சொல்லும் பொருளும்…..

This entry is part 3 of 3 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

எழுத்து என்பது பேச்சின் ஒலிவடிவமே. கையால் எழுதப்படுவதாலும் வாயால் ஒலி எழுப்பப்படுவதாலும் எழுத்து என்னும் பெயர் வந்தது என்கின்றனர். கையால் எழுதப்படும் வரிவடிவ எழுத்து காலங்கள் தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது. இவற்றிற்கு முற்கால எழுத்துக்களே ஆதாரமாகும். இவற்றைப்பற்றிய ஆராய்ச்சிக்கு தொல்லெழுத்தியல் (Palaeography) என்று பெயர்.