ஓ நளனே! அவள் ஒரு தவறும் செய்யவில்லை. அரசனே, அவள் உன்னையோ, உன் உறவு மக்களையோ, குற்றம் சொல்லவும் இல்லை, எதையும் விட்டுக் கொடுக்கவும் இல்லை. மூன்று ஆண்டுகளாக உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறாள். யோசித்து யோசித்து உன்னை உசுப்பி எழுப்பவே இப்படி ஒரு செய்தி உன் காதில் விழச் சொல்லியிருக்கிறாள். நாங்கள் சாட்சி
Tag: ஜானகி க்ருஷ்ணன்
தேரோட்டியான நளன்
மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். ‘ஒரு வேளை அவளால் தாங்க முடியாமல் போயிருக்கும். அல்லது என்ன உசுப்பி எழுப்பவே கூட செய்திருக்கலாம். ஆ! வேறு விதமாக விதர்ப ராஜ குமாரி நினைத்திருந்து என்னை விலக்கி விட்டால் என்ன செய்வேன். நான் அவளுக்கு இழைத்த துரோகத்தை விடவா? என் பாப செயல்கள், அறிவில்லாமல் நடுக் காட்டில் கை விட்டது – இவைகளை எந்த அளவு தான் பொறுக்க முடியும், உலகில் சாதாரண பெண்கள் செய்யலாம், இவளுமா?’
நளனும் கார்கோடகனும்
நளனும் நடந்தான். ஆனால் பத்தாவது காலடியில் அந்த நாகம் அவனைக் கொட்டியது. உடனே நளனுடைய உருவம் மெள்ள மெள்ள மாறியது. அந்த நாகம் தன் இயல்பான உருவை எடுத்துக் கொண்டது, ஆனால் நளன் தன் இயல்பான உருவை இழந்தான். கார்கோடகன் சொன்னது: நள மகாராஜா, உன் அழகை தான் இழந்தாய். வருத்தப் படாதே. அந்த கொடியவர்கள் உன்னை அடையாளம் காண முடியாது. உன்னை ஏமாற்றியவர்கள் இன்னமும் உன்னைத் தேடுகிறார்கள்.
தஞ்சம் புகுந்த தமயந்தி
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து யோசித்து பார்க்கிறேன் – என்ன தவறு, எங்கே யாருக்கு செய்தேன். அருமையாக செல்வச் செழிப்பில் வளர்ந்தேன். இந்த அளவு என் வாழ்க்கை பந்தாடப் படும் வகையில் யாருக்கும், மனம், சொல், உடலால் எந்த துன்பமும் இழைத்ததில்லையே. அந்த லோக பாலர்கள் வந்து என் சுயம் வரத்தில் கலந்து கொண்ட சமயம் அவர்களை நிராகரித்தேனே, அது அவ்வளவு பெரிய குற்றமா.?
பிரிந்து சென்ற நளன்
நளனின் உடலில் இருந்து அவனை ஆட்டுவித்த கலி அரசனை விடுவானா? அவளை ஏறிட்டு பார்த்த அரசன் நளன், ஒரு வார்த்தையும் பதில் சொல்லாமல், திரும்ப ஆட்டத்தில் முனைந்தான். நாட்டு மக்கள் மிக்க வருத்தத்துடன் திரும்பினர். யுதிஷ்டிரா! அந்த புஷ்கரனும், நளனும் தொடர்ந்து பல மாதங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். பழைய நளனுடைய நற்குணங்கள் வெறும் பேச்சு பொருளாக ஆயிற்று.
ஜானகி க்ருஷ்ணன் – அஞ்சலி
Curiosity and Creativity defined her. Whim also played a big part in her decisions. She learnt Kannada because my sister moved to Bengaluru and Spanish, just for fun. Perusing online English, Tamil and Kannada news outlets was part of her daily routines. She was also fond of good movies and TV shows, often getting involved with the story. She had choice epithets, especially for the villains in the show.
நளனுடைய உபாக்யானம் என்ற பகுதி, மஹா பாரதத்திலிருந்து
யார் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நல்ல பண்புள்ளவராகத் தெரிகிறது. இந்த உள்ளறை வரை வரத் துணிந்த நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம். இந்த பகுதி பலமான கட்டுக் காவலுடன் கூடியது எப்படி உள் நுழைந்தீர்கள்? அரசனின் கட்டளையை யாரும் மீறவும் துணிய மாட்டார்களே.
சின்னப் பையன்
சட்டென்று அம்மா புடவையை எடுத்து பள்ளத்தில் வீசினான். பையா, இதை கெட்டியாக பிடிச்சுக்கோ, நான் மேலே இருக்கேன்— யாராவது வந்தால் உதவிக்கு கூப்பிடலாம். சுற்றும் முற்றும் பார்த்தான். வகுப்பு மாணவர்கள் சிலர் வந்தனர். நானும் விழாமல் இந்த புடவையுடன் சிறுவனை இழுத்து மேலே கொண்டு வரும் வரை என் காலை அழுத்தி யாராவது கெட்டியாக பிடிச்சுக்கோங்கோ. அந்த சிறுவர்களும் உடனே புரிந்து கொண்டு அவன் கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டனர்.
தமயந்தியின் ஸ்வயம்வரம்
தயக்கம், பயம், செய்வதறியாத திகைப்பு, குழப்பம் இவைகளுடன் பாவம் அந்த பெண் என்று இரக்கமும் வந்தது. போலியையும், உண்மையையும் எப்படி பிரித்தறிவாள்? நேரடியாக அந்த போலி நளன் களையே அடையாளம் காட்டி இருக்கலாமோ, அல்லது அவர்களையே வேண்டி விட்டுக் கொடுக்க செய்திருக்கலாமோ என்று தானே பல வித குழப்பங்களுடன் இருந்தாள். உண்மை நளன் என்ன நினைப்பான், இந்த பெண் இதன் பின் என்னை நம்ப வேண்டுமே, நளனே ஏதேனும் சைகையாக சொல்லக் கூடாதா?
நள சரித்திரம்
தன் தயக்கத்தையும், வெட்கத்தையும் கடந்து வந்து, தன் விருப்பத்தை தெரிவித்தாள். தானும் இது வரை கேள்விப் பட்டதில் இருந்து நளனை விரும்புவதைச் சொன்னாள். ஒத்த மனமுடைய இரு உயிர்கள் இணவது தான் இயல்பு. பறவை இனம் வேறு இனத்தை விரும்புமா? தன் தந்தை மறுக்க மாட்டார். ஆயினும் வேறு காரணத்தால், விதியின் விளையாட்டால் வேறு விதமாக அவரே நினைத்தால் நான் உயிரை விடவும் தயங்க மாட்டேன் என்றாள்
ஸ்ரீ ஹர்ஷ கவியின் நைஷத நூலில் தத்துவங்கள்
முதல்வர், ஒரு பொருளின் நிழலே இருட்டு என்பதையே ஆக்ஷேபித்தார். ஏனெனில் நிழல் அசையும். இந்த அசைவு நிழலின் தன் முயற்சியால் அல்ல. எந்த பொருளின் நிழலோ அது அசைந்தால் இதுவும் அசையும். தவிர நிழல் உள்ள இடத்தில் குளுமை போன்ற மூல உருவத்துக்கு இல்லாத குணங்களும் இருக்கும். அடுத்து ஸ்ரீதர் என்பவரும் இருட்டு என்பது ஒரு பொருளல்ல என்றார். ஆனால் இதற்கு ஒரு தனித்வமான வண்ணம்-கருமை உள்ளது. இது பொருளல்ல என்றால் இது சாத்யமில்லை. அதே சமயம் பொருளுமல்ல. இதை பரமாணுக்களால் உருவாக்க முடியாது.
ஹர்ஷனின் உறுதிமொழி
என் உடன் பிறந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனை பழி வாங்கும் வரை, என் தந்தை மறைந்தபின் வரிசையாக வந்த பல துன்பங்களால் வருந்தும் என் பிரஜைகளுக்கு என் கடமையை செய்யும் வரை, என் மனம் ஆறுதல் அடையாது. அதன் பின் நானும் வருகிறேன். உங்களிடம் தர்ம உபதேசங்களை கேட்கவும், உங்கள் அடி பணிந்து தவ வாழ்க்கையை மேற் கொள்ளவும் வருகிறேன். இந்த உபதேசங்களால் என் ரஜோ குணங்கள் அடங்கட்டும்
கண்டான் சகோதரியை!
மைதியாக இருந்த இடம் – திடீரென இந்த அழுகுரல் கேட்கவும் விரைந்து ஓடி அருகில் சென்றேன். பல பெண்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த பெண்ணோ, பிடிவாதமாக நெருப்பில் இறங்க முயன்றாள். யாரோ துரத்தி வந்தார்களோ, என்ன காரணம் தெரியவில்லை பாதங்கள் வீங்கி இருந்தன. நகங்கள் உடைந்து கிடந்தன – அடிபட்டிருந்தது போலும். போஜ பத்திரங்களால் முழங்காலில் கட்டு போட்டிருந்தாள். வழியில் பேரீச்ச மரங்கள் உண்டு. முள் கிழித்ததோ என்னவோ. தண்ணீர் விட்டான் கிழங்குகள் என்போம், அதிலும் முள் உண்டு. அது தான் குத்தியதோ, கீறல்கள் தெரிந்தன. தாறு மாறாக வளர்ந்த கொடிகள் அவள் ஆடையில் சுற்றிக் கொண்டு விட்டன போலும்
தொடரும் தேடல்
புது நிலப் பகுதி. அடர்ந்த காடுகளை அறியாதவன். ஆனாலும், மனம் சகோதரியை தேடும் ஒரே நினைவுடன் இருந்ததால், பல நாட்கள் அங்கேயே சுற்றி வந்தான். ஒரு நாள் அந்த வனத்தின் தலைவனைக் கண்டான். அவன் பெயர் சரபகேது என்பவரின் மகன் வியாக்ர கேது என்று அறிந்தான். அருகில் ஒர் சிறுவன். ஒரு நிமிடம் அவனையும் தன்னையும் அரசன் ஒப்பிட்டு பார்த்து கொண்டான் போல இருந்தது.
சகோதரியை தேடி
‘தேவ! ராஜ்யவர்தன தேவன் மறைந்த பின், குசஸ்தலம் என்ற பிரதேசத்தை குப்தன் என்பவன் கைப்பற்றி விட்டான். தேவி ராஜ்யஸ்ரீயை சிறை பிடித்திருந்தனர். அவள் எப்படியோ தப்பி, சில உண்மையான பரிவாரங்களுடன் விந்த்ய மலை சென்று விட்டாள். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. மக்கள் மத்தியில் உள்ள பேச்சு இது. அவளைத் தேடி பலரை அனுப்பினோம். இன்று வரை எவரும் வந்து சேரவும் இல்லை, என்ன நடந்தது என்று தெரியவும் இல்லை என்றான்.
பூமியில் அரசர்களின் அனுராகம்
தன் சுய கௌரவம் இன்றி தண்ணீருக்காக உடலை வளைத்து கை நீட்டுவான். இதற்கு உதாகரணம் துலா யந்திரம் – எடை பார்க்கும் கருவி. கௌரவம்-கனம், சுய மதிப்பு இரு பொருள். துலா யந்திரம் கனத்தை கீழே தள்ளூம். யாசிப்பவன் என் கௌரவத்தை இழப்பான். கஞ்சன்- தர மாட்டான் என்று தெரிந்தும் அவன் காலைப் பிடித்து வேண்டுபவன் போல, அவன் திட்டினாலும் பொருட் படுத்தாமல் தன் தேவைக்காக நெருங்குபவன் மனதில் எந்த அளவு வேதனை இருக்கும்.
துவங்கிய பயணமும் வந்த பரிசும்
அரசன் இந்த குடையின் வரவினால் தன் பிரயாணத்தின் ஆரம்பமே சோபனம்- நிறைவான பயன் தருவதாக அமைந்து விட்டது என்று மனம் மகிழ்ந்தான். ஹம்சவேகனிடம் பிரியமாக பேசினான். ‘ பத்ர! பரமேஸ்வரனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய எல்லா ரத்தினங்களையும், இந்த பெருமை மிக்க குடையையும், குமாரன் அனுப்பியதில் வியப்பில்லை. அவனே பாற்கடலில் நிலவு தோன்றியது போல உயர்ந்த ராஜ குலத்தில் பிறந்தவன். அந்த குலத்தில் வந்தவர்களின் அன்பளிப்பு அவர்களுக்கு கை வந்த கலை.
அணிவகுத்த படைகள்
மூன்றாவது யாமம் தொடங்கியதுமே, பிரயாண படஹ என்ற வாத்யங்கள் ஒலிக்கலாயின. நிச்சப்தமாக இருந்த இரவில் அவை கம்பீரமான ஒலி அலைகளை பரப்பி, அனைவரையும் எழுப்பி விட்டது. திக்குகளில் கும் கும் என்ற நாதமே நிறைந்திருக்க பொழுது புலரும் முன் வழியனுப்ப அனைவரும் வந்து கூடினர். முன்னால் நின்று பிரயாண க்ரோசம் என்ற பெயரில், எட்டு பேர் தனித்தனியாக படஹத்தை வாசித்து அதன் நியமத்தை அனுசரித்தனர்.
ஹர்ஷனின் சபதம்
இந்த துக்கமும், அதனுடன் எழுந்த என் ஆத்திரமும் என்னை செயலற்றவனாக்கி விட்டன. இந்த அதமன், சண்டாளன்,, துஷ்டன், பாபி, உலகில் நிந்திக்கப் படும் செயலைச் செய்தவன், உயிருடன் இருக்கும் வரையில், என் சோகம் தணிய வழியில்லை. இவர்களை அடியோடு அழிக்கும் வரையில், என் உடன் பிறந்தானை ஏமாற்றி கொல்ல துணிந்தவனை அதே போல அழிக்கும் வரையில் என் கையால் விடும் ஜலாஞ்சலி- நீர்க் கடனை அவர் ஏற்பாரா?
சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான். பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும், நீளமான உடையும், எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம், அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான்.
தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
ஒரு நாள் காட்டுத் தீ ஜுவாலையாக பரவி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். உண்மையா கனவா? ஒரு பெரிய சிங்கமே அந்த ஜுவாலையில் மாட்டிக் கொண்டு தவிப்பதைக் கண்டான். அதே சமயம் குட்டியை காக்க பெண் சிங்கம் வேகமாக வந்து அதனுள் குதித்து குட்டியை தூக்கி வெளியில் போட்டது. குட்டி பிழைத்து எழுந்து நின்றது. ஆனால் தாயான பெண் சிங்கம் தன்னை காத்துக் கொள்ள இயலாமல் தீயின் ஜுவாலையில் மடிந்தது. ஹர்ஷன் திகைத்தான்
தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
மிருக ராஜனின் மகன் போல- சிங்கத்தின் குட்டி – கூட்டில் அடைத்து இருப்பது போல எங்கும் ஆயுதம் தரித்த காவல் வீரர்கள் சுற்றி நின்றனர். ஹர்ஷன், தாத்ரியின் கை விரலைப் பற்றிக் கொண்டு ஐந்தடி வைத்தான். அந்த சமயம் மூத்தவன் ராஜ வர்தனன் ஆறாவது வயதை அடைந்தான். மகாராணி ராஜ்யத்தின் செல்வத்தை மேலும் கூட்டுவது போல அடுத்து கருத் தரித்தாள். பகவான் ஸ்ரீமன் நாராயணன் பூ தேவியை தாங்கியது போல என்று வர்ணிக்கிறார் கவி. பின்னால் ராஜஸ்ரீ என்றே அழைக்கப்பட இருக்கும் பெண் மகவை கருவுற்றாள்.
கவி பாஸன் எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தா – 2
என் மகளை பெண் கேட்டு வரும் இந்த அரசர்கள் காலில் விழுந்து வணங்க கூட தயாராக இருக்கிறார்கள். ஏனோ அதில் என் மனம் மகிழ்வதில்லை. வத்ஸராஜன் வருவதைத் தான் எதிர் நோக்கி இருக்கிறேன். குணவான், யானைகளின் பரி பாஷை அறிந்தவன், அறிவுள்ளவன். அவன் தான் எனக்கு மருமகனாக ஆக தகுதியுடையவன்.
