மகளிர் மட்டும்

இத்தனை நடக்கிறது.. இன்னும் என்ன முக்காடு வேண்டியிருக்கிறது?” என்று ரஜாக், பர்தாவைப் பிடித்து இழுக்க, பர்தா கழன்று ஒரு ஆண் நிற்பது தெரிந்தது. நீண்ட கருத்த தலை மயிர், வெளுப்பான சருமம், கருப்பு பேண்ட், சட்டை, இடுப்பைக் கச்சிதமாய்ப் பிடித்த பெல்ட், காலில் உயர் ரக காலணிகள் என்று கதா நாயகன் போல் இருக்க, “ஹோ”வென்ற இரைச்சல் பெண்கள் மத்தியில் எழுந்தது

கேள்வி-பதில்

நான் கண்விழித்தபோது, விண்களனிற்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தேன். விண்களன் எந்த வித அசைவுமின்றி நிற்பது போல் இருந்தாலும் அது வேகமாக வெற்றிடத்தின் ஆழத்திற்குள் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.  குறுகிய ஜன்னல் வழியே பார்த்தேன். அகண்ட கருமை நிற பிரபஞ்சத்தில் விண்வெளியின் எந்தப் பகுதி அது என்பதை என்னால் “கேள்வி-பதில்”

எதிர்மறை சோதனை வழக்கு

ஒரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிர், மற்றொரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிராவது எதைக் குறிக்கிறது? ஒரு கிரகம், தன் சாத்தியங்களுக்குள் ஒரு உயிரை உருவாக்க எத்தனை காலமெடுத்துக்கொள்கிறது? அந்தத் தயாரிப்பை, அந்த முனைப்பை, அதில் செலுத்தப்படும் உழைப்பை ஒரு தழுவு கருவி ஒரு  நொடியில் கடப்பது என்பது எதைக்குறிக்கிறது? இதன் பொருள் என்ன?

அடுத்த பரிணாமம்

“கடவுள் குறித்த ஆதாரம் காட்டுவதாகத்தான் அழைக்கப்பட்டோம். ஆனால், ஒரு பூஞ்சையைத்தான் பார்த்தோம். கடவுளையோ, அவரின் இருப்புக்கான ஆதாரமென்று எதையுமோ பார்க்கவில்லையே. பூஞ்சை தான் கடவுள் என்றெல்லாம் கதை விட மாட்டீர்கள் என்று இன்னமும் நம்புகிறேன் ” என்றாள் மட்டில்டா ஆர்வம் தாளாமல்.

துரதிருஷ்டம்

“எப்படி? எப்படி முடிப்பீர்கள்? 2120ல் நடந்த கொலை, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.  பகலில் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சிசிடிவிக்கள். அதை வைத்து வீட்டிற்கு யாரும் வரவில்லை, யாரும் வீட்டிலிருந்தும் வெளியே செல்லவும் இல்லை என்பது தெளிவு. ஆனால், ஜெய் கிஷோர் கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் கத்தியால் நடுமார்பில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கத்தில் கைரேகைகள் ஏதும் இல்லை.

அறுதி விடியல்

மரணம் வரை சென்றவன், பிழைத்தலின் இறுதிக் கட்ட சாத்தியங்களைப் பார்த்தும் அனுபவரீதியாகப் புரிந்தும் விடுகிறான். அந்த இடத்திற்கு பெரும்பாலும் வேறு எவரும் செல்வதில்லை என்பதே அவனுக்குச் சாதகமான அம்சமாகிவிடுகிறது. அந்தப் புள்ளியில் அவன் என்ன கற்றுக்கொள்கிறானோ,அந்தக் கல்வி, அந்த ஞானம் அவனுக்கு மட்டுமே சாதகமாக வேலை செய்யும் கருவியாகிவிடுகிறது. இல்லையா?

இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலைக் கணக்கில் கொண்டால், அந்தக் காலத்தின் குரங்குகளுக்கு, இன்றிருக்கும் மனித இனம் என்பது இந்த A2B கூண்டில் உள்ள எலிகள் போலத்தான். இல்லையா? இன்று இருக்கும் மனிதனை, அந்தக் குரங்குகள் எதிர்கொண்டிருந்தால், மனித இனம் இனவிருத்திக்கான வாய்ப்பின்றி அழிந்து போயிருக்கும், இல்லையா? ஒருவகையில், மனித இனத்தின் ஆண்களை புத்திசாலிகள் எனலாம். செயற்கையாகக் கருத்தரிக்கும் இடத்திற்கு  நகரும் வரை, அக்காலக் குரங்குகளுடன் இணைந்து பல்கிப் பெறுகி பொறுத்திருந்ததை,  வேறெப்படித்தான் சொல்வது? இப்படி யோசித்துப் பார்.

நவீன சிறைச்சாலைத் தத்துவம்

எனக்கு, நான் எப்பேற்பட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறேன் என்பது புரிந்தபோது தரை நழுவுவது போல் இருந்தது. இது போன்ற கிரகங்களில் ஒத்திசையாத தகவல் தொடர்பே (Asynchronous Communication) சாத்தியப்படும். எதைச் சொல்ல வேண்டுமானாலும், அதனைப் பதிவு செய்து அனுப்பவேண்டும். அப்படி அனுப்பப்படுகையில் அது சிகப்பு அதிர்வெண்வரையில் நீட்டிக்கப்படும் (Red shifted). தகவலைப் பெறுபவர் தங்களது கிரகிப்பான்களை (receiver) அதற்கேற்றார்போல் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

அடையாளத் தேர்வு

பாலச்சந்தரும், பார்வதியும் ஒருவர் மாற்றி ஒருவர் இரவெல்லாம் விழுத்திருந்து, வெழிலனுக்கு தேனீர் தந்து அவன் தேர்வுக்கு தயார் செய்ய உதவினார்கள். பாலச்சந்தர் தன் பங்கிற்கு மிக வினோதமான வழிமுறைகளைப் (algorithm) பயன்படுத்தி கேள்வித்தாள் தயார் செய்து தந்தார். அதிலிருந்து புதியதாக பன்னிரண்டு கேள்விகள் கிடைத்தது. அதற்கும் பதில்கள் தயார் செய்தான் வெழிலன். 

மனக்கணக்கு

“எனக்கா தொழில் நுட்பம் தெரியாது? பார்த்தாயா உன் கண் முன்னே வந்து நின்றுவிட்டேன். குவாண்டம் பிணைப்பு இணைப்பை (Quantum Entangled Connection) எனக்கும் பயன்படுத்தத் தெரியுமாக்கும். அதுமட்டுமல்ல, எனக்கும் அறிவியல் புரியும் கண்ணா. அதை நிரூபிக்கத்தான் இப்படி வந்தேன்.. ஹா ..ஹா” என்று இடித்துச் சிரித்தாள் புவனா.

சரோஜாதேவி புத்தகம்

மன்சூருக்கு ஏன் மல்லிகா மீது மட்டும் காம உணர்வு எழவேண்டும்? மல்லிகா வயதுடைய அவயங்கள் கொண்ட வனப்பான பெண்கள் இந்த விடுதியிலேயே இருக்கிறார்களே? அவர்களிடமெல்லாம் அவன் காமுறவில்லையே? அது ஏன்? பார்க்கப்போனால், இதே வாதத்தை பெண்கள் மீது காமுறும் ஆண்கள் எல்லோர் மீதும், அதே போல் ஆண்கள் மீது காமுறும் பெண்கள் எல்லோர் மீதும் வைக்கலாம். இல்லையா? ஒரு பெண் மீது காம உணர்வு கொள்பவனுக்கும் பிடிக்காத, அவனால் காம உணர்வு கொள்ள முடியாத பெண்களும் இருப்பது எதைக் காட்டுகிறது

சரியான வெகுமதி

ஆனால், கல்வித்தகுதி மற்றும் சான்றிதழ்கள் உள்ள ஒரு பணியாளருக்கு லக்ஸ் அதிகம் ஊதியம் தர வேண்டும். என் போன்ற கல்வித்தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் அற்ற ஒருவருக்கு அடிப்படை ஊதியம் தந்தால் போதும். அங்கே தான் அவருக்கான லாபம் இருக்கிறது. இது செவ்வாயில் அமையப்பெற்ற அரசாங்கத்தை அவர் ஏமாற்றும் விதம்.

