ஸ்வாமிகளுக்கு அவர் தந்தையே ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதென்பதை மறுக்க முடியாது. ஸ்ரீ ராம ப்ரஹ்மம் ஸ்வாமிகளின் சிறு வயதிலிருந்தே அவருக்கு ராம நாமத்தின் ருசியை உணர வைத்து விட்டார் என்பது நமக்கு நன்றாக புலனாகிறது. ஸ்வாமிகள் இந்த உண்மையை தன்னுடைய முதல் கீர்த்தனத்திலேயே சூசகமாகவும் தெரிவித்துள்ளார்.
Category: இதழ்
பணங்காய்ச்சி மரம்
அப்பா நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு மட்டுமே ஏன் இந்த சோதனை? என் வாழ்வில் நான் அனைவருக்கும் துரோகம் இழைத்தது போல் உணர்கிறேன். நீங்கள் எனக்களித்த சொத்துக்களை பாதுகாக்காமல் கோட்டை விட்டது உங்களுக்கிழைத்த துரோகம்., ராதா கொண்டு வந்த நகைகளை அடகு வைத்து அதற்கு வட்டி கட்ட முடியாமல் தவிப்பது அவளுக்கிழைத்த துரோகம்
ஸ்ரீ ஹர்ஷ கவியின் நைஷத நூலில் தத்துவங்கள்
முதல்வர், ஒரு பொருளின் நிழலே இருட்டு என்பதையே ஆக்ஷேபித்தார். ஏனெனில் நிழல் அசையும். இந்த அசைவு நிழலின் தன் முயற்சியால் அல்ல. எந்த பொருளின் நிழலோ அது அசைந்தால் இதுவும் அசையும். தவிர நிழல் உள்ள இடத்தில் குளுமை போன்ற மூல உருவத்துக்கு இல்லாத குணங்களும் இருக்கும். அடுத்து ஸ்ரீதர் என்பவரும் இருட்டு என்பது ஒரு பொருளல்ல என்றார். ஆனால் இதற்கு ஒரு தனித்வமான வண்ணம்-கருமை உள்ளது. இது பொருளல்ல என்றால் இது சாத்யமில்லை. அதே சமயம் பொருளுமல்ல. இதை பரமாணுக்களால் உருவாக்க முடியாது.
கண்ணாடி ஷோகேஸ் – காற்றில் உருகும் கனவுகள்
ஒருகாலத்தில், பாலு காவேரி என்ற பெண்ணை காதலித்தான். அது இரண்டு குடும்பங்களுக்கும் இடையே புயலை கிளப்பியது; சண்டைகள், வாக்குவாதங்கள், உறவுகள் முறிந்தன. அந்தச் சமயத்தில், நடுவில் நின்று சமாதானம் செய்து, அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தவர் சுந்தரம் தான். அந்தக் காலத்தில்– அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்; “சுந்தரம் சொன்னார்” என்பதே முடிவாக இருந்தது.
1901-2025 நோபல் பரிசுகள் பற்றிய பிரதிபலிப்புகள்
அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1901ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த பரிசுகள், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியின் உயர்ந்த அங்கீகாரமாக மாறின. இயற்பியலுக்காக Wilhelm Conrad Röntgen, வேதியலுக்காக Jacobus H. van‘t Hoff, மருத்துவத்துக்காக Emil von Behring, இலக்கியத்துக்காக Sully Prudhomme மற்றும் அமைதிக்காக சர்வதேச redcross அமைப்பின் நிறுவனர் Henry Dunant மற்றும் அமைதி இயக்க தலைவர் Frédéric Passy ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமைகளை கௌரவிப்பதற்கான முன்மாதிரியை உருவாக்கினர்.
சுழல்
களவு போன வண்டியை சரியாய் இன்சூர் செய்து வைத்திருந்தோமே என்று அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் போனேன். அது நகரின் பிரதான லாரன்ஸ் சாலையில் இருந்தது. அங்கு ஒரு அம்மா நடுத்தர வயது இருக்கும். அவர்கள்தான் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளையிமுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஃபாரத்தை யெல்லாம் ஃபில் அப் செய்து கொடுத்தேன். ஆர் சி புக் செராக்ஸ் இன்சூரன்ஸ் ஒரிஜினல் எல்லாம் சமர்ப்பித்தேன்.
