அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1901ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த பரிசுகள், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியின் உயர்ந்த அங்கீகாரமாக மாறின. இயற்பியலுக்காக Wilhelm Conrad Röntgen, வேதியலுக்காக Jacobus H. van‘t Hoff, மருத்துவத்துக்காக Emil von Behring, இலக்கியத்துக்காக Sully Prudhomme மற்றும் அமைதிக்காக சர்வதேச redcross அமைப்பின் நிறுவனர் Henry Dunant மற்றும் அமைதி இயக்க தலைவர் Frédéric Passy ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமைகளை கௌரவிப்பதற்கான முன்மாதிரியை உருவாக்கினர்.
Tag: போர்
அணு ஆயுத தடை ஒப்பந்தமும் அமைதிப் பரிசும்
நிகான் ஹெடாங்க்யோ (Nihon Hidankyo, என்ற சமூக இயக்க அமைப்பிற்கு 2024 ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அணு குண்டுகளை வீசி 1,20,000 நபர்கள் இறந்த நிகழ்வின் 79ம் ஆண்டில் இருக்கிறோம். அதன் கதிர்வீச்சுக்களாலும், அதன் எரியூட்டலாலும் கிட்டத்தட்ட 1,20,000 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். “அணு ஆயுத தடை ஒப்பந்தமும் அமைதிப் பரிசும்”
நவீனப் போர்விமானங்கள்
பனிப்போரில் உளவறிவது மிகவும் தலையான ஒன்றாக இருந்தது. அப்படி உளவறிவதற்கு விமானங்கள் மிக உயரத்தில் அதிக நேரம் பறக்கவேண்டியிருந்தது. அப்படிப்பட்ட விமானங்களுக்கு அவை பறக்கும்போதே எரிபொருள் நிரப்பவேண்டும். அந்த உயரத்திலிருந்து எதிரிநாட்டின், அதாவது, மாற்றுக்கொள்கை நாட்டின் இராணுவ அசைவுகளையோ, தளவாடக் கிடங்குகள், அணு உலைகள், இன்ன பிறவற்றின் இருப்பிடங்கள் இவற்றைப் படம் பிடிக்கவும் காமிராவின் சக்தியை அதிகப்படுத்தவும், அவற்றைத் தானாக இயக்கவும் நுண்ணறிவு பெறவேண்டிவந்தது.