ஏழு கடல், ஏழு மலை தாண்டி

அதுமட்டுமல்லாமல், சாபோர் இனம் உருவாகும் முன், ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டில் குகா என்றொரு இனம் இருந்தது என்றும் பதிந்திருக்கிறார். அந்தப்பதிவில், சாபோர் இனத்திற்கு முந்தைய இனமான குகாவின் மரபணுவில் அந்த வைரஸுக்கான எதிர்ப்பு சக்தி இருந்ததாகவும், குறித்திருக்கிறார். ஆனால், அந்த குகா இனத்தை அழித்ததே இப்போது வழக்கிலிருக்கும் சாபோர் இனம் தான் என்று சரித்திரம் சொல்கிறது. இந்தப் பின்னணியில், அந்த முந்தைய இனத்தை தற்போதைய சாபோர் இனமான நாம் அழித்திருக்கவே கூடாது

குப்பை

எப்படி வேண்டுமானாலும் அந்த உணர்வை அடையாளப்படுத்திக்கொள்ளலாம். எப்பி வயதில் சிறியவன். எங்களுக்குப் பிறகு தொழிலுக்கு வந்தவன். இன்னும் சொல்லப்போனால், அவனது துவக்க காலத்தில், தொழில் ரீதியிலான நுணுக்கங்கள் சிலவற்றை நாங்களும் கற்றுத்தந்திருக்கிறோம். நாங்கள் தெரிந்துகொண்டவைகளையே மிகவும் இளம் வயதில் தெரிந்துகொண்டவன், நாங்கள் கண்டுகொள்ளாத எதையோ கண்டுபிடித்துவிட்டான்.

காதல்

அப்படி இல்லை. திமிர்த்தனம் மீதான என் பார்வை வேறு. அறிவு இருக்கும் இடத்தில் செருக்கு இருக்கும். ஆனால், இந்த செருக்கு தான் ஒரு கடிவாளம் போல செயல்படும். உன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீ இத்தனை காலமும் கைபடாத ரோஜாவாக இருக்கிறாயெனில் அதற்குக் காரணம் அந்தக் கடிவாளம் தான். எனக்கு விர்ஜின் பயல்களைப் பிடிக்கும். தவிரவும், உன் போன்ற அதிபுத்திசாலிகளைக் கண்டால் இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் அளவிற்குப் பிடிக்கும். விளைவுகளைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. தவிரவும், இன்னும் முப்பது வருடம் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம். உனக்கும் என்னை விட்டால் வேறு மார்க்கமில்லை. பேசாமல் காதலிக்கலாமே?” என்றாள் காமினி தொடர்ந்து

ஆவரேஜ்

கவனியுங்கள். ஸீரீஸ் ஐ காலனி ஆக்கவிடாமல் தடுப்பது அதன் மிக மெல்லிய ஈர்ப்பு விசை. ஆனால் போக்குவரத்துக்கு அதுதான் கச்சிதமான தேவை. ஸீரீஸ் பூமிக்கும் சனி கிரகத்துக்கும் இடையில் சென்று வருமானால், அதன் மீது மனிதர்களுக்கு நீள் உறக்கக் குடுவைகளைக் கட்டமைக்க முடிந்தால் போதுமானது. ஈர்ப்பு விசை இல்லாதிருப்பதால், எந்த ஒரு கலனையும் கொண்டு ஸீரீஸ் மீது இறக்கி ஏற்றலாம். செவ்வாயைப் போன்ற கிரகங்களில் இது சாத்தியமில்லை. செவ்வாய் கிரகத்தின் அதிக ஈர்ப்பு விசைக்கு தரையிறக்கி, ஏற்ற நாம் அதிகமான எரிபொருளைச் செலவிட வேண்டி வரும். ஸீரீஸ்ல் அந்தப் பிரச்சனை இல்லை.”

