பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள்

மறுபடியும் இசை மாறியது. ஏதோ முற்றிலும் புதியதாக – எளிமையானதாகவும், களிப்பூட்டுவதாகவும்- உருமாறியது. அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டதைப் பார்த்து ஸோர்கின் குதூகலித்ததாகத் தெரிந்தது