பின் நவீனத்துவம் – ஜப்பானியக் கழிவறைத் தொழில்நுட்பத்தின் மீதான ஒரு ஆய்வு
தொழில்நுட்பத்தில் மாத்திரம் வாழ்வின் உன்னதம் இல்லை என்பதை ஜப்பானியர்கள் மெல்ல உணர்ந்து வருகின்றார்கள். வேலை, வேலை என்று காலங்கழித்த முந்தைய தலைமுறைக்கும் வெள்ளி, வெளிர்மஞ்சள், கருநீலம் எனத் தலைமுடியை வண்ணமயமாக்கி வாழ்வின் மறுபக்கத்தை ஆராயும் இன்றைய தலைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது மறுக்கமுடியாத உண்மை. பொதுவில் பரபரப்பான வாழ்வை விட்டோடும், கலைகலையும் – வாழ்வையும் நேசிக்கும் பாங்கு அண்மையில் இவர்களிடம் தலைப்பட ஆரம்பித்திருக்கிறது.
கத்தி வீரன் கதை
ஓர் நாக்கு பூச்சியை போல இருந்த என்னை கண்டு அப்பா ஏன் ஓடினார் என்பது யாருக்கும் இன்னமும் புரியாத புதிர். இதெல்லாம் நான் ஏதோ மற்றவர்கள் என்னிடம் சொல்லி நான் உங்களிடம் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். எனக்கு சிறு வயதில் ஞாபக சக்தி மிகவும் அதிகம். இப்போதுதான் பொண்டாட்டியின் பிறந்த நாள் மறந்து தொலைக்கிறது. இந்த சிறு வயது சம்பவம் எல்லாம் அப்படியே தொல்லைக்காட்சியில் ரிப்பீட்டில் பார்த்தது போல இன்னும் நினைவிருக்கிறது.
கரிசல் பூமியின் இசைத் தெய்வம் – விளாத்திகுளம் சுவாமிகள்
நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு சுவாமிகள் மீது மிகுந்த மரியாதை உண்டு.கடம்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் பத்திரகாளி அம்மன் திருவிழாவில் நாதஸ்வர சக்கரவர்த்தியின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். விழா கமிட்டியாளர்கள் எப்படியாவது விளாத்திகுளம் சுவாமிகளையும் அழைத்து வந்து விடுவார்கள்.சுவாமிகள் எதிரில் அமர்ந்தால் பிள்ளையின் வாசிப்பு தனி தினுசாக இருக்குமாம். திருவாவடுதுறை என்னும் பூட்டைத் திறக்க விளாத்திக்குளம் என்கிற சாவி தேவைப்படுகிறது! எனக் கி.ரா.சுவைப்படச் சொல்கிறார்.
மலரிடுதல்
ஒரு வாழ்க்கை முடிந்துவிட்டது என எனக்கு அன்று புரியவில்லை. எல்லோரும் நினைப்பொழிவார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை. மெல்லிய அவ்வப்போது வந்துபோகும் நியாபகமாகத்தான் என்னில் எஞ்சப்போகிறாள் என்பதையும் அன்று நான் அறியவில்லை. இவ்வளவு கறாரான ஒரு நிகழ்வாக மரணம் இருக்க வேண்டுமா என இப்போது நினைத்துக்கொள்கிறேன்.
