ஒரு உளவியல் மருத்துவராக என்னால் இதை நம்ப முடியவில்லை என்றாலும் என் கண்கள் பார்த்து மூளை உணர்ந்து பதிவு செய்த அந்த ஒரு நொடிக் காட்சி உண்மை நிகழ்வு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி அவரை இன்னொரு முறை செய்து காட்டச் சொன்னேன். கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தேன். மீண்டும் பத்மாசனம். பாபா முத்திரை. ஏதோ புரியாத தமிழில் மந்திர முணுமுணுப்பு. வலிப்பு வந்தது போன்ற முகக் கோணல். இப்போது ஓரளவு தெளிவானது
Author: சசி
ஊழிப் பெருவெள்ளம்
ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொணடிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான்
நேர்காணல்
வேளச்சேரியில் நடுராத்திரி அரைமயக்கத் தூக்கத்தில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அவன் புரட்டு ஆசாமி இல்லையென்றால் சரவண பவன் வாசலில் ஆட்டோ அவனை விட்டுச் சென்ற காட்சி கண்டிப்பாக ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாயிருக்கும். அதன் மூலமாக ஆட்டோ நம்பரைக் கண்டுபிடித்து டிரைவரை தொடர்பு கொள்ள முடியுமே
மதுக்கூடம்
சார், உங்களுக்கு விஷயம் தெரியாதா? ரெண்டு நாள் முன்னாடி கடையில நடந்த ஒரு சண்டையில அந்த கவுன்சிலர் பையனும் அவனோட கூட்டாளிங்களும் சேர்ந்து தொரக்கண்ணு தலையில பீர் பாட்டிலால அடிச்சிட்டாங்க. மண்ட ஒடஞ்சு ரத்தம் கொட்டுச்சு. ஓனர் உடனே அவன பக்கத்துல இருக்குற நர்சிங் ஹோமில சேத்துட்டார். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரின்னா கேஸ் ஆயிடும்ல
பூனையும் கோமதிசங்கரும்
“உன் காதுல விழுந்த, நீ அலட்சியப்படுத்தின உரையாடல்கள், நீ கண்ணால் பார்த்து மனதில் பதிவு செய்யாத காட்சிகள், அலசிப் பார்க்காத சம்பவங்கள் இப்படி ஏராளமாக இருக்கும் உன் மூளையோட பதிவில். உன் மூளையில் கடந்த காலங்களில் பதிஞ்சிருக்கிற, ஆனால் நீ கவனம் செலுத்தாமல் இருந்த சில பதிவுகளை மறுபடி ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும்.
