அவ்வையாரின் இன்னொரு குறுந்தொகைப் பாடலில் பரத்தை தலைவன் மீதான தன்னுடைய இறுக்கமான பிடி பற்றிய நம்பிக்கையில் இவ்வாது பேசுகிறாள்: ‘தலைவனை நான் கவர்ந்து கொண்டதாகப் புறம் கூறும் தலைவி, மகளிர் ஆடும் துணங்கைக் கூத்துக்கு வந்து பார்க்கட்டும். தலைக்கை எனக்குத் தந்து தலைவன் ஆடும் போது, யார் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரிந்து விடும்.’
Category: சங்க இலக்கியம்
வரலாற்றுவமைக்குப் பரணர்
தன் காவல் மரமாகிய மாமரத்தின் பசிய காயைத் தின்ற குற்றத்துக்காக ஒரு பெண்ணைக் கொன்ற நன்னன், எத்தகைய நரகத்துக்குப் போவானோ, அத்தகைய நரகத்துக்கு அன்னையும் போவாளாக! என்று முதல் பாடலில் ஆத்திரத்துடன் தோழி கூறுகிறாள். ஒரு நாள் மலர்ந்த முக்த்துடன் விருந்தினன் போல் வந்த தலைவனின் வரவுக்குப்பின், போர்முகத்தில் உள்ள ஊரைப் போல் அன்னை துயில் மறந்தாள் என்பது தோழியின் ஆத்திரத்துக்குக் காரணமாக அமைகிறது.
எழுது சித்திரம்
கண்ணனின் குழலிசையும் அதற்கான விலங்குகளின் எதிர்வினையும் கவிதையில் இரண்டிரண்டு அடிகளில் மிகச்சரியாக வகிர்ந்து அளிக்கப் படுகின்றன. குழலூதும் கண்ணனின் மெய்ப்பாடுகளும், இசை நுகரும் விலங்குகளின், பறவைகளின் உடல் மொழியும் இயல்பாகக் கவிதையில் பதிவு செய்யப் பட்டுள்னை, அளவான விவரணைகளும் அவற்றின் துல்லியமும் அதி கேள்வி அனுபவத்தைக் காட்சி அனுபவமாக மாற்றிக் கொடுத்து விடுகின்றன.
மயக்கமும் பித்தமும் கொண்டார்
வீரயுகப் பாடங்களின் தொகுதியான புறநானூற்றில், அதன் அடிப்படை தொனியை மீறிய சில கவிதைகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. மாற்பித்தி என்ற பெண் கவிஞர் பாடியதாகப் புறநானூற்றில் அடுத்தடுத்து வைக்கப் பட்டிருக்கும் இரண்டு கவிதைகளும் (251,252) வழக்கமான புறப்பாடல்களிலிருந்து தொனியால் வேறுபடுபவை. வாகைத் திணையில் தாபத வாகைத் துறையில் அடக்கப்பட்டுள்ளவை.
உள்ளம் தாங்கா வெள்ளம்
உவமைகள் அந்த தீவிரத்தை உணர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மலர்களும் பருவகாலங்களும் மனதை உணர்த்த கையாளப்படுகின்றன.இந்தப்பாடல்களில் ஒருசில பாடல்களைத் தவிர பெரும்பான்மை பாடல்கள் தலைவி தோழி கூற்றாக வருபவை. இல்லத்திற்குள் இருந்து பாடும் பாடல்கள். சங்கப்பாடல்கள் நிகழ்த்து கலைக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படியெனினும் வாழ்வின் சாரத்தை கைக்கொண்ட பாடல்கள்.
