புத்தரின் காலத்தில் துறவு பூண்ட பெண்கள் பாடல்கள் பாடினார்கள். அவை தேரிகாதை என்று தொகுக்கப்பட்டன. உலகின் மிகப் பழைய பெண் கவிதைத் தொகுப்புகளில் அதுவும் ஒன்று. கணவனின் அடிமைத்தனத்திலிருந்தும் சமையலறையின் சுமையிலிருந்தும் விடுதலை பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் பாடினார்கள்.
