மாற்றமா, தொடர்ச்சியா? அமெரிக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 இடைத்தேர்தல்

அதிகரித்து வரும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், குடியேற்றக் கொள்கை பெயரில் நடக்கும் அராஜகங்கள், மருத்துவச் செலவுகள், கல்வி, ஜனநாயகத்தின் எதிர்காலம், பொதுமக்களின் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கைகள் எனப் பல பிரச்சினைகள் வாக்காளர்களின் முடிவை வெவ்வேறு திசைகளில் இழுக்கின்றன. தற்போதைய அரசின் கொள்கைகளைத் தொடர்ந்து ஆதரிப்பவர்கள் ஒருபுறமும் நாட்டுக்கு வேறு அணுகுமுறை தேவை என்று கருதுபவர்கள் மறுபுறமும் இரு கட்சிகளின் மீதும் அதிருப்தி கொண்டவர்களுமாய் வாக்காளர்கள் சிதறுண்டு இருக்கிறார்கள்.