நற்றிணை
எல்லாமும் அறிந்தது நிலவு தான்.பகல் விட இரவுக்கு ஆயிரம் கண்கள். அந்தக் கண்களின் ஒளியாக இரு்பது நிலவு மட்டுமே.நிலவு நினைத்தால் தனக்கு உதவ முடியும்.எல்லா ரகசியங்களையும் அறிந்த , மாண்பும் சான்றாண்மையும் கொண்ட நிலவு மட்டுமே தனக்கு உதவ இயலும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் அவள். அவன் வரக் காலம் தாழ்ந்ததென இவ்வளவு காலம் ஆற்றியிருந்தாள்.ஆனால் ,நாட்கள் மணல் மேட்டில் சரியும் மணலாய் உதிர உதிர,அவளுக்கு இப்போது தன் காதலன் காலம் தாழ்த்தவில்லை,
பெருமழை காலத்துக் குன்றம்
பரத்தை கூற்றாக வரும் ஒரு பாடலில் பரத்தை தலைவியை கேலி செய்கிறாள். தலைவனை தன்னிடம் இருத்திக்கொள்ள முடியாத தலைவியின் உறக்கத்தை, கவனமின்மையை நீர்நாயின் உறக்கத்திற்கு ஒப்பாக கூறுகிறாள். புதுவருவாயை உடைய வளமான மருத நிலத்தின் பொய்கை நிறைந்திருக்கிறது. அங்கு வாளை மீன்கள் தீட்டிய வாள் போல மின்னி விளையாடி நீருக்குள் மறைகிறது. அவற்றை கவனிக்காமல் அதன் கரையில் பசியோடு நீர்நாய் உறங்குகிறது
நீர்த்துறை படியும் பெருங்களிறு
இந்தப்பாடல்களில் வரும் பெருங்களிறு என்ற படிமத்தையும், தீர்த்தங்காரர்களின் கருணை மற் றும் அகிம்சையை என்மனம் இணைத்துக் கொண்டது . தன் குழுவிற்கான பாதுகாப்பு, வீரம் என்றிருந்து பின் வன்முறையாகி, எடுத்த வாளை வைக்கவிடாது மதம் கொண்ட களிறாக மாறிய இனக்குழுக்கள் தங்களை தாங்களே அழித்துக்கொண்டிருந்த காலத்தில் தீர்த்தங்காரர்கள் தங்கள் கருணையால் அந்த களிரை மெல்ல மெல்ல படிய வைத்திருக்கிறார்கள்.
தளிர் பெருமரம்
இந்த நான்கு பாடல்களும் தலைவனின் பிரிவை பேசுவதாக இருந்தாலும் இவற்றின் தொனி வேறு வேறு. ஒன்று ஆபத்தை நினைத்து அச்சத்தில் தலைவனுக்காக பதறுகிறது. ஒன்று கோடை கால வெம்மையை கண்டு உளம் துடிக்கிறது. மற்றொன்று காதல் வெளிப்பட்டதை நினைத்து வருந்துகிறது. அடுத்தது வானில் தன் பட்டம் ஊரறிய பறப்பதை கண்டு களிக்கிறது
காவிரி சூழ் நாடன்
மிக இளமையில் தன் முதல் போரை வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் எதிர்கொண்டான். வேப்பம்பூ சூடிய பாண்டியனையும் பனம் பூவை சூடிய சேரனையும் வென்ற வீரன் கரிகாலன். பறவைகளும் நாரைகளும் கரும்பு கொல்லைகளையும், நெல் வயல்களையும் கடந்து செல்கின்றன. பின்னர் அங்கிருந்து பூங்கொடிகளும் பகன்றை மலர்கள் பூக்கும் கடற்கரை கொடிகளின் மேலே பறந்து அங்குள்ள புன்னை மரங்களை தங்கும் நாடு காரிகாலனுடையது. தென்னையும் அதன் மறுபக்கம் வழை மரங்களையும் காந்தலும் சுரபுன்னையும் மலரும் நாடு அது.
வேந்தர்களைப் பாடுதல்
பகை நாட்டரசனின் அரண் வலிமையை கூறும்போது அவன் கோட்டையைச் சுற்றியுள்ள அகழி பற்றி கூறுகிறார். கோட்டை பாதுகாப்பு வீரர்களின் கையில் உள்ள தீப்பந்தத்தின் நிழல் அகழியில் விழுந்தால் கூட அதை கவ்விப்பிடிக்கப் பாயும் முதலைகள் உள்ள அகழி என்கிறார். இந்த ஒன்றைச் சொல்வதன் மூலம் அரண் வலிமையை அரசனுக்குச் சொல்லிவிடுகிறார்.
மலை தெய்வம்
காதல் கொண்டப் பின் தலைவனை பிரிந்திருக்கும் தலைவி பசலை உற்று உடல் அழகு குறைய மெலிகிறாள். காத்திருப்பு என்பது காலத்தை நீளவும் குறுகவும் செய்யும் மாயம் கொண்டது தானே. மகளின் உடல் நலிவை கண்ட கண்ட அன்னை வயதில் மூத்த பெண்களிடம் தன் கவலையை சொல்கிறாள். அவர்கள் வெறியாட்டு நடத்துமாறு கூறுகிறார்கள்.
