இற்றைத் திங்கள் அந்நிலவில் -1

This entry is part 1 of 11 in the series கவிதாயினி

காவற்பெண்டு பாடிய பாடலில் ‘புலி சேர்ந்து போகிய கல்லளை’  என்ற வரி தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படும். ‘புலி இருந்து சென்ற கல்குகை போன்று, அவன் இருந்த வயிறு இங்கே இருக்கிறது..  அவன் போருக்கு சென்றுள்ளான்’ என்று புறநானூற்று தலைவி சொல்கிறாள். இது போன்று சங்கப்பாடல்கள்  இளம்வயதில் அறிமுகமாகியிருந்தாலும்,சிறவயதில் அதை நாம் உள்வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சங்கப்பாடல்களை வாசிக்கும் போது அதில் எதாவது ஒருவரி மனதில் படிந்து தித்திக்கும்  அல்லது வெறுமையைப் படரவிடும்.

சங்கப்பெண்கவிகள்

This entry is part 2 of 11 in the series கவிதாயினி

தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தலைவி முற்றத்தில் பழுத்திருக்கும் வேம்பை பார்க்கிறாள். அவர் செல்லும் பாலை நிலத்திலும் வேம்பு பழுத்திருக்கும் காலம் இது தானே? என்று தோழியிடம் கேட்கிறாள். கிளி அந்த வேப்பம்பழத்தை கொத்தி தின்பதற்கு வாயில் வைக்கிறது. இந்தக்காட்சி பொன்ஆசாரி தாலிநாணில் பொற்காசைக் கோர்ப்பதை நினைவுபடுத்துகிறது. அவர் சென்ற வழியில் இதே போல கிளிக்கூட்டம் பழுத்த மரங்களில் அமரும்தானே, அதைக் கண்டாவது என் நினைவு வருமா? கேட்கிறாள்

மொழியென்னும் ஆடி

This entry is part 3 of 11 in the series கவிதாயினி

ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார், காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற் றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் “மொழியென்னும் ஆடி”

காட்டாற்று வெள்ளம்

This entry is part 4 of 11 in the series கவிதாயினி

அகநானூற்றில் மாசாத்தியாரின் இரண்டு பாடல்கள் [324,384] உள்ளன. இப்பாடல்களில் தலைவன் வரவை நோக்கியிருக்கும் தலைவியின் உணர்வுகளை எழுதியுள்ளார்.
முல்லை நிலத்தில் கார்காலம் வந்து விட்டது. மழை நீரால் நிலம் குளிர்ந்து ஈரமாகிக் கிடக்கிறது. இந்த காலநிலையே இந்தப்பாடல்களின் உணர்வு நிலையாகவும் உள்ளது. ஆனால் தலைவனின் வரவு நோக்கியோ,தலைவன் வந்துவிட்டதாலோ,வராததாலோ,வர வேண்டாம் என்று மறுப்பதாலோ அந்த கார்காலத்தை தலைவி எவ்விதமாக உணர்கிறாள் என்பதே ஒவ்வொரு பாடலின் நிறபேதமாக இருக்கிறது.

காத்திருப்பின் கனல்

This entry is part 5 of 11 in the series கவிதாயினி

இந்தப்பாடலும் நீண்ட நாள் பிரிவைப் பாடும் பாடல். மாமரத்தின் கிளையில் மின்னும் கரியநிறத்தில் குயில் அமர்ந்திருக்கிறது. அந்தக்குயிலை பார்த்தபடி தென்னம் நெய்யிட்டு வாரப்படாத தன் கூந்தலை வருடிய தலைவி பிரிவை நினைத்து கலங்குகிறாள். மாம்பூக்களின் மஞ்சள் நிற மகரந்ததுகள்கள் கரியகுயில் மீது படிந்திருக்கிறது.

