ஹாம் சோக்-ஹோன் – உலகளாவிய மனிதநேயத்தின் குரல்

ஹாம் சிறையில் அமர்ந்து, வரலாற்றின் ஓட்டத்தை சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ​​அவருடைய எண்ணங்கள் பின்வருவனவற்றைச் சுற்றியே வலம் வந்தன: “வரலாற்றின் இந்த ஓட்டம் தேசிய எல்லைகளின் மாற்றங்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. இது மனிதச் சமூகத்தின் கட்டமைப்புகள், மாறிவரும் ஓர் உலகப் புரட்சியின் தொடக்கமாகும். உலகம் ஒரே நாடாக மாற வேண்டும். அரசு குறித்த கண்ணோட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். வல்லரசுகளின் காலம் முடிந்துவிட்டது. உலகத்தைப் பற்றிய பார்வை மாறிவருகிறது; அதற்கேற்ப சமயமும் மாறும். அது தற்போதைய நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவத்தை மேற்கொள்ளாதா? சமயத்தின் அடிப்படையான  சத்தியம் என்றும்  மாறாதது;