பொன்கழங்குகள்
குளிர்ந்த அதிகாலையில் பூக்களையும் ,அதன் தாதுக்களையும் ஈரமான மண்ணில் சேர்த்து உனக்காக நானொரு பாவை செய்தேன். அது வெயிலில் வாடும் வரை நீ வரவில்லை என்று தலைவி பாடுகிறாள். முந்தைய பாடலில் காத்திருப்பு கோடையில் பொன்னாய் மலரும் போது, இந்தப்பாடலில் ஈரம் காய்ந்து வாடுகிறது
மயிலையாரின் மாசிக்கடலாட்டு
இந்தியா முழுமையே ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் அறுவடைப் பண்டிகை பொங்கல், சங்கராந்தி, லோதி, பிஹு இன்னும் பல பெயர்களில் இம்மாதங்களில் கொண்டாடப்படும். இதன் தொடர்பாகவே முற்றிய செந்நெற்கதிர்கள் பற்றிய செய்தியைக் காளிதாசனின் ரிது சம்ஹாரத்தில் கண்டோம்.
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…..
கார்த்திகை விளக்கீடு எனும் கார்த்திகை தீப விழா கார்த்திகை மாதத்தில் தமிழர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். இதன் ஐதீகம் என்னவெனில் படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மாவும் காத்தல் தொழிலைச் செய்யும் திருமாலும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்
சிறுகோட்டுப் பெருங்குளம்
மல்லர் போர் என்பது எதிர்ப்பவரை குறிப்பிட்ட பொழுது தாக்குதல் நடத்தவிடாது செயலிழக்க செய்தல். அந்த மல்லனின் வீரத்தில் திகைப்புற்று மையல் கொண்ட ஊர், வெளியூரில் இருந்து வந்த மல்லனை வென்றவனாக ஏற்றுக்கொள்வதா.. வேண்டாமா என்று தடுமாறுகிறது. அங்கே கூட்டத்தில் மற்பார் காண வந்த ஒருத்திக்கு அவன் மீது மையல் உண்டாகிறது. அவளும் அவனை காதலிப்பதா? வேண்டாமா? என்று இருநிலைகளில் அலைகழிகிறாள்.
உதிரும் வண்ண இலைகள் !
துள்ளுகின்ற மீன்களாகிய மேகலையை அணிந்து, நீர்நிலைகளின் கரையோரங்களில் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைகள் முத்துமாலைகள் போலக் காட்சியளிக்க, பரந்த மணல் பிரதேசம் எனும் நிதம்பத்தையுடைய நதிகள், தம் இளமையாலும் அழகாலும் செருக்குற்ற இளமங்கையர் போல் தளர்நடையிட்டுக் கொஞ்சிக் குழைந்து, மெதுவாக ஆடி அசைந்து செல்கின்றன.
மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…
நீர் நிறைந்த மேகங்கள் மலைப்பாறைகள்மீது இறங்கி, அவற்றைக் காதலன் தழுவிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டன. மலைகளெங்கும் அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. எங்கும் தோகை மயில்கள் நின்று நடனமாடின. இவ்வாறு, மலைகள், மேகங்கள், அருவிகள், மயில்கள் இவற்றைக் கண்டோருக்கு உள்ளத்தில் ஒரு விதமான விருப்பு உண்டாயிற்று.
மறம் பாடுதல்
புறநானூற்றின் போர்ப்பாடலில் மாதவிடாய் பெண்களை உவமையாகக் கூறுமளவிற்கு உவமை அற்றுபோனதோ என்று வாசிக்கும் போது தோன்றியது. செய்யுள் அழகியலில் உவமைச்சிறப்பிற்கு முக்கியமான இடம் உண்டு. எந்த உவமையும் அழகற்றது இல்லை. ஒரு உவமை எந்தப்பாடலில் எந்தப்பொருளில் எங்கு வைக்கப்படுகிறது என்பதே அதன் அழகை தீர்மானிக்கிறது
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை என்பது வருத்தும் வெயில்காலம். மனிதன் எதற்கெல்லாம் ஏங்குகிறான் என்று தெரியுமா? குளிர்ச்சியான மரம், அதன் நிழல், அம்மரத்தில் கனிந்து தொங்கும் பழங்கள், நீராடி மகிழ ஒரு நீரோடை, அதிலுள்ள குளிர்ச்சியான நீர், அந்தத் தண்ணீரினிடையே மலர்ந்து சிரிக்கும் அழகான வாசமிகுந்த சில தாமரை மலர்கள், இளைப்பாற ஒரு மேடை, அங்கு வீசக்கூடிய மெல்லிய பூங்காற்று,
சந்தனம் வாடும் பெருங்காடு
சங்ககாலத்தில் இளம் பெண்கள் முருகு பிடித்து விட்டது என்று முருகனுக்கு பலி கொடுத்து குறிகேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு முருகு அயர்தல் என்று பெயர். வழக்கத்துக்கு மாறாக தலைவி சோர்வும் தனிமையும் கொள்வதை அன்னை கவனிக்கிறாள். அவள் உள்ளம் திடுக்கிட்டு விழித்து குழந்தை பெண்ணானதை உணர்ந்திருக்கும். அவள் அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளிக்கிறாள். வழிபாடு மூலம் எதையோ அறிவிக்கிறாள்.
வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும்
பதிற்றுபத்து புறநானூறுக்கும் முந்தைய காலத்தில் எழுதப்பட்டது. பதிற்றுப்பத்தில் எழுதிய ஒரே ஒரு பெண்பால் புலவர் காக்கைபாடினியாார். இவர் ஆடுகோட்பாட்டு சேரலாதனின் அவைப்புலவராக இருந்துள்ளார். இந்தப்பாடல்களில் பாடப்பட்ட சேரலாதன் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் அதே ஔியுடன் காலத்தில் நிற்கிறான். இன்று வாசிக்கும் போதும் அவன் கண்ணி தாழாது நிற்கிறது
தீரத்தின் ஔி
வெள்ளரிகாயின் விதைபோன்ற அரிசி சோற்றை நீரிலிட்டு உண்டு,பரல்கற்கள் உள்ள வெறும்தரையில் படுத்துறங்குவதை விட எனக்கு அந்த பெருங்காட்டின் ஈமப்படுக்கை தாமரை பூத்த குளம் போன்றது என்கிறாள். கண்கலங்காது கடந்து செல்ல முடியாத பாடல் இது. போரில் கொல்லப்படுவது வேறு. இது வேறு இல்லையா?
இயற்கையை நோக்கியிருத்தல்
இற்றைதிங்கள் அந்நிலவில் 6 கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலக்கவிஞர். இவரின் பாடல்கள் அகநானூறு, நற்றிணை,குறுந்தொகை பொன்ற சங்கஇலக்கிய தொகை நூல்களில் உள்ளன. இவர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் உள்ள கழார் என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பரை மணந்தார். எயிற்றியார் என்பது குறிஞ்சி நிலப்பெண்ணை குறிக்கும் பெயர். ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் “இயற்கையை நோக்கியிருத்தல்”
காத்திருப்பின் கனல்
இந்தப்பாடலும் நீண்ட நாள் பிரிவைப் பாடும் பாடல். மாமரத்தின் கிளையில் மின்னும் கரியநிறத்தில் குயில் அமர்ந்திருக்கிறது. அந்தக்குயிலை பார்த்தபடி தென்னம் நெய்யிட்டு வாரப்படாத தன் கூந்தலை வருடிய தலைவி பிரிவை நினைத்து கலங்குகிறாள். மாம்பூக்களின் மஞ்சள் நிற மகரந்ததுகள்கள் கரியகுயில் மீது படிந்திருக்கிறது.
காட்டாற்று வெள்ளம்
அகநானூற்றில் மாசாத்தியாரின் இரண்டு பாடல்கள் [324,384] உள்ளன. இப்பாடல்களில் தலைவன் வரவை நோக்கியிருக்கும் தலைவியின் உணர்வுகளை எழுதியுள்ளார்.
முல்லை நிலத்தில் கார்காலம் வந்து விட்டது. மழை நீரால் நிலம் குளிர்ந்து ஈரமாகிக் கிடக்கிறது. இந்த காலநிலையே இந்தப்பாடல்களின் உணர்வு நிலையாகவும் உள்ளது. ஆனால் தலைவனின் வரவு நோக்கியோ,தலைவன் வந்துவிட்டதாலோ,வராததாலோ,வர வேண்டாம் என்று மறுப்பதாலோ அந்த கார்காலத்தை தலைவி எவ்விதமாக உணர்கிறாள் என்பதே ஒவ்வொரு பாடலின் நிறபேதமாக இருக்கிறது.
