இணைபிரியாத இரு பறவைகள்

“இந்த உடல் அழிந்த பின்னரும் அழியாதிருக்கிற அந்த தத்துவம் என்ன?” என்ற கேள்விக்கான விடையை யமனிடம் கேட்கிறான். உடனே யமன், “இந்த அறிவை அடைவது மிக்கடினம். எனவே நீ வேறு ஒரு வரத்தைக் கேள்,” என்கிறார். நசிகேதனுக்கு மேலான இந்த உண்மையை அறியும் முக்கியமான தகுதியான முமுக்ஷூத்துவம் (உண்மையை அறிவதில் நாட்டம்) இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவே அவர் இவ்வாறு சொல்கிறார். நசிகேதனோ, “இது மிகக்கடினமானது என்பதால்தான் அதை நாடுகின்றேன்,” என்று தன் ஊக்கத்தில் உறுதியாக நிற்கின்றான்.