மௌனத்தின் சுமை

தன் வேலைகளில் அவளுக்கு இலேசில் திருப்தி வருவதில்லை. எதையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவாள். ஆனாலும், கடைசி நேரம்வரை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பாள். என்றாலும்கூட, அவளின் அந்தப் பழக்கம் அவள் பாடசாலையில் இருந்தபோது எந்தப் பிரச்சினையையும் அவளுக்குக் கொடுக்கவில்லை. எப்படியோ நிறையப் புள்ளிகளும் பாராட்டுகளும் வாங்கிவிடுவாள். பல்கலைக்கழகத்துக்குப் போனபின் அது எப்படிப் பிரச்சினையானதென்று எனக்கு விளங்கவேயில்லை.

வளரிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்கள்

இந்தப் பிரிவினரில் எவருடனாவது தாங்கள் சார்ந்திருக்கவில்லை என வளரிளம்பருவத்தினர் உணரும்போது குறிப்பிட்ட அந்தப் பிரிவினரின் கவனத்தைத் தங்கள்மீது ஈர்ப்பதற்கு அவர்கள் மிகுந்த பிரயத்தனப்படுவார்கள். அந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் விரும்பும்வகையில் எதிர்வினைகள் கிடைக்காதபோது, தங்களிடமும் அதிகாரம் இருக்கிறது எனக் காட்டுவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். அது பெற்றோருடனும் ஆசிரியர்களுடனுமான அதிகார மோதலாக விஸ்வரூபம் எடுக்கிறது.

பயம் தொலைத்த பயணம்

இல்லை, இங்கை கனடாவிலிருந்த மாமாதான் எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தினவர். எங்கடை கலியாணம் இந்தியாவிலைதான் நடந்தது. மூண்டு கிழமை லீவிலை வந்து இவர் என்னோடை இந்தியாவிலை நிண்டவர். அதுக்குள்ளை எனக்கு பிள்ளையும் தங்கியிட்டுது. பிறகு பிள்ளைக்கு ஒண்டரை வயசானப் பிறகுதான் நான் இங்கை வந்தனான். வந்தகையோடை அடுத்த பிள்ளையும் தரிச்சிட்டுது. இப்ப திரும்பவும் நான் கர்ப்பமாயிருக்கிறன்”

ஒரு நாள்

“எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளக்கிறம், விரும்பின எல்லாத்தையும் வாங்கித்தாறம், நீ என்னடா எண்டால், களவெடுக்கிறியா, நாயே! பள்ளிக்கூடத்துக்கும் வரவேண்டாம் எண்டிட்டினம், இனி என்ன, களவெடுத்துத்தான் சீவிக்கப்போறியோ?” உச்சஸ்தாயில் கத்தினாள்.
அவன் அலற அலற, அவன் புயத்தில், முதுகில் என மாறி மாறி தன் கை வலிக்கும்வரை அடித்தாள். ஏதோ சொல்ல முயன்றவனை “வாயை மூடு நாயே” என அடக்கினாள். அங்குமிங்குமாக நடந்தபடி சத்தமிட்டு அழுதாள், அவனைப் பிடித்து உலுப்பினாள். ஏற்கனவே வாங்கிய அடிகளால் சிவந்துபோயிருந்த அவனின் கன்னத்தில் மீளவும் அறைந்தாள்.

ஒன்றே வேறே

சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக அரவிந்தசாமியும் மதுபாலாவும் ஆடிப்பாடியிருக்க முடியுமா? “ஒன்றே வேறே”

புதர் மண்டியிருந்த மன வீடு

‘அவனுக்கென அமைஞ்ச ஒரு உறவை ஆதரிக்கிறதுக்குப் பதிலாக புழுங்குறனே, தாயெண்ட உறவையும் மேவின ஆதங்கம்தானே இது,’ அவளுக்குத் தன்மேல் பச்சாதாபமும் கோபமும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. ‘என்ரை விதி இப்படியானதுக்காண்டி, என்ரை பிள்ளையும் காயுறதே?’ அவள் நினைவுகள் சங்கிலியாகத் தொடர்ந்தன.