மொழியென்னும் ஆடி
ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார், காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற் றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் “மொழியென்னும் ஆடி”
சங்கப்பெண்கவிகள்
தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தலைவி முற்றத்தில் பழுத்திருக்கும் வேம்பை பார்க்கிறாள். அவர் செல்லும் பாலை நிலத்திலும் வேம்பு பழுத்திருக்கும் காலம் இது தானே? என்று தோழியிடம் கேட்கிறாள். கிளி அந்த வேப்பம்பழத்தை கொத்தி தின்பதற்கு வாயில் வைக்கிறது. இந்தக்காட்சி பொன்ஆசாரி தாலிநாணில் பொற்காசைக் கோர்ப்பதை நினைவுபடுத்துகிறது. அவர் சென்ற வழியில் இதே போல கிளிக்கூட்டம் பழுத்த மரங்களில் அமரும்தானே, அதைக் கண்டாவது என் நினைவு வருமா? கேட்கிறாள்
இற்றைத் திங்கள் அந்நிலவில் -1
காவற்பெண்டு பாடிய பாடலில் ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’ என்ற வரி தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படும். ‘புலி இருந்து சென்ற கல்குகை போன்று, அவன் இருந்த வயிறு இங்கே இருக்கிறது.. அவன் போருக்கு சென்றுள்ளான்’ என்று புறநானூற்று தலைவி சொல்கிறாள். இது போன்று சங்கப்பாடல்கள் இளம்வயதில் அறிமுகமாகியிருந்தாலும்,சிறவயதில் அதை நாம் உள்வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கப்பாடல்களை வாசிக்கும் போது அதில் எதாவது ஒருவரி மனதில் படிந்து தித்திக்கும் அல்லது வெறுமையைப் படரவிடும்.
தைலம் ஆட்டுப் படலம்: கம்பராமாயணம்
நகர் நீங்கிய இராமன் பின் பின் தொடரும் பெருந்திரளை நேர்த்தியுடன் கையாள்வது, சுமந்திரனை எந்தையே என விளித்து அவன் தசரதனிடத்தில் இருந்து ஆற்ற வேண்டியனவற்றை ஆற்றுப் படுத்துவது, பரதனைக் குறித்து உய்த்துணர்ந்து அவனுக்கு வேண்டியது சொல்லி அனுப்புவதென ஆட்சிப் பொறுப்பையேற்காத ஓர் ஆட்சியாளனாகவேத் திகழ்கிறான்.சுமந்திரனிடம் அவனாற்றும் அறம் குறித்த உரை காவியம் முழுமையும் அவனொழுகும் அறத்திற்கான வரையறையெனக் கொள்ளலாம்.
தீண்டா நதி
மனிதர்களில் தான் எத்தனை வகை! அதிலும் ஒரு சமோசாவை மனித மனம் எப்படியெல்லாம் வித்தியாசமாக சாப்பிட நினைக்கிறது! என் அருகில் இருந்தவர் சமோசாவின் தோல்பகுதிகளை தனியே எடுத்துவிட்டு மசாலாவை மட்டும் சாப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவர். அதன் பொருட்டு தோலுக்கும் மசாலாவுக்குமான பிரிவினைவாத முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வழிப்போக்கர் ஒருவர் “ஜெயிந்திபுரம் எப்படி போறது” என்று அவரிடம் கேட்டபடி வந்தார். கிரைம் பிராஞ்ச் பக்கம் கைகாட்டி, “இப்படியே நேரா போங்க ஒரு சாக்கடை வரும் அதை ஒட்டின தண்டவாளத்தை தாண்டி லெப்ட்ல போனா வந்துரும்” என்றார். அவர் எதை சாக்கடை என்று சொன்னார் என்று அறிந்த நான் கொதித்தெழ வேண்டும்தான்.
எருக்கு
திருமண தோஷம் உள்ளவர்கள் முதலில் வாழைக்குத் தாலி கட்டுவதை போலவே பல சமூகங்களில் எருக்குக்கு தாலி கட்டுவதும் வழக்கத்தில் இருக்கிறது.
திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!
காரைக்கால் அம்மையாரின் காலம் கி.பி. 4-ம் நூற்றாண்டு அல்லது 5-ம் நூற்றாண்டு என்கிறார்கள். திருஞான சம்பந்தருக்கும் மூத்தவர். அம்மையாரின் பதிக அமைப்பும், சொல்லாட்சிச் சிறப்பும் அவரது காலம் தொன்மையானது என்று உரைக்கும். திருவாலங்காட்டுப் பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவாரே!” என்பார். மூத்த திருப்பதிகத்தின் பதினோராவது பாடலில் – “காரைக்கால் பேய் தன் பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே!” என்பார்.
