இதெல்லாம் சலித்துப்போனக் காட்சி!.. ஒவ்வொரு தடவையும் நான், எனது வேலையைச் செய்யும்போது, இந்தக் கண்றவியைத்தான் பார்க்கிறேன். நோயில் படுத்து இன்னும் சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும்போது, ‘இந்த சனியன் வேற இன்னும் சாகாம உயிர வாங்குது..’ என்றோ; ‘ஒத்த கால வெச்சிக்கிட்டு இது இன்னும் என்னத்த சாதிக்கறதுக்கு இப்படி இழுத்து பறிச்சிக்கிட்டு கெடக்குது?’ என்றோ கட்டிய மனைவியே வாயிற்குள் முணுமுணுத்துக்கொள்வதை உயிரைப் பறிக்கப்போன எத்தனை இடங்களில் நான் பார்த்திருப்பேன்!.
ஆசிரியர்: மலேசியா ஸ்ரீகாந்தன்
அகோரம்
ஏழாவது நாள், லீ மயக்கத்திலிருந்து மீண்ட சில மணி நேரத்திற்குப் பின்னர் மனைவியைப் பற்றிக் கேட்டபோது, டாக்டர் ஈஸ்வரின் அணி நிலைகுலைந்து போனது. தடுமாற்றத்தில் அவரின் மனைவி யாரென்றுத் தெரியாமல் திகைத்தனர். உடனே கம்ப்யூட்டரில் தேடிப் பார்த்து, ஒரே முகவரியிலிருந்து, அவரின் மனைவி யாரென்பதைக் கண்டுப் பிடித்தபோது, எமியின் மரணம் அவர்களுக்கு என்றோ மறந்து போயிருந்தது. உடனே டாக்டர், ஒரு ஃபைலைப் பார்க்கும் பாவனையில் அருகிலிருந்த தாதியிடம் ‘எமி நலமுடன் இருப்பதாக’ எழுதிக் காட்டச் சொல்லி முணுமுணுத்தார். அந்தத் தாதி, ஒரு வெள்ளைத்தாளில்,‘Dia sihat. Dah balik rumah..’ (அவர் நலமாக இருக்கிறார். வீட்டிற்கு போய்விட்டார்) என்று மலாய் மொழியில் எழுதிக் காட்டினாள்.
இலவசமாய் ஒரு வேலைக்காரி
ராதாபாய், கல்யாணமாகி இரண்டு வருடங்களாகியும் கருத்தரிக்காதபோது, ‘எங்கே மலடியாக இருப்பாளோ?’ என்று கதி கலங்கிப் போனாள். ஜாதகத்தில் வேறு புத்திர பாக்கியம் மத்திமம் என்று இருந்தது இப்போது அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்திருந்தது. முதல் வருஷத்திலேயே பிரதி வெள்ளியும் அம்பாளுக்கு நெய்விளக்கு ஏற்றி வணங்க ஆரம்பித்தாள்.
நண்பன்
அந்த எஸ்டேட் ஒரு பட்டிக்காடு! (1)‘கருப்புப் பிரதேச’ காலத்தைத் தாண்டாத (2)மேக்கட லயங்கள்.‘ துரை பங்களா, கிராணிமார்கள் பங்களா, ஆபீஸ், ‘மருந்து காம்பரா’, பால் ஸ்டோர் என்று தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்ட மின்சார நாகரிகம்!. ஒவ்வொரு இரவும் இருட்டை விரட்ட முடியாமல் குளிரைப் போர்த்திக்கொண்டு நடுங்கும் மண்ணெண்ணை “நண்பன்”