கோமதியின் திருமணத்தன்று இரவில் நான் சம்பத்துடன்தான் சென்று தங்கினேன். அவனுடைய தகப்பனார் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். மூச்சு விடுவதற்கு நிகராகப் புகை பிடிப்பவர். சம்பத்துக்குத் திருமணமாகிவிட்டால் தேவைப்படும் என்று மாடியில் ஒரு போர்ஷன் எழும்பிவந்த நேரம். வாசலில் குவித்த மணலில் அவர்கள் குடும்பமும் நானும் உட்கார்ந்திருந்தோம். அக்கம்பக்கம் வீடுகள் அதிகம் வந்திராத புறநகர்ப்பகுதி. சம்பத்தின் அம்மா அவனைப் பாடச் சொன்னாள்.அவன் அவ்வளவு நன்றாகப் பாடுவான் என்பதே அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும். பேசும் குரலுக்கும் பாடும் குரலுக்கும் சம்பந்தமேயில்லை – அதைத்தான் கள்ளக்குரல் என்பார்களோ. உண்மையில், சம்பத் பேசுவதுதான் கள்ளக்குரல்; பாடுவது சொந்தக்குரல் என்று பட்டது எனக்கு. எம்க்கேட்டி பாகவதர், நாகூர் ஹனீஃபா பாடல்களை உரத்த குரலில் பாடினான். ’என் ஜீவப்ரியே… ஸ்யாமளா’ என்று ஓங்கி எடுக்கிறான். நான் நடுங்கத் தொடங்கினேன். பொன்னு அங்க்கிள் என்னிடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினார். நான் தயங்கினேன்.
ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
முன்னுணர்தல்
என் முதுகில் அவர் பார்வை முள்போல உறுத்துவதாய் உணர்ந்தேன். இல்லை, முள் இல்லை. துரப்பணம். என் உடம்பில் துளைபோட்டு மறுபுறம் பாயத் துடிக்கிறது அது. வலி இல்லையே தவிர, குடைந்து நகரும் எஃகுக் கம்பியை என்னால் உணர முடிகிறது. பின்னாட்களில் அதற்கும்கூடப் பழகிவிட்டேன். என்றாலும், முதல் தடவை ஏனோ அச்சமும் குடைந்தது….ராவுடைய இரண்டு கண்களையும் பற்றிச் சொன்னேனல்லவா, இரண்டு கைக ளையும் சொல்ல வேண்டும். இடது கைச் சுட்டுவிரல், வாசிக்கும் வரிகளைத் தடவிய வாறு மெல்ல நகர்ந்தது – விரலால் வாசிக்கிற மாதிரி. கடந்துசெல்லும்போது புத்தகத்தின் விரித்த பக்கங்கள் பார்வையில் பட்டன. தொட்டால் ஒடிந்துவிடும்போலப் பழமையின் மஞ்சளேறிய தாள்கள்.
பொம்மை விளையாட்டு
அன்றைய காலைப்பொழுது ஏகப்பட்ட அமளியோடு விடிந்தது. லேசாய்த் தலை வலிக்கிறது; எட்டு மணிக்கு மேல்தான் ஓட்டலைத் திறக்கப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் மாமா. தலைமாட்டில் தலையணை சைஸுக்கு இரண்டு மூன்று புத்த கங்கள் வைத்திருந்தார்.
ஒங்க மாமாவுக்குப் படிக்கிறதுக்கு மூடு இல்லேன்னாத்தான் கடையைத் திறப் பார் பாத்துக்கோ.
என்று முன்னொருதடவை மாமி சொன்னது நினைவு வந்தது.
மாயக் கண்ணாடி
கனவிலருந்து நனவுக்கும் நனவிலருந்து கனவுக்கும் ஓயாமெ ஆடுற ஊசல்தானப்பா மனுச மனசு. இந்த அல்லாட்டம் நிக்கிறதெத்தான், உசுரு போயிருச்சுன்னு மனுசக் கூட்டம் அர்த்தம் செஞ்சுக்குது. வாஸ்தவத்துலெ, டக்குனு ஒரு ஆளெப் பிடிச்சு, ‘அட, எங்கப்பா இருக்கெ நீயி, கனவுலயா நெசத்துலயா’ன்னு கேட்டம்னா, தெகச்சுப் போவான். ஆமா, இங்குட்டு ஒரு காலு, அங்குட்டு ஒரு காலுன்னு ஊணித்தானே மனுசகொலம் நிக்கிது…!
உலகளந்த நாயகி
வைணவப் பெண் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்தது ரெங்கநாயகி. இதற்கெல்லாம் நேரடியாகக் காரணம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் பெயரில் நான் சந்தித்த பெண்கள் அனைவருமே அழகிகள் என்று சொல்லலாம். அதிலும், முதன்முதலாக நான் பார்த்த ரெங்கநாயகி பேரழகி.