சீர் கொண்டு வா…
“கவிதை” என்ற பெயரில் ஜனரஞ்சக பத்திரிகைகளில் வரும் எழுத்துக் கோர்வைகளை படிக்காமல் தாண்டிச் செல்லும் அளவு புறந்தள்ளும் தன்மை இன்னும் வரவில்லை என்பதால், காலைக்கடன் சரிவர நேராவிடில் அன்றைய பொழுது நிகழும் விவரிக்க இயலா அவஸ்தை போல், மேற்கூறிய கவிதைகளைப் படித்தபின் நாம் அடையும் மொழி மற்றும் மனஉபாதைகளுக்கான “சீர் கொண்டு வா…”
‘வட திசை எல்லை இமயம் ஆக!’
கண்கொட்டுதல், இமையாடுதல் என்றோம். இமையாடாமல், கண் சிமிட்டாமல், கண் கொட்டாமல், கண்ணிமைக்காமல் பார்த்தான், அல்லது பார்த்தாள் என்கிறோம். இமைப்பொழுது என்றால் கணம் அல்லது குறுகிய கால அளவு. உறங்கிப் போதலை, இமை பொருந்துதல் என்றோம். கண் இதழ்கள் சேர்தலே இமை கொட்டுதல். இமைப்பளவு என்றாலும் கண்ணிமைப் பொழுதே! சீவக சிந்தாமணி, இமைப்பளவைக் குறிக்க, ‘இமைப்பு’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. இமைப்பு எனும் சொல்லுக்கு dazziling, brilliance, விளக்கம் ஆகிய அர்த்தங்களும் உண்டு.
மெய்ப்பொருள் காண்பது அறிவு
புறப்பொருள் வெண்பா மாலை, ஐயனார் இதனார் இயற்றிய எட்டாம் நூற்றாண்டு இலக்கண நூல், ‘கருந்தடங்கண்ணி கைம்மை கூறின்று’ என்கிறது. பத்தாவது பொதுவியல் படலம், தாபத நிலைத் துறை பாடலின் கொணு, கைம்மை பேசுகிறது. கருமையான பெரிய கண்களை மனைவி, கைம்மை நோன்பினை மேற்கொண்டாள் என்பது தகவல். தாபதம் எனும் சொல்லுக்கு, நோன்பிருத்தல் என்பது பொருள்.
கம்பலை-பிற்சேர்க்கை
‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை.
தமிழ் பதித்த நல்வயிரம்
பொன்னால் செய்த பாவைகளையும், வயிரம் முதலிய மணிகள் உள்ளிட்ட பொருள்கள் அத்தனையும் (சேரலாதன், மாந்தை என்னும் தனது தலைநகரின் கண், தனது நல்ல அரண்மனை முற்றத்தில்) எங்கும் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவற்றை நிலம் தின்னும் படிக் கைவிட்டுப் போனான். அந்த நிதியம் ஆம்பல் எனும் பேரெண்ணை ஒத்திருந்தது. ஆம்பல் எனும் சொல், ஒரு பெரிய எண்ணைக் குறிப்பது. சங்கம், பதுமம் என்பது போல. அல்லது மிலியன், பிலியன், ட்ரில்லியன் (million, billion, Trillion) என்பது போல.
வன்னி
எக்காரணம் பற்றியும் இஃதோர் ஆன்மீகப் பயணக்கட்டுரை அல்ல. நாம் இங்கு தீ பற்றிப் பேசப்போகிறோம். ஐம்பெரும் பூதங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது தீ. ஆகவே தான் முக்கண்ணனின் மூன்றாவது கண்ணில் தீ என்றார் போலும். கிரேக்க இதிகாசங்களில் எவ்வினைக்கும் ஒரு கடவுள் உண்டு. எடுத்துக்காட்டுக்கு Morpheus. தமிழில் மார்ஃபியஸ் என்று எழுதுவோமா? இருபுறமும் இறகுடைய கடவுள். கனவுகளின் கடவுள். அப்பெயரில் ஒரு Blended Premium Brandy இருக்கிறதே என்று கேட்கலாம். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
…
‘தீபரவட்டும் என்றொரு நூலுண்டு தமிழில். அறிஞர், பேறரிஞர், கவிஞர், பெருங்கவிஞர் எனும் பட்டங்கள் கோமாளிகள் அணியும் சட்டை போல் ஆகிவிட்டது. பெரியவர் என்றாலே அது பெரிய சொல். அதன் மேல் பல்லடுக்குகளாக மகா என்ற பட்டம் ஏற்றி கனம் கூட்டுகிறார்கள். அது போன்றே அமிர்தம் மகா-அமிர்தம் ஆகிறது. பிரசாதம் மகாபிரசாதம் ஆகிறது. தகுதியினால் கனம் சேர்ப்பதை துறந்துவிட்டு, சொற்களால் கனம் ஏற்றுகிறார்கள். தீயை மகாத்தீ என்று எதற்காக சொல்ல வேண்டும்?
