லாவண்யா கவிதைகள்

ஒருவன் பொரியிறைக்க
ஒருவன் சங்கூத
இருவர் பறையடிக்க
மூவர் வழிநெடுக பூவிறைக்க
நால்வர் ஆட்டம்போட
ஐவர் கம்பு சுற்ற
ஒருவன் வெண்ணீறு பூசி
செத்த பிணத்தை சுமந்து செல்லும்
சொர்க்கரதத்தின் முன்னே செல்ல

லாவண்யா கவிதைகள்

செய்தித்தாள் படிக்கும் பாவனையில்
இரவரும் அருகமர்ந்து உரசிக்கொண்டு
அருந்தும் காபியின் சுவை, மணம்
தனியளாய் இருக்கையில் தெரியவில்லை.
மஞ்சள் மாலை கருக்கும் சமயம்

முள்ளம்பன்றி

நீ எதிரணியிலிருக்கிறாய்.
அதிகாரத்தின் கிளியாயிருக்கிறாய். சிலசமயம்
அதன் அம்பாயிருக்கிறாய்.
அதிகாரத்தின் பிறப்பிடம் நீதியின் புதைகுழியென்பது
உனக்குப்புரியும் நாளொன்று வரும்.

நிசப்தத்தின் இரகசிய இசை

வலிமறந்து பனுவல்
பல படித்துச் சிறந்து
ஆட்சியர் பதவியில்
அமர்ந்த பெருமை
பஞ்சுமிட்டாயானதே!
தற்குறிக்கும் தறுதலைக்கும்
தலைவணங்க நேர்ந்த்தே!
துட்டரின் கயமைக்குத்
துணைபோக நேர்ந்ததே!

வல்லூழின் யந்திரத் துப்பாக்கி

தன் ரகசியங்களை
வாழ்க்கை வெளிப்படுத்துவதில்லை.
ஆச்சரியமோ அதிர்ச்சியோ
காலம் முன்னறிவிப்பு செய்வதில்லை.

லாவண்யா சத்யநாதன் கவிதைகள்

காற்று நெருப்பாகும்
காலமொன்றில்
குட்டையானது குளம்.
முகில்கள் மழைவர மருள
மந்திரம் ஜெபித்தன மீன்கள்.

லாவண்யா சத்யநாதன் கவிதைகள்

காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
புறாக்கள் புசித்தன.

காகங்களுக்கு
சோறு வைத்தேன்
மைனாக்கள் உண்டன.

காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
அணில்கள் தின்றன.

பொம்மை

இருபது வயது பெண்ணைப் பார்த்து இருபத்து நாலு வயது ஆள் ‘நீ எனக்கு வேணும்’ என்று சொன்னால் இனந்தெரியாத மகிழ்ச்சி ஏற்படத்தானே செய்கிறது.? அதிலும் அவளைவிட படிப்பு, சாதி, சொத்துசுகம் அத்தனையிலும் உயரமான இடத்தில் இருக்கும் ஒருவன் ‘நீ எனக்கு வேணும்’ என்று விம்மும் குரலில் சொன்னால் அவன்மீது ஈர்ப்பு ஏற்படாமலிருக்குமா?

யாத்திரை

பஸ் நின்றது. ஒரு இளைஞன் ஏறிக்கொண்டான். இருபத்தைந்து வயதிருக்கும். சுமாரான உயரம் முகத்தில் ஒரு சிறுவனுக்குரிய விஷமமும் விளையாட்டுத்தனமும் தெரிந்தது. கழுத்துக்கு இருபுறமும் இரு நேர்க்கோடுகள் போட்டாற் போல் தோள்கள் தோளில் குறுக்காக ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கவிட்டிருந்தான். முதுகுப்புறம் ஒரு கருப்பு ஜர்னி பேக். பயங்கர கனம் போலும். முதுகை வளைத்து நின்றான். காம்பேட் யூனிபார்ம் அணிந்திருந்தான்…

லாவண்யா- கவிதைகள்

எந்தக் குதிரை பறக்கும் குதிரையென
சல்லித்துப் பந்தயம் கட்டின பல்லாண்டு.
கனவுக் குதிரைகள் ஒவ்வொன்றும்
கல்குதிரை, மண்குதிரை, மரக்குதிரையானதில்
பேச்சிழந்தான் ஒருவன். மூச்சிழந்தான் ஒருவன்.
முச்சூடுமிழந்தான் மற்றொருவன்.

காதறுந்த கதை & சுயம்வரம்

பொய்த்த கனவுகளை
நினைத்து வருந்தும் ஒரு நேரம்
எல்லோர்க்கும் வரும்.
அப்போது மேலே பார்த்தால்
வெர்டிகோ வரும்.

லாவண்யா- கவிதைகள்

வட்டம் போட கவராயமில்லை
துளைக்க ஓர் தமரூசியில்லை
அளவு பார்க்க ஒரு நாடா இல்லை
தன் சுற்றளவுக்குச் சரியளவாய்
மூங்கிலில் ஓட்டை போடுகிறது குளவி.
இப்படிப்பட்ட உலகில் நானுமிருக்கிறேன்.
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது.

கவிதைகள்- லாவண்யா, வான்மதி செந்தில்வாணன்

கையெழுத்து மறையும் நேரம்
கருவேலமுள் மண்டிக்கிடக்கும்
காட்டுப்பாதையில் நடந்துபோகையில்
கால்செருப்பு கைச்செருப்பானால்
ஒருவன் மனதில் என்ன தோன்றும்?