அனாதை

”…சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.

கடவுளைத் தேடி

கிட்டத்தட்ட தன் அந்திமக்காலத்திலிருக்கும் அந்தச் சூரியனைச் சுற்றிவரும் அந்தக் கிரகத்தை ஆராய்ந்தபோது, சூரியனிலிருந்து அதன் தொலைவை வைத்துப்பார்க்கையிலும், ஒரு காலத்தில் கடல் இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை வைத்துப் பார்க்கையிலும், அந்தச் சூரியக் குடும்பத்தில் கடந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்திருக்கலாம் என்றும், அந்தக் கிரகத்திற்கு முன்பொரு காலத்தில் ஒரு நிலவும் இருந்திருக்க வேண்டும் என்றும் என்னால் ஊகிக்க முடிந்தது.

பேய்

ஹரி தன்னைச்சுற்றிப் படர்ந்து கிடந்த காட்டை பயத்துடன் கூர்ந்து கவனித்தான். பேய் பிசாசுகள் மீது அவனுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ஆனாலும், அந்தக் கணத்தை, அது தரும் உணர்வை, அவற்றின் கூட்டு பலனாக அவன் மனம் அடையும் மனக்கிலேசத்தை எவ்விதம் பகுப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.

ரகசியம்

ஆனால் நான் கடந்து போக நேர்ந்த ஆண்கள் தங்களின் கடன்களை அடைப்பதற்காய் பெண் தேடுபவர்கள். தினசரி செலவுகளுக்காய் பெண் தேடுபவர்கள். அழகான ஆண்கள் அறிவாய் இருப்பதில்லை. அறிவான ஆண்களிடம் அதீத அறிவே பிரச்சனையாக இருக்கிறது. அழகான ஆண்கள் முட்டாள்தனமாக இருக்கிறார்கள். விளையாட்டில் இருப்பவர்கள் விளையாட்டிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். பணக்கார இளைஞர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பணக்காரனாக இருந்து கடினமாக உழைக்கும் ஆண்கள் பெரும்பாலும் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள்.

யானை யானையாகும் தருணம்

நாங்கள் இப்போது பாதி மனித உடலுடனும், மீதி தாவர உடலுடனும் இருக்கிறோம். இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கான சாதகங்கள் அதிகம். உடலுக்கு தேவையான சக்தியை உடலில் இரண்டறக் கலந்துள்ள தாவரம் சூரிய சக்தியிலிருந்து பெற்றுவிடும். தாவர உண்ணிகளான மான்கள், ஆடுகள், மாடுகள் போன்ற தாவர உண்ணி விலங்குகள் எந்தத் தாவரங்களை உண்பதில்லையோ அந்தத் தாவரங்களின் விதைகளோடு எங்கள் மரபணுக்களைக் கலந்து பிறழ்வு செய்துகொண்டால் மட்டும் போதும். அந்தத் தாவரங்களாக எங்கள் உடலின் ஒரு பாதி இருப்பின், தாவர உண்ணிகள் எங்களை தவிர்த்துவிடும்.

கண்காட்சி

நான் பிறந்தபோது ஆக்ஸிஜனை சுவாசித்தேன். இப்போதோ நான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கிறேன். நான் என் எஞ்சிய வாழ்வை வெறும் ஒரு தாவரமாகவே கழிக்கக் கூட நேரலாம். என் வாழ்வின் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் விலங்காக இருந்து நிறைவேற்றினேன்? எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன்? நான் விலங்கிலிருந்து தாவரமானது இந்த பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கின் எந்தப் புள்ளியை முழுமையடையச்செய்ய இருக்கிறது?