தீப்பந்தம், தீச்சட்டி, தீநாக்கு, தீக்கொழுந்து, தீமிதி, தீக்கனல், தீப்பிழம்பு, தீக்கொள்ளி, தீவட்டி, தீக்காயம் என்று எத்தனை எத்தனை சொற்கள்? தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றார் பாரதி. சற்று விரல்விட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
அமுதசுரபியும் சத்துணவுத் திட்டமும் மலிவு விலை உணவகங்களும்
நமது தமிழ்க் காப்பியங்கள் பசிப்பிணி பற்றி என்ன கூறியிருக்கிறது என்று பார்த்தால் முதலில் நமக்குக் கிடைக்கும் பாடலின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமோதங்கிழார் என்ற புலவர் நாட்டில் நிலவிய பசிப்பிணியை இரண்டு பாணர்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். புறநானூற்றில் இடம் பெறும் பாடல் இது.
கறங்குமணி நெடுந்தேர் வரும்!
கருப்பொருளும் மயங்கி அமைய இயலும் என்பர். அவ்வத்திணைகளுக்குரிய கருப்பொருள்கள் அந்தந்தத் திணைகளுக்கே உரியதாக அமையின் சிறப்பாக இருக்கும்; அவ்வாறு அமையாவிடினும், அவை அமைந்த நிலத்திற்குரியனவாகவே கருதப்பட வேண்டும் என்பது நியதி. ஒரு நிலத்திற்கே உரியதான பூக்கள் மற்ற நிலங்களிலும் பூக்க வாய்ப்புண்டு. நெய்தற்பூ மருத நிலத்திலும் பூக்கலாம்; குறிஞ்சிக்குரிய பறவை வேறுநிலத்திலும் பறக்கலாம். இவ்வாறு வரும்பொழுது அந்தந்தப் பூவையும் பறவையையும் அவை உள்ள வேறுநிலங்களுடன் பொருத்திப் பொருள்உணர்ந்து கொள்ளவேண்டும். காலமும் அவ்வாறே; குறிஞ்சி நிலப்பொழுதான யாமம் என்னும் சிறு பொழுதும் முல்லை நிலத்தின் பெரும் பொழுதான கார்காலமும் மற்ற நிலங்களிலும் வரும் வாய்ப்புகள் உள்ளன! இது தான் திணை மயக்கம் எனப்படும்.
ரூபம் பிரதிரூபம் மற்றும் பாவனை
இதனைப் பாடியது ஒரு புலவராகத் தானே இருக்கவேண்டும்? ஆனால் பாடியவர் காவற்பெண்டிர் என்று குறிப்பு கூறுகிறது. காவற்பெண்டிர் என்பது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண் என்பதால் செவிலித்தாய் என்று ஆகிறது. ஆனால் பிரதிபேதமாக காதல்பெண்டிர் என்றும் பெயர் குறிப்பிடப் படுகிறது. காவற்பெண்டிரும், காதற்பெண்டிரும் வேறு வேறு ஆவர். இருவர் தொழிலும் வேறாகும். ஆனால் இந்தக் கூற்றுகள் பெற்ற தாய்க்கு பதிலாக அமைந்துள்ளன. பெற்றதாய் கூற வேண்டியதை, செவிலி கூற முடியுமா? எல்லாவற்றையும் கூற முடியுமா? அதுவும் தன் வயிற்றைக் காட்டி?
கார்முகில் வண்ணனே! சப்பாணி!
“மகாபலிச்சக்கரவர்த்தியிடமிருந்து அவன் நீரைவிட்டு தாரைவார்த்துக் கொடுத்த பூமியைப் பெற்றுக்கொண்ட கைகளால் நீ சப்பாணிகொட்டுவாயாக! நீ சப்பாணிகொட்டும்போது உனது காலில் அணிந்த மாணிக்கக் கிண்கிணிச் சதங்கையும், ஆணிப்பொன்னால் ஆன அரைச்சதங்கையும் அசைந்து இனிமையாக ஒலிக்கின்றன. கருங்குழல் குட்டனே! சப்பாணி கொட்டுக!” எனத் தாய் வேண்டுகிறாள்.