இயற்கையை நோக்கியிருத்தல்

This entry is part 6 of 11 in the series கவிதாயினி

இற்றைதிங்கள் அந்நிலவில் 6 கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலக்கவிஞர். இவரின் பாடல்கள் அகநானூறு, நற்றிணை,குறுந்தொகை பொன்ற சங்கஇலக்கிய தொகை நூல்களில் உள்ளன.  இவர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் உள்ள கழார் என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பரை மணந்தார். எயிற்றியார் என்பது குறிஞ்சி நிலப்பெண்ணை குறிக்கும் பெயர். ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் “இயற்கையை நோக்கியிருத்தல்”

தீரத்தின் ஔி

This entry is part 7 of 11 in the series கவிதாயினி

வெள்ளரிகாயின் விதைபோன்ற அரிசி சோற்றை நீரிலிட்டு உண்டு,பரல்கற்கள் உள்ள வெறும்தரையில் படுத்துறங்குவதை விட எனக்கு அந்த பெருங்காட்டின்  ஈமப்படுக்கை தாமரை பூத்த குளம் போன்றது என்கிறாள். கண்கலங்காது கடந்து செல்ல முடியாத பாடல் இது. போரில் கொல்லப்படுவது வேறு. இது வேறு இல்லையா? 

வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும்

This entry is part 8 of 11 in the series கவிதாயினி

பதிற்றுபத்து புறநானூறுக்கும் முந்தைய காலத்தில் எழுதப்பட்டது. பதிற்றுப்பத்தில் எழுதிய ஒரே ஒரு பெண்பால் புலவர்  காக்கைபாடினியாார்.  இவர் ஆடுகோட்பாட்டு சேரலாதனின் அவைப்புலவராக இருந்துள்ளார். இந்தப்பாடல்களில் பாடப்பட்ட சேரலாதன் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் அதே ஔியுடன் காலத்தில் நிற்கிறான். இன்று வாசிக்கும் போதும் அவன் கண்ணி தாழாது நிற்கிறது

சந்தனம் வாடும் பெருங்காடு

This entry is part 9 of 11 in the series கவிதாயினி

சங்ககாலத்தில் இளம் பெண்கள் முருகு பிடித்து விட்டது என்று முருகனுக்கு பலி கொடுத்து குறிகேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு முருகு அயர்தல் என்று பெயர். வழக்கத்துக்கு மாறாக தலைவி சோர்வும் தனிமையும் கொள்வதை  அன்னை கவனிக்கிறாள். அவள் உள்ளம் திடுக்கிட்டு விழித்து குழந்தை பெண்ணானதை உணர்ந்திருக்கும். அவள் அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளிக்கிறாள். வழிபாடு மூலம் எதையோ அறிவிக்கிறாள்.

மறம் பாடுதல்

This entry is part 10 of 11 in the series கவிதாயினி

புறநானூற்றின் போர்ப்பாடலில் மாதவிடாய் பெண்களை உவமையாகக் கூறுமளவிற்கு உவமை அற்றுபோனதோ என்று வாசிக்கும் போது தோன்றியது. செய்யுள் அழகியலில் உவமைச்சிறப்பிற்கு முக்கியமான இடம் உண்டு. எந்த உவமையும் அழகற்றது இல்லை. ஒரு உவமை எந்தப்பாடலில் எந்தப்பொருளில் எங்கு வைக்கப்படுகிறது என்பதே அதன் அழகை தீர்மானிக்கிறது

 சிறுகோட்டுப் பெருங்குளம்

This entry is part 11 of 11 in the series கவிதாயினி

மல்லர் போர் என்பது  எதிர்ப்பவரை குறிப்பிட்ட பொழுது தாக்குதல் நடத்தவிடாது செயலிழக்க செய்தல். அந்த மல்லனின் வீரத்தில் திகைப்புற்று மையல் கொண்ட ஊர், வெளியூரில் இருந்து வந்த மல்லனை வென்றவனாக ஏற்றுக்கொள்வதா.. வேண்டாமா என்று தடுமாறுகிறது. அங்கே கூட்டத்தில் மற்பார் காண வந்த ஒருத்திக்கு அவன் மீது மையல் உண்டாகிறது. அவளும் அவனை  காதலிப்பதா? வேண்டாமா? என்று இருநிலைகளில் அலைகழிகிறாள்.