பயங்கரமான கனவிலிருந்து திடுக்கிட்டு எழுவது போல்தான் இருந்தது, மொபைலில் படித்த செய்தி. சுந்தரேசன் இறந்து போய்விட்டான். மரியாதையுடன் சொல்லணும் இல்லையா? ‘…காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ வாட்சப் செய்தி. போன மாதம் வரை அவனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்தவன் இப்போ போயிட்டான். உடனே சுந்தரேசனின் மொபைலுக்கே போன் “தலைப்புச் செய்திகள்”
Tag: ஹெச்.என்.ஹரிஹரன்
வேலையை விரும்பிய தருணம்
நான்கு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு தயாராக இருக்கும்படி உத்தரவு வந்தது. குளித்துவிட்டு கம்பெனி சீருடையை அணிந்து தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். ‘நல்லாத்தானேடா இருக்க’ என்று தன்னையே பாராட்டிக் கொண்டான். நுனி விரலில், தண்ணீரில் குழைத்த வீபூதியைத் தொட்டு இரு புருவங்களுக்கிடையே நீட்டினான். ‘ஈரத்துல தொட்டு வெச்சா, ரொம்ப நேரத்துக்கு இருக்கும்’ சூப்பர்வைசர் முந்தின நாள் இரவே சொல்லி வைத்திருந்தார்.
புகையும் நிஜங்கள்
வீட்டிலிருக்கும் பெண்டுகள் சவத்துடன் சுடுகாடு செல்கிற வழக்கம் அவனது குடும்பத்திலும் இல்லை. வீதி வரை உறவு. அதனாலேயே அவர்களுக்கு எரியும் நாற்றம் பரிச்சயமில்லை. ஆனால், இந்த வீட்டிற்கு வந்தபிறகு அதுவே ஒரு வித ஒவ்வாமை போல் அம்மாவிற்கு ஆகிவிட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. மனைவிக்கும், குழந்தைகளுக்கு பழகிப் போன நாற்றம் அவனது அம்மாவிற்கு மட்டும் அப்படியென்ன வினோதமாய்? கேள்விகள் அவனது மண்டையைக் குடைந்த வண்ணம் இருந்தன.