வினை அறு நோன்பினாள்
வனத்திலே இராமனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து ஓர் ஆத்மா பல காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. பெருமாளை நினைந்து நினைந்து மனமெல்லாம் அவரே ஆகி அளவில் காலமாக அது பரமாத்மாவை நினைத்துத் தவம் செய்து வருகிறது. அதுதான் ‘சவரி’ என்னும் பெருமகள். அவள் வேடர் குலத்தைச் சார்ந்தவள். இராமபிரான் வருவதற்குச் சில நாட்கள் முன்பு ஈசனும் நான்முகனும் தேவரும் வந்து…
பெண் கவிஞர்கள்: அவ்வையார்(கள்)
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்
நற்றமிழ்ச்சுளைகள்
12 வகைச் சிற்றிலக்கியங்களை அவர் இந்நூலில் அறிமுகப்படுத்தி உள்ளார். பொத்தாம் பொதுவாகப் போகிற போக்கில் வாசிக்கும் நூலன்று இது. அதேநேரத்தில் படித்து உணரக் கடினமானதன்று. நூலின் இடையே வரும் நாஞ்சிலின் வழக்கமான எள்ளல் பாணி வாசகனுக்குச் சுவை ஊட்டுகிறது. மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை அப்படியே முழுதாய்க் கடித்துத் தின்னலாம். பலா மற்றும் ஆரஞ்சு முதலானவற்றைச் சுளை சுளையாகத் தின்றுதான் அனுபவிக்க வேண்டும். இந்நூல் இரண்டாம் வகையினது.
அறிவியலும் பழந்தமிழ்ப் பாடல்களும்
பழந்தமிழ்ப் பாடல்களில் வானம், விண்மீன்கள், ஐம்பூதங்கள், பூக்கள், செடிகள், உயிரினங்கள், பற்றிய தகவல்கள் இருக்கின்றன. இந்தத் தகவல்கள் பார்த்தவற்றைப் பற்றிக் கூறுபவை. அல்லது கேட்டவற்றைப் பற்றிக் கூறுபவை. பார்ப்பவற்றைப் பற்றியும் கேட்பவற்றைப் பற்றிக் கூறுவதும் அறிவியல் கோட்பாடுகளாக ஆகி விட முடியாது. இயற்கையின் புதிர்களை விடுவிப்பதற்கான பயணத்தில் அன்றைய மக்களுக்குக் கருவிகளாக அவை உதவியிருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்று தான் கூற முடியும். பல்லாயிரக்கணக்கான பாடல்களில் ஒரு சில பாடல்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு வலிந்து பொருள் கொண்டு அவை அறிவியல் கோட்பாடுகளை நிறுவுகின்றன என்று நான் சொல்கிறேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், தமிழ்த் துரோகி, வடமொழி அடிவருடி, என்று குற்றம் சாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்படுவீர்கள் என்ற வகையில்தான் இன்று பலர் எழுதி வருகிறார்கள்.
ஔவியம் பேசேல்
எடுத்துக்காட்டுக்கு பங்கஜம் பங்கயம் ஆவதும், ஸர்ப்பம் சர்ப்பமாவதும். இலக்கணத்துக்கு அடங்கி, தமிழுக்குள் வேற்றுமொழிச் சொற்கள் பிரிவேசிப்பதன் தன்மை இதுதான். நான் சொல்ல வருவது, பல அரபுச் சொற்களும் வட சொற்களும் தமிழ்ச் சொல்லாக உருமாற்றம் பெறுவதற்கு ஔ எனும் இவ்வெழுத்து உதவி இருக்கிறது. அது மொழிக்குப் பெரிய தொண்டு என்று கருதலாம். ஆனால், ‘அப்ப அந்த மூதி மொழிக்குள்ளே என்னத்துக்கு? தூக்கிக் குப்பையிலே கடாசு’ என்றும் தனித்தமிழ்வாதி எவரும் உரைக்கக் கூடும்.
முத்தொள்ளாயிரத்தில் யானைகள்
யானைகள் மெதுவாகவே நகருமென்றாலும் அவற்றுக்கான பிரத்யேகப் பயன்பாடுகள் இருந்தன. ஒரு யானையின் மேல் ஏழு முதல் 10 வீரர்கள் வரை ஏறிப் போர் புரிந்தார்களாம். யானையால் மட்டுமே அத்தனை மனிதர்களைச் சுமக்க முடியும். உயரமான விலங்கு என்பதால் களப்போரில் யானை மேலிருந்து தெளிவாக அம்பு எறிய முடியும். ஆனால் இவற்றைவிட முக்கியமானது, பகைவர்களின் மதிற் சுவர்களை உடைப்பது.