கவிதையில் வரலாற்றுணர்வு
பழைய மரபும், புதிய படைப்பும் ஒன்றின் மீது மற்றது ஏற்படுத்தும் தாக்கத்தைத் தமிழில் கம்பரைக் கொண்டு விளக்குகிறார் பேராசிரியர். ‘கம்பரைப் படிந்தோமானால் அவருக்கு முன்பு சென்ற அத்தனைக் கவிஞர்களின் படைப்புகளையும் அறியும் பேறு நமக்குக் கிடைத்ததாகும்’ என்று சொல்லும் பேராசிரியர், சங்கக் கவிதை, ஆழ்வார் பாசுரம், சீவக சிந்தாமணிக் காப்பியம் முதலான முன்மரபுகள் எல்லாம்
இறுதியே இயைவது ஆனால்
சங்க இலக்கியத்தின் பெண் சொல்கிறாள்… வாயால் நல்லதென்று சொல்கின்றேன், ஆனால் உடம்பு நல்லதில்லேன்னு காட்டுகிறது…. குடாகேசன் கண்கள் விரிய, குரல் துள்ள விளக்கினான். இயற்பியல் உனக்கு அப்படித்தான்… படிக்கிறேன்னு சொல்கின்றாய், ஆனால் உன் சோர்வான முகமும், தளர்ந்த தோள்களும் கஷ்டமா இருக்கிறது என சொல்லுது இல்லையா?, குடாகேசன் கேட்டான்.
கோயன் சகோதரர்கள் திரைக்கதை எழுத்தாளர்களாக: தனித்துவமான உலகங்களின் சிற்பிகள்
இந்த உள்ளுணர்வு சார்ந்த செயல்முறை, பிரதான திரைப்படத் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் வழக்கமான மூன்று-அங்க கட்டமைப்பிலிருந்து அவர்களை அடிக்கடி விலகிச் செல்ல வைக்கிறது. இவர்களுடைய திரைப்படங்கள் பெரும்பாலும் தொடர்ச்சியானதாகவும், சில சமயங்களில் இலக்கில்லாமல் அலைந்து திரிவது போலவும் அல்லது வட்ட வடிவமான கதையோட்டத்தையும் கொண்டிருக்கும். உதாரணமாக, ‘தி பிக் லெபோவ்ஸ்கி’ (The Big Lebowski) திரைப்படம், ஒரு சாதாரண ஆள்மாறாட்டத்திலிருந்தும், கறை படிந்த தரைவிரிப்பிலிருந்தும் தொடங்குகிறது.
கண்ணன் காட்டிய வழி
“உன் உயிர் நண்பன், மதனி அவனை சொந்தச் சகோதரனாகத்தான் கருதுகிறாள். நம் மகள் கிருஷ்ணை என்னை விட, ஏன் உன்னை விடவும் கூட அவனைத்தான் தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள். அவன் எப்படி நமக்கு துரோகம் செய்யத் துணிந்தான்? அவன் என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி என்று பீஷ்மரின் கீழ் போரிட்டிருக்க வேண்டும். முதல் நாள் போரில் அவன் பாண்டவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தால் போர் அத்தோடு முடிந்திருக்கும். நாம் இன்றும் நூற்றுவராக இருந்திருப்போம்”
தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
சின்ன முடிவுகள் முதல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் முடிவுகள் வரை. இன்று என்ன காபி குடிப்பது என்பது முதல் காலை உணவு என்ன உண்பது வரை. நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் குழப்பம் இருந்திருக்கவில்லை. அம்மா செய்வதுதான் காலை உணவு. இப்போது அப்படி இல்லை. பல இல்லங்களில் பலவகை சீரியல்களும் பிரெட் டோஸ்டா இல்லை பழரசமா என பிள்ளைகளைக் கேட்பதில் குழப்பம் ஆரம்பிக்கிறது. பழரசத்தில் ஆயிரம் வகை இருக்கும். இது ஒரு வகை பொருளாதார மேம்பாட்டைக் காட்டினாலும் முடிவெடுக்க குழந்தைகளைத் திணறடிக்கச் செய்கின்றன. நான் சொல்வது சற்றே பொருளாதாரத்தில் மேல்தட்டு குடும்பங்களை.
றெக்கை– அத்தியாயம் 6
வாய் வார்த்தைச் சண்டை இன்னும் தீவிரமான அடுத்த நிலைக்குக் கடந்தது. அழுகிய வாடை வரும் அந்தரங்க உறுப்புகளும் எப்படி எல்லாம் இருட்டிலும் ஆளொழிந்த பகலில் யார் யாரோடு எங்கே கள்ளக் கலவி செய்தார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் கூட்டிச் சேர்த்த பட்டியல் வெளியிடலுமாக கேட்க ரசமான நிகழ்ச்சி அங்கே அரங்கேற்றமாகிக் கொண்டிருந்தது.
ஃபுகு – மரணத்தின் சுவை
ஃபுகு உணவு மிக அதிக விலைகொண்டதாக இருக்கக் காரணம் அதைத் தயாரிக்கும் வழிமுறைகளும் அதன் பிரத்யேக சுவையும்தான். ஒரு கிலோ ஃபுகு 7-லிருந்து 10 அமெரிக்க டாலர் வரை விலை கொண்டிருக்கிறது. ஃபுகு அப்படியே பச்சையாகவும், சமைத்தும், ஆவியில் வேகவைத்தும், வாட்டியும், புகைத்தும், வறுக்கப்பட்டும், பொறிக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. ஃபுகுவின் சதை மட்டுமல்லால் அதன் துடுப்புகளும் வாலும் விரும்பி உண்ணப்படுகிறது.
சோ(வ்)லுக்குக் குட்பை
சியோலின் நவீன வாழ்க்கை முறை, ஷாப்பிங் மோகம், அழகு கலாச்சாரம், உணவு என அனைத்தும் ஒன்றிணைந்த இடம் மியோங்டாங். மாலையில் உணவுச் சந்தையாக அவதாரமெடுக்கிறது. ஆக, கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. இது ஒரு சந்தைத் தெரு மட்டுமல்ல, கொரியாவிற்குச் செல்லும் ஒவ்வொரு பயணியும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய இடமும் கூட!
பாபிநேனி சிவசங்கர்
உண்மையில் பெண்களிடம் வன்முறை நிகழும் போது புனிதத்தை இழப்பது பெண் மட்டும் தானா என்ற கேளிவிக்கான பதிலே இந்தக் கதை. ஒரு பெண்ணுக்கு மானபங்கம் நடந்தால், இல்லை, இல்லை, ‘மானபங்கம்’ என்ற சொல் சரியானதல்ல. மனிதனுக்கு ‘அபிமானம்’ இருக்கிறதே தவிர ‘மானம்’ எங்கே இருக்கிறது? ஒருவேளை இருந்தால் அது பெண்ணோடு கூட ஆணுக்கும் ஏன் இல்லை? இந்தக் கேள்விகள் கதாநாயகன் நரேந்திரனின் சொற்களில் வரவில்ல. ‘பாபிநேனி’ சிவசங்கரின் விமரிசனபூர்வமான விளக்கத்தில் உள்ளன
முடிசூட்டப்படாத ஆட்சியாளர்
அவரது வாழ்நாளிலே அவர் நிம்மதியாக இருந்த காலம் குறைவே. தந்தையிடம் வந்து சேர்ந்ததில் துவங்கி, இரத்த சொந்தங்களிடையே நடைபெற்ற கோர குருஷேத்திர யுத்தம் வரை அவர் பார்த்தது துரோகங்களும், பகையுமே. இருந்தும், அவை எதுவும் அவரை பாதிக்கவில்லை.
மொழி பெயர்ப்புக் கவிதைகள்- கு அழகர்சாமி
தொலைந்த உன் நினைவுகளை
கண்டுபிடித்த இரவு
அவற்றைக் கூட்டிச் சேர்க்கிறது உள்ளே-
வறண்ட குறுங்காட்டின் மீது
வசந்தம் கரவாய்க்
கீழிறங்கியது போல்,
🕊️ 2025 நோபல் அமைதி பரிசு — கேள்வி & பதில் தொகுப்பு (FAQ)
மரியா கொரினா மச்சாடோ யார்? அவருக்கு ஏன் நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது?
தகவல்: வெனிசுலாவில் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்தும் முக்கிய தலைவி.
கிண்டல்: மேற்குலகத்திற்கு பிடிக்காத ஆட்சிக்கு எதிராக நின்றதால் பதக்கம் கிடைத்தது.
2025 அமைதிக்கான நோபல் பரிசு
சிதைந்த ஜனநாயகத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கை இந்த 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. சில நேரங்களில் அமைதிக்கான பரிசு அமைதியின் நிறைவேற்றமல்ல; மாறாக அது அறத்திற்கான போராட்டத்தின் அங்கீகாரம். அதன் குரலாக இம்முறை வெள்ளையாடை அணிந்த ஒரு பெண்ணின் “2025 அமைதிக்கான நோபல் பரிசு”
ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்
பேரழிவின் கலை இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் (László Krasznahorkai)க்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி மற்றும் இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது. அவரது படைப்புகள் நேர்த்தியான முடிவுகளை “ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்”
வேதியியல் நோபல் பரிசு 2025
நவீன வேதியியலை ஆராய்வதற்கான புதிய அறைகள் ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), ஓமர் எம். யாகி (Omar M. Yaghi), மற்றும் சுசுமு கிடகாவா (Susumu Kitagawa) என்ற மூவரின் ஆய்வுகள், பலகாலமாக கருதி வந்த “இயற்கையானது நிலைத்தன்மை காரணமாக நுண்துளைகள் கொண்ட பொருட்களை விட அடர்த்தியான பொருட்களையே “வேதியியல் நோபல் பரிசு 2025”
இயற்பியல் நோபல் பரிசு 2025
விஞ்ஞானிகள் எவ்வாறு குவாண்டம் கோட்பாட்டை யதார்த்தமாக மாற்றினார்கள் இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு, குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் (Quantum Mechanical Tunneling) என்ற அடிப்படை கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது மேக்ரோஸ்கோபிக் (பெரிய அளவிலான) குவாண்டம் டன்னலிங் மற்றும் மின்சார சுற்றுகளில் ஆற்றல் குவாண்டைசேஷன் (energy quantization) “இயற்பியல் நோபல் பரிசு 2025”
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025
இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்புகள் அக்டோபர் 6 முதல் 13 வரை நடைபெறும். அனைத்து பரிசு அறிவிப்புகளும் தமிழில் இங்கே — சொல்வனம் — தளத்தில் பகிரப்படும். பரிசுகள் குறித்த விரிவான தகவல்களும் இங்கே சொல்வனத்தில் வெளியிடப்படும். நமது உடலை ஒரு பரபரப்பான நகரமாக கருதுவோம். அங்கு “உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2025”
ஆறாவது லார்ஜ்
கதிர்வேலனின் கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்லாமல் அப்பா இப்படித்தான் அதிரடியாகப் பேசி அவனை வாயை மூட வைப்பார். இருந்தும், கதிர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைக் கிடுக்கிப்பிடியான கேள்விகளோடு திணறடிப்பான். மாறாக இளங்கோவை அப்பா சர்வ சாதாரணமாக வாயடைத்துவிடுவார்.
வாக்தேவி துதி
கடினமான கற்களும்
நோகக் கூடாதெனக் கருதி
புல்லும் நலுங்கிடாத மெல்லடி
வைத்து நடந்த நாமகளே
மோப்பக் குழைந்திடும்
என் மனதைப் பற்றி எண்ணாமல்
விரைவடி வைத்து மறைந்ததேன் தேவி
நட்சத்திர இரவு
அந்த நிசப்தம் அவன் காதுகளில் ஒலித்தது. மௌனமும் ஏதோ சொல்கிறது என்பதை அவன் உணர்ந்தான். மொழிக்கு தான் அர்த்தம் உள்ளதா என்ன? மௌனங்களும் அர்த்தங்களால் நிரம்பியுள்ளது. இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் ஒரு ஆழ்ந்த மௌனம் போல. சொல்லப்படாத உணர்வுகள், கேட்கப்படாத கேள்விகள், கிடைக்காத பதில்கள் என அனைத்தையும் அந்த மௌனம் சுமந்து நிற்கிறது
மூலமும் உரைகளும்
வள்ளுவர் கூற்றை முந்தைய இலக்கியங்களும் பிந்திய நூல்களும் முன்மொழிந்துள்ளன அல்லது பின்மொழிந்துள்ளன என்பது. இது நாலு சீட்டும் நானூறு கோடியும் கையடையாகப் பெற்றுக்கொண்டு கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் சிறுமைகளை இதர உறுப்புக் கட்சிகள் ஆதரிப்பதைப் போன்ற இழிதகைமை அல்ல.
மாதவரே…
ஒரு மனிதனானவன் அவனது ஸ்துால உருவம், புலனுணர்ச்சி, சிந்தனை, சுபாவங்கள், அறிவு ஆகியவற்றின் தொகுதியாக இருக்கிறான். ‘நான் இருக்கிறேன்’ என்கையில் மனிதனால் குறிக்கப்பெறும் அகங்காரம் ஸ்கந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பொருள் அல்ல. ஸ்கந்தங்களின் கூட்டுறவினாலேயே அந்த ‘நான்’ தோன்றுகிறது. மானுடனின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தனித்த ஆன்மா என்ற எதுவுமில்லை. ஒரு பொருளையும் அதன் குணத்தையும் நாம் நம் கருத்தால் பிரித்து பார்க்க முடிகிறது. ஆனால் பிரத்யட்சத்தில் அவ்வாறு பிரிக்க முடியாது.
கிங் காங்
இந்தப் படத்தின் திரைக்கதையைத் தயார் செய்த கூப்பர், தனது நண்பர் டீலோஸ் (Delos W. Lovelace) என்ற எழுத்தாளரைக் கொண்டு தான் உருவாக்கி இருக்கும் கிங் காங் திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுத வைத்தார். இந்த நாவல் கிங் காங் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பு பதிப்பிக்கப்பட்டது.
அடுத்த பரிணாமம்
“கடவுள் குறித்த ஆதாரம் காட்டுவதாகத்தான் அழைக்கப்பட்டோம். ஆனால், ஒரு பூஞ்சையைத்தான் பார்த்தோம். கடவுளையோ, அவரின் இருப்புக்கான ஆதாரமென்று எதையுமோ பார்க்கவில்லையே. பூஞ்சை தான் கடவுள் என்றெல்லாம் கதை விட மாட்டீர்கள் என்று இன்னமும் நம்புகிறேன் ” என்றாள் மட்டில்டா ஆர்வம் தாளாமல்.
யூகான் – ஒரு ஆர்க்டிக் வாழ்க்கை முறை
குளிர், அனைத்து கனேடியர்களுக்கும் பரிச்சயம். ஆனால், வெறும் 2 மணி நேர வெளிச்சம் என்பது ஒரு ஆர்க்டிக் அம்சம். நீண்ட, இருண்ட குளிர்காலத்தில், வீட்டில், பல பிரத்யேக மின் விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இவை அவர்களுக்கு சூரிய ஒளி தரும் Vitamin D -ஐ கொடுக்கிறது. வீட்டிற்குள் பிரகாசமாக வைத்திருப்பதால், அவர்களின் மனநிலையும் ஓரளவிற்கு சரியாகிறது. சூரிய ஒளியின் மிக முக்கிய ஒரு அம்சத்தை, யூகான் பயணம் கற்றுத் தந்தது.
மருதத் திணை
அவ்வையாரின் இன்னொரு குறுந்தொகைப் பாடலில் பரத்தை தலைவன் மீதான தன்னுடைய இறுக்கமான பிடி பற்றிய நம்பிக்கையில் இவ்வாது பேசுகிறாள்: ‘தலைவனை நான் கவர்ந்து கொண்டதாகப் புறம் கூறும் தலைவி, மகளிர் ஆடும் துணங்கைக் கூத்துக்கு வந்து பார்க்கட்டும். தலைக்கை எனக்குத் தந்து தலைவன் ஆடும் போது, யார் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரிந்து விடும்.’
அவர் அவர் எச்சத்தால் காணப்படும்
“உன்னை மாதிரி எல்லா காபிடலிஸ்ட்களும் இருந்தா, மார்க்ஸ் ‘டாஸ் காபிடல்’ எழுதி இருக்க மாட்டார். இப்ப… ‘வென்டிஸ்’ல வேலை செய்யறவன் அதிக சம்பளத்துக்கு ‘மெக்டனால்ட்ஸ்’ போனா தொழில் ரகசியத்தை கடத்திண்டு போயிடறான்னு அதைத் தடுக்கலாம். அது மாதிரி இன்னும் பல வேலைகள். நாங்க இருக்கற கட்டடங்களை மெய்ன்ட்டெய்ன் பண்ணற ஆட்கள் கூட சுலபத்தில வேலை மாற முடியாது.
இப்படித்தான் இப்பாடலை நான் கேட்டேன்
மொத்தத்தில் இந்தப் பாடலின் ரிதம், கடந்த காலத்தை இடத்தை உணர்த்தும் காட்சிப் படிமங்கள், ஒரு கவிதை மெட்டாய் மலரும்போது நிகழும் அற்புதம், இது உருவாக்கும் ஆதரவற்ற தனிமை, கையறு நிலை, சரணடைதல், சொல்லும் பொருளும் இயைந்து முயங்கியதில் கிறங்கிய இடங்கள், பாடிக்கொண்டே வரும்போது இசைக்கலைஞர் ஏற்படுத்தும் மெளனவெளி, ஏற்ற இறக்கங்கள், சிறியது பெரியதாகப் பாடுதல், சில இடங்களில் துரிதகதி மற்றும் குறுங்கமகங்கள் போன்றவை எல்லாமே ஒரு சரியான கலைச் சேர்மானத்தில் புதிய ஒன்றாக மாறியுள்ளது கவிதை.
கம்பளிப் பூச்சி
எரிப்பது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அந்த மரத்தின் எச்சங்களை முற்றுமாக அழிப்பது முக்கியம். அதன் கதை முடிந்து விட்டது. அதற்கு எரித்தல் ஒரு சுலபமான வழி அவ்வளவுதான். இதைக் கணேஷுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியுமா?
லாவண்யா சத்தியநாதன் கவிதைகள்
நான் மகிழும்படி
என் வாழ்க்கையில்லை.
நான் உவக்கும்படி
நான் வாழும் உலகமில்லை.
குறை யார் மீது?
என் மீதா? உலகின் மீதா?
விடை தெரியாத கேள்வி ஒன்றை
தலைகனக்க சுமந்துகொண்டிருந்தேன்.
திறந்து விடு
வெறும் காலோடு இருவரும்தான் ஒன்றாக ஓடினார்கள். ஓடும்போது சகினாவின் துப்பட்டா கீழே விழுந்தது. அதை எடுக்க அவன் குனிந்தபோது, அவள் அலறினாள், “அப்பா, போகட்டும் விடு!” ஆனால் அவன் துப்பட்டாவை எடுத்துக் கொண்டான். அந்த நினைவு வந்தவுடன், தன்னுடைய மேலங்கியின் பையில் கையை விட்டு அதிலிருந்த துப்பட்டாவை வெளியில் எடுத்தான். துப்பட்டா அவனிடம்தான் இருக்கிறது — ஆனால் சகினா எங்கே?
கு. அழகர்சாமி கவிதைகள்
கைகள்
என் முகங் காட்டுவது போல்
கண்ணாடி
என் முகங் காட்டுவதில்லை-
ஏனென்றால்
முகங் காட்ட,
வருடிக் கைகள்
என் முகத்தை ஸ்பரிசிப்பது போல்
கண்ணாடி ஸ்பரிசப்பதில்லை.
சால்மோனெல்லோசிஸ்
சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால் 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.
வ ஸ்ரீ கவிதைகள்
இது எழுதும்நேரம்.
கபாலம் பிளந்து
கவிதை கொப்புளிக்கும்.
அமைதியின் வளைந்த வழி அரித்து
கடல் ஆர்பரிக்கும்.
சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்வான்.
மேகங்களின் வெள்ளையை
அலைகள் விழுங்கும்.
சுவரில் தொங்கிய படம்
“என்னடி? என்னடி அங்கே வந்து வேஷம் போடுறே? கிளிக்குச் சொல்லிக் கொடுத்த மாதிரி சொன்னாலும் அங்க வந்து அந்த அழுகை அழுவறே? இந்த சான்ஸ் மட்டும் கை நழுவிப் போயிருந்தா, அங்கேயே உன்னை வெட்டிக் கூறு போட்டிருப்பேன்” என்று உறுமியவன், அவள் தலை முடியைப் பிடித்து பலமாகப் பின்னால் இழுத்தான்.
மரங்களின் மர்மங்கள்: பில்லியன் உயிர்களின் கதை
உயிர்களின் மிகப்பெரிய களஞ்சியமாக கருதப்படும், உயிருள்ள மரங்களைக் கொண்ட காடுகள் பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளன. மேலும் அவற்றின் தண்டுகள், கிளைகள் மற்றும் வேர்கள் அனைத்தும், விலங்குகள் மற்றும் மனிதர்களை விடவும் அதிக கார்பனைத் தாங்கியுள்ளன. இந்த மர உயிர்த்திணிவு (biomass) வெறும் செயலற்ற சேமிப்பு இடமல்ல, இது ஒரு மாறும் ஆற்றல் மையமாகும். வளர்ச்சிக்கு எரிபொருளாக நீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சர்க்கரைகளை அதன் நரம்புகள் வழியாக செலுத்தப் படுகிறது.
அந்தக் கீழ்நிலைப் பெண் பணியாளர்
அவள் உடலுக்குச் சாப்பாடு தேவையாக இருந்தது; ஆனால் வேறு ஏதோவும் தேவையாக இருந்தது —அன்பு, வாத்சல்யம்— மனதுக்கும், உடலுக்கும் தேவைப்பட்டன. அந்தப் பாட்டியிடமிருந்து அவையும் அவளுக்குக் கிடைத்தன. அவளுடைய இடத்தில் வேறொருவர் இருந்தால், அந்த நிறைவேற்றத்தின் விளைவுகள் முழுமையாக வெறுக்கத் தக்கவை என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் ஒருவர் பசியால் வாடும் போது, ஒருவர் விஷம் கலந்த உணவு தந்தால் அதைச் சாப்பிட்டு இறப்பது பரவாயில்லை.
உண்மையைத் தேடி
ன் புரிதல்கள், நம்பிக்கைகள், இவற்றை அவன் சரி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே? அவன் சிந்தனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சீரற்ற குணத்தை சாதியா வெறுக்கிறாரோ, அதை நேர்மை என நான் உணர்கிறேன். கீழ்ப்படிதல் என்பது சிறந்த குணம் என்று மதங்கள் சொல்லக்கூடும்-ஆனால், அது அறிவுத் துறைக்குப் பொருந்துமா? ஏதோ ‘வெளிப்பாடுகளினால்/ உபதேசங்களால்’ சிந்தனை முன்னேறாது-அது கடவுளிடமிருந்து வந்தாலும், அது உனக்கு ஆன்ம விடுதலை தருவேன் என்று உறுதி கூறினாலும்.
றெக்கை– அத்தியாயம் 5
தீனி மேசையில் வழுக்கு மரத்தட்டில் நான்கு கோழி முட்டைகள் ஜாஜாவை வரவேற்கக் குறுகுறுப்போடு காத்திருக்கின்றன. கூடவே வேகவைத்த மொச்சை, ஒரு பெரிய துண்டு ரொட்டி. பெயர் விளங்காத, கோழிக் கழிசல் போல் ஏதோ ஒரு வஸ்து.. ஒரு வாழைப்பழம். ஐரிஷ் ப்ரேக்ஃபாஸ்ட் என்று ஓநெல்லி கிழவியம்மா உண்டாக்கி அனுப்பியது. கிழவியம்மாவின் உதவியாளினி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.
ஒரு அமெரிக்க ஒடிஸி: ஓ பிரதர், வேர் ஆர்ட் தௌ? (2000) இல் கட்டுக்கதை, இன்னிசை மற்றும் கலாச்சாரக் கலவையின் சிம்பொனி
கோயன்களின் ஹோமரின் ஒடிஸி யை மாற்றியமைப்பதில் விளையாட்டுத்தனமான, கிட்டத்தட்ட அலட்சியமான அணுகுமுறை, தழுவலின் தன்மை மற்றும் கிளாசிக் நூல்களின் கலாச்சார எடை குறித்த ஒரு பின்நவீனத்துவ வர்ணனையாக செயல்படுகிறது. காவியத்தை அமெரிக்க தெற்கிற்கு மாற்றி, பிராந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் இசையுடன் அதை உட்செலுத்துவதன் மூலம், அவர்கள் ஒரே நேரத்தில் அசலை மதிக்கிறார்கள் மற்றும் மர்மத்தை நீக்குகிறார்கள்;
