ஆழி

ஹிமாலயம் என்பது இந்தியாவின் மேற்கு வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு பகுதி வரை சுமார் 2400 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் அற்புத சாம்ராஜ்ஜியம். வானம் தொட்டு நிற்கும் பனிமலைத் தொடர்களாலும் ஆழமான பள்ளத்தாக்குகளாலும் நிரம்பிய பூலோக சொர்க்கம். சுமார் அறுபத்தைந்து  மில்லியன் ஆண்டுகளுக்கு இந்து மகா சமுத்திரத்தில் அமிழ்ந்திருந்த “ஆழி”

ஒளியின் நிழல்

“ஆனால் அவர் மகன்களிடம் அடக்குமுறையை மட்டுமே கையாள்கிறார். அவர் நவீன காலத்தின் தொழில்களின் மீது பற்றிழந்து விட்டதால் அவரது மகன்கள் நவீனக்கல்வியை பெற அனுமதி மறுக்கிறார். அவர் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தலால் அவரது பிள்ளைகளும் அப்படியே செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட அவருக்கிருக்கலாம். ஹரிலாலும் மணிலாலும் சத்யாகிரகிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். கைதாவதிலிருந்து நிலத்தில் பாடுபடுவது வரை அவர் தந்தை விரும்பியதையே அவர்கள் செய்ய வேண்டும் என்று கருதுவது இந்த காலத்து பிள்ளைகளிடம் அதிகப்படியான எதிர்பார்ப்பு அல்லவா?”

முகத்துவார நதி

கடலோர நிலத்துக்காரனான அவன் காகேசம் கிராமத்தை நோக்கி பயணம் புறப்பட்டிருந்தான்.  அது அவனுடைய படுவூர் கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவிலிருந்தது. கடற்காற்று லேசாக மணலை கிளப்பிக் கொண்டு வீசியதில் கண்களை சுருக்கிக் கொண்டு நடந்தான். அணிந்திருந்த மேல்சட்டையில் காற்று புகுந்துக் கொண்டு உடலை உப்பலாக்கி காட்டியது. காய்ந்த “முகத்துவார நதி”

ஆடல்

“தென்னாப்பிரிக்காவில நாம பீனிக்ஸ் குடியிருப்பில இருந்தப்ப நீங்க, இன்னும் கொஞ்சம் நாள்ல நான் மனைவிங்கிற அந்தஸ்தை இழக்கப்போறேன்னு சொன்னவுடனே நான் பயந்தே போயிட்டேன். கிறிஸ்துவ முறைப்படி பண்ற கல்யாணம்தான் செல்லும்னு அரசாங்கம் சொல்லிடுச்சாம். அய்யோ.. இதென்ன கூத்து. சட்டத்துக்கு முன்னாடி வைப்பாட்டின்னு பேர் வாங்கறதை விட போராட்டத்தில கலந்துக்கிட்டு சிறைக்கு போனாலும் தப்பில்லேன்னு தோணுச்சு எனக்கு. நான் சிறையிலயே செத்துப் போயிட்டா எனக்கு சிலை வச்சு வழிப்படறதா சொல்லி சிரிச்சீங்க நீங்க”

அம்பையின் கதைகள்

வால்மீகியைப் போல அவளுக்கும் இராமாயணம் எழுத வேண்டும் என்று ஆசை. செந்துருதான் சீதை. சீதைதான் செந்துரு. தன் அனுபவங்களை தன் மொழியில் எழுத விருப்பம் அவளுக்கு. ”நான் எழுதிய ராமாயணம் ஒன்று போதாதா?“ என்கிறார் வால்மீகி. ஆண் அல்லவா? ”இல்லை இனிவரும் யுகங்களில் பல ராமன்கள், பல சீதைகள்” என்கிறாள் சீதை. ”நான் எழுதாத சீதையா?” வால்மீகியின் அகங்காரம் விடுவதாயில்லை. ”நான் அனுபவித்தவள், பலவிதமான அனுபவங்களை உள்வாங்குபவள்; என் மொழி வேறு” என்கிறாள் சீதை.

