அவரது சூழலியல் பிரக்ஞை என்பது இயற்கையோடு கரைந்துவிடும் வெறும் ரொமாண்டிசிச ஐக்கியம் அல்ல; மாறாக, மானுட வன்முறையைக் குறுக்கிட்டுத் தடுக்கும் ‘பிரகிருதி’யின் அறமும், எளியோரின் வாழ்வாதாரமும் உறைந்த நிலப்பரப்பாகும். ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியுடனான ஒப்புநோக்கல், இவ்விருவரும் காற்று, நீர், நெருப்பு மற்றும் ‘புனிதப் பித்தன்’ படிமங்களைப் பகிர்ந்துகொண்டாலும், முற்றிலும் வேறுபட்ட இலக்குகளை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.
