ஹிக்கூரி

அவள் மணலை விரலால் மெதுவாக மூடினாள். அப்போதுதான் சேவியர் அவள் கைகளைக் கவனித்தான். விரல் நுனிகளில் ஒரு பழைய ஆழமான வெட்டுக்காயம் . காயத்தின் தழும்பு வெண்மையாக இருந்தது . அவன் தன் கைகளைப் பார்த்தான்.  நடுங்கிய விரல்கள், இறுக்கிய கைகள். அவளுடைய காயத்துக்கும் அவனுடைய கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு கணம் அப்படி நினைத்தான்.