நான்கு நாட்கள் கொண்டாட்டம்

சரசுவின் வேலை மேய்ப்பதும் தோய்ப்பதும். மாடு ஆடு கோழி தாரா வாத்துகள் எனப் பலவற்றைப் பராமரிக்கின்றாள். அத்தோடு உடுப்புகள் தோய்க்கின்றாள். சிலவேளைகளில் தோட்டத்திற்குள் களையும் புடுங்குவாள். இவையெல்லாவற்றையும் விட, கமலத்தின் முழுத்தொட்டாட்டு வேலைகளையும் அவளே செய்வாள்.

நினைவில் நின்றவை

மஞ்சுவை வெளியே கூட்டிச் சென்ற நந்தன், அங்கு நின்ற கார்களில் ஒன்றை மஞ்சு வீட்டிற்குப் போவதற்காக ஒழுங்கு செய்தான். காருக்குச் சமீபமாகக் குந்தியிருந்த ஒருவர் சாப்பாடு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அவரை மஞ்சுவால் அடையாளம் காண முடியவில்லை. ஒத்துவராத சாப்பாட்டை உடல் உதறித் தள்ளுகின்றது. ஒவ்வாதவற்றை உடம்பு மாத்திரமா வெளியேற்றும், மனமும் தான் துரத்தும். மஞ்சு காரின் பின்புறம் ஏறிக் கொண்டாள்.

யாழ் பறவை

“அவன் அப்ப இருந்த மனநிலையிலை, அந்தரிச்சுப்போய் அப்படி நடந்திருக்கலாம். உங்களைத் தேவையில்லையெண்டா, பேந்தும் பேந்தும் ஏன் அவன் உங்களைத் தொடர்பு கொள்ளவேண்டும்? பாவம் அவன்ரை மனிசி… அவள் ஒரு அப்பிராணி,” பராசக்தி மீண்டும் உபதேசம் செய்துவிட்டு, தனது மொபல்போனைத் திறந்து தங்கச்சுரங்கத்தில் எடுத்த படங்களைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினார்.