புவிக்கோளின் கனிமவளம்

This entry is part 7 of 7 in the series பூமிக்கோள்

இந்த மூன்றாவது கோளில் (புவி ) என்ன அதிசயம்? அதன் உடன் பிறப்புகளின் வளர்ச்சிப் பாதையை விட்டு விலகி வியத்தகு முறையில் பிரிந்து செல்வது ஏன் ? தண்ணீர் தான் காரணம் என்பது உங்கள் இனிய அழகிய அனுமானம்.
நீரில்லாத கோள்களில் உருவாக முடியாத பல்வேறு புதிய கனிமங்கள் இக்கோளில் உருவாக முடிகிறது. …இங்குள்ள அபரிமிதமான கால்சியம் கார்போனேட் (கால்சைட் என்னும் கனிமம் ) பெரும்பாலும் கோளில் வாழ்ந்த உயிரினங்கள் உருவாக்கியது எனத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாகிலும் உயிரினப் பயன்பாடு இல்லாத கால்சைட் உருவாதலைக் கண்டிருக்கலாம். …இவ்வளவு கால்சைட் பாறைகள் உருவாகத் தேவையான உயிரினங்களை சாத்தியமாக்கியது இங்குள்ள பெருங்கடல்களே என்று நீங்கள் அனுமானிக்கிறீர்கள்.

டால்கம் பவுடர்

This entry is part 23 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

டால்க் (talc) என்பது மெக்னிஷியம் சிலிகேட் கலந்த களிமண்ணாக இயற்கையில் கிடைக்கிறது. (அட, களிமண்ணையா முகத்தில் இத்தனை நாள் பூசி அழகுபார்த்தோம்?) அத்துடன், சோளப் பொடியையும் கலந்து டால்க் உருவாகிறது.

ஓஸோன் அடுக்கில் ஓட்டை

This entry is part 13 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

வெளியேறிய குளோரின் அணு ஓஸோன் மூலக்கூறுடன் வினைபுரிந்து, ஓஸோன் மூலக்கூறை மீண்டும் ஆக்ஸிஜன் மற்றும் குளோரின் மோனாக்ஸைடாக மாற்றிவிடும். வெளியேறிய ஆக்ஸிஜனுடன் குளோரின் மோனாக்ஸைடு மீண்டும் வினைபுரிந்து, இன்னோர் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் குளோரின் அணு உருவாகும். ஒரு குளோரின் அணு ஒரு லட்சம் ஓஸோன் மூலக்கூறுகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது.

லு ஷாடலியெ கோட்பாடு

அகத்தியர் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் சீர்காழியாரின் குரலில் ‘உலகம் சமநிலை பெறவேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்’ என்னும் அழகான பாடல் வரும். அந்தப் பாடல் படத்தில் வரும் இடம் நமக்குத் தெரியும்தானே. கயிலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்கையில் எல்லாரும் வடபகுதிக்குப் போய்விட வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்கிறது. அந்தச் சமநிலையை மீட்க அகத்தியரை, நானே பொதியை மலைக்கு ஹனிமூன் வருகையில் காட்சி தருகிறேன் எனத் தாஜா செய்து அனுப்பி வைக்கிறார். அவரும் பொதியைக்கு வந்து சமநிலையை மீட்கிறார். ஆக ஒரு சமநிலையில் ஒரு மாற்றம் உருவாகும்போது, அந்தச் சமநிலையானது, மாற்றத்தை எதிர்த்து நகர்கிறது, தன் சமநிலைத்தன்மையை மீட்டெடுக்க முயல்கிறது. இதைத்தான் வேதியியலில் லு ஷாடலியெ கொள்கை என்கிறார்கள்.