கனவு

தாத்தாவை பிரதியெடுத்தது போல நானும் சம்பாத்தியத்தில் விருப்பமுடையவனாக இருந்தேன். சொல்லப்போனால் என் கனவே அதுதான். மகிழ்ச்சியான கனவு. கனவு என்பதே எண்ணங்களின் தொகுப்புதானே.. எண்ணங்கள் மனதை மையமாக்கி எழுவதால், மனம்தான் கனவாகிறது என்பேன். அப்போதெல்லாம் என் எண்ணங்கள் வண்ணமயமாக இருந்தன. அதையொத்து கனவிலும் நினைவிலும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

அது

தேவகி, சண்முகசுந்தரத்திடம் நக்கலாக ஏதோ சொல்ல அந்த சனியன் எப்டியோ செத்து ஒழியிட்டும்… வுடு.. சண்முகசுந்தரம் தீர்ப்பெழுத.. அவனுக்கு மரணத்தண்டனை என தீர்ப்பெழுதும்போது இத்தனை சத்தமில்லை.. கமுக்கமாக.. காதோடு காதாக.. நீலத் திமிங்கிலத்தை போல ரகசியமாக.. எல்லாரும்.. எல்லோரும் எதிரிகள்தான்.. நான்.. நான் மட்டுமே நிஜம்.. அவனும் நிஜம்.. எங்களோட அன்பு நிஜம். என்னைச் சிறை வைத்து விட்டு அவனைக் கழுத்தறுத்துக் கொன்ற இவர்கள்தான் பொய். இவர்களை விட்டு விலக வேண்டும். விலகி எங்கோ செல்ல வேண்டும். ஏறி… மேலேறி.. மூன்று தளங்களைக் கடந்து மொட்டை மாடிக்கு வந்தும்… பத்தாது.. பத்தாது.. இன்னும் இன்னும் உயரம் என்றது அது தன் பெரிய வாயை அசைத்து.. அங்கிருக்கும் தண்ணீர் தொட்டியின் விளிம்பு.. விளிம்பு வரை.. அதற்கு மேல் வேண்டாமாம்.. விழக்கூடாதாம்.. ஆமா.. விழக்கூடாது.. எதிரிகளைக் கொல்ல வேண்டும்.. இப்போது எல்லாருமே நீலத் திமிங்கிலத்துக்குள்.. ஒளிந்து கொண்டு… என்னை.. அவனை.. வலுக்கட்டாயமாக கடவுளே.. கடவுளே..

மையம்

கடல், நீரையள்ளி தெளித்ததில் தரையோடு படிந்துக் கிடந்த மணல் காலடிகளை உள்வாங்கி தடமாக பதித்திருந்தது. ஃபாதர் தாமஸ்ஃபிலிப்புக்கு வளமையான பெரிய கால்கள் வேறு. அச்செடுத்தது போல இங்குமங்குமாக படிந்துக் கிடந்தன. இருள் விலகாத, பகல் பிரியாத நேரமது. இளங்காலை நேரத்துக் கடல் முதிய தாயைப் போல ஆதுரமாக அணைத்துக் கொள்ளும். அதன் அலைகள் பொக்கை வாயில் வழியும் கனிந்த சிரிப்பை போல கடலெங்கும் ததும்பி கிடக்கும். இந்த அனுபவத்துக்காகவே அவ்வப்போது அவர் இங்கு வருவதுண்டு. கடலும் அலைகளும் அதன் இறைச்சலும் வெற்றுக் காட்சிகளாக இன்று அவர் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தன. கடலையொட்டி அமைந்த புனித தேவாலயத்திற்கும் தாமஸ்ஃபிலிப்புக்கும் கிட்டத்தட்ட முப்பதாண்டுப் பழக்கம். அது அவரின் வயதில் நான்கில் மூன“று பகுதி. இத்தனை ஆண்டுகளும் பூசை..

ஆழம்

“எந்திரிடீ.. என்னமோ புர்ன்னு கெடக்க… மணியாச்சு பாரு..“ கைக்கு இரண்டாக ரப்பர் குடங்களை வைத்திருந்தாள் வரலட்சுமி. கைகளிலும் ரப்பர் வளையல்கள்தான். பெண் வாரிசு இவள் ஒருத்தியே என்பதில் கூடுதல் சலுகையாக கைக்கு பொன் வளையல் கிடைத்தது. முதலில் அடகுக்குப் போனது இவைகள்தான். பிறகு இரட்டை வடச்செயின்.. என வரிசையாக மூழ்கி விட இனி மீட்க முடியாது என்ற தளத்தில் தாலிக் கொடியை விற்று வெள்ளாமை செய்தான் நாச்சிமுத்து