மறைக்கப்பட்ட வாழ்க்கை

ஆனால், தன் பெற்றோர் எதைப் பற்றியும் இப்படி வெளிப்படையாகப் பேசுவதைக் குறித்து நிதிக்கு எந்த மனக்கசப்பும்  அசௌகரியமும் இல்லை. அது அவளுடைய அப்பாவின் ‘சோம்பேறி கண் பார்வை’ யைப் போலவோ,  அல்லது முன்பு பரதநாட்டிய கலைஞராக இருந்த அவளுடைய அம்மா, உள்ளூர் பெண்களுக்காகத் தங்கள் வீட்டின் மொட்டைமாடியில் நடத்திவந்த ஏரோபிக்ஸ் வகுப்புகளைப் போலவோ, சாதாரணமான விஷயம் தான் என்றே தோன்றியது. தன் கர்ப்பம் முன்னேறிக்கொண்டிருந்தபோதும் அவள் அந்த வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தினாள்.