வ ஸ்ரீ கவிதைகள்

இது எழுதும்நேரம்.
கபாலம் பிளந்து
கவிதை கொப்புளிக்கும்.
அமைதியின் வளைந்த வழி அரித்து
கடல் ஆர்பரிக்கும்.
சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்வான்.
மேகங்களின் வெள்ளையை
அலைகள் விழுங்கும்.

வ ஸ்ரீ கவிதைகள்

கடலைப் பார்த்தே பல காலமாச்சு.
மணலில் படுத்தது அதற்கும் எப்பவோ.
இப்போதும் கடல் உண்டு,
மணல் உண்டு.
காட்சிப் பொருளாய் எல்லா
மனிதருமுண்டு.
ஒன்றாய்க் கிளம்பி
ஒரு சேர ஒரே பயணம் செய்து
சிலரைப் பார்த்து, சிலரைத் தழுவி
சிலரை மிதித்து, சிலரைப் பயந்து
பல கோடியைப் பற்றிக்
கூடப் பறப்பவர் என்ற நினைப்பு
கொஞ்சமும் இன்றி

வினை முடித்தன்ன இனிமை

’நாம் செய்ய வேண்டிய வேலை என்ன’ என்பது நமக்குத் தெரியும். பல சமயம் நாம் அதைக் கவனிப்பதில்லை. கவனமின்மையும், அசிரத்தையும், பயம், இன்பம் துய்த்தல் போன்ற உந்துதல்களும் நம் கண்களை மறைத்து விடுகின்றன. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் அது தன்னைக் காட்டிக் கொள்ளும். அலை பாயும் மனம், அதைக் காணவொட்டது தடுக்கும். எனவேதான் அமைதி முக்கியம். செய்ய வேண்டிய வேலை சரியான வேலையாகவும் இருக்க வேண்டும்.

என்னுடைய கடவுள் – கவிதைகள்

பேனாதான் எழுதுகிறதென்றெண்ணி
அதைப் பற்றிப் பெருமைப்பட்டோம்
ஆனாலும் அஃதொரு கருவி மட்டும்தானென ஐயமற அறிந்தற்பால்
வீணான உபசாரமின்றி
விருப்பு வெறுப்புமின்றி