ஒருவன் ‘பயப்படாதே .உன் பெயர் சகினாவா ?’என்றான்.அதைக் கேட்டு அவள் முகம் வெளுத்தது. தாங்கள் யார் என்று அவர்கள் சொன்ன பிறகே தான் சிராஜுதீன் மகள் சகினா என்று ஒப்புக்கொண்டாள் .
இளைஞர்கள் அவளுக்கு அன்பு காட்டினார்கள்.உணவும் பாலும் கொடுத்து ட்ரக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய ஜாக்கெட்டை கொடுத்து போர்த்திகொள்ளச் சொன்னான்.கைகளால் மார்பை மறைத்து கலவரமடைந்த நிலையில் அவள் நின்றதைக் கண்டு மனமிரங்கி -துப்பட்டா இல்லாதது கண்ணியக்குறைவென்ற உணர்வோடு அவதியுற்றாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.