நான்கு கவிதைகள்

எங்கோடி கண்டனை விளித்து

வம்பழந்து

ஊர்ப்பாடு புலம்பி

முதுகு காட்டிக் கொண்டே

வீடு திரும்பும் வழி முச்சந்தியில்

ரத்தம் சொட்டப்பிளந்து கிடந்த

பூசணிக்காய்தான்

இறுதியில் உண்மையைச் சொன்னது

அண்ட் ஸ்டில் தி எர்த் – ஒரு வாசிப்பனுபவம்

சமையலறையிலிருந்த உங்கள் மனைவி எப்போது காணாமல் போனாளென்றும் உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் வீடு முழுதும் ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டருக்கிறது. உங்களுக்குப் பசிக்கிறது. ரெப்ரிஜரேட்டரில் எருமைப்பால் அல்லது பசும்பால் இருக்க வாய்ப்பில்லை. கடைகளில் தாய்ப்பால் மட்டுமே விற்கிறார்கள். சிந்தடிக் கோதுமை மாவு, செயற்கை வெண்ணெய் கலந்து சிந்தடிக் கேக் சாப்பிடலாம். ஆனால் சமையலறையில் பிணநாற்றம். உங்களுக்கு முடிவெட்டும் நாவிதரைச்சேர்த்து மொத்தம் நான்கு பிணங்களிருக்கின்றன. ராணுவ அதிகாரி மூன்று பிணங்கள்தானென்று வாதிடுகிறார்.

ஒரு யானையும் நான்கு ஒற்றர்களும்

“சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு யானை காணாமல் போனதாகச் சொல்வதே தவறு. யானை களவுபோயிருக்கிறது. சதி நடந்திருக்கிறது’”

“யானை சங்கிலியை அறுத்துக்கொண்டும் போயிருக்கலாம்” – கள்ளச்சாவி

“தாளிட்ட கோட்டைக் கதவைத் தாண்டி யானை எப்படிப் போகும்?” – முகமூடி

“ஒருவேளை யானை கோட்டை மதிலை எகிறிக் குதித்துப் போயிருக்குமோ?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேள்வியெழுப்பினான் ஒட்டுண்ணி.

சென்னையில் வாலி வதம் – தோற்பாவைக் கூத்து

Kalari Heritage and charitable Trust சார்பில் மணல்வீடு இதழின் ஆசிரியரும் நண்பருமான ஹரிகிருஷ்ணன் .6.1.2013 அன்று எலியட் பீச் அருகில் சந்திரலேகா ஸ்பேசஸ் என்ற இடத்தில் அம்மாபேட்டை கணேசன் குழுவினரின் வாலிவதம் தோற்பாவைகூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.[…]கூத்தின் முதல் சுவாரசியம் கட்டியக்காரன்தான். கட்டியக்காரன் நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றுத் தருவான். ஊர்பிரமுகர்கள் பற்றி, சுற்று வட்டாரத்து சம்பவங்கள் குறித்து நிறைய நகைச்சுவையுடன் பேசத் துவங்கி மெல்ல கூத்திற்கு வருவான். கூத்து துவங்கும்.

முகம்மது ஆல்வியின் உருது கவிதைகள்

வெள்ளிச்சிறகுகளை அகல
விரித்தொரு பறவை
தனதேயானப் பரவச அலையில்
மிதக்கிறது,
நீலக் கடலலைகளின் மேல்.

சமகால சீனக்கவிதைகள்

அரசியல் வணிக உறவுகள் நிமித்தம் சீனாவும் அமெரிக்காவுமிடையே மொழி மற்றும் கலாச்சார புரிதல்கள் அவசியமாகின்றன. இதனால் அந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிவர்த்தனை திட்டங்களின்கீழ் பல புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றிலொன்று சமகால சீனக்கவிதைகள் என்னும் தொகுப்பு. இதை கேன்யான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 49 கவிஞர்களின் 200 கவிதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. கவிதைத் தொகுப்பைப் பற்றி பேசுமுன் சீனக் கவிதைகள் குறித்து சில விஷயங்கள்.

இரண்டு கவிதைகள்

எப்படியிருக்குமோ என்னசெய்யுமோவென
எண்ணியெண்ணிப் படபடக்கும்
பெஞ்சமினுக்கு பல்பீர்சிங்குடனின்று முதலிரவு

ஒருபிறவியில் மறுபிறவி
சாராவாய் மாறிய சைமனுக்கு இருபாலநுபவம்
அவரவர் நல்லூழ் அவரவரறியார்

திக்பந்தனம்

கருமுலைப்புள்ளியில்
ஒருசொட்டுப்பால் சிதறி
சூன்யகர்ப்பம் சூலுறும் மீண்டுமென்று
வெள்ளையனுரைத்தால் பளிங்குண்மை
கருப்பையன் நானுரைத்தால்
சனாதனப் புனைவுச்சுருள்.

சூன்ய விளையாட்டு

என் இன்னொரு கால்மீது
எட்டுப்பேர் பிரமிட் செய்கிறார்கள்.
எனக்கு முன்னேயிருப்பவனின்
நாய் செத்த நாற்றத்தை
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
என் பின்னேயிருப்பவன்
என்னைச் சினையாக்கத் துடிக்கிறான்
பொறுத்துக்கொண்டிருக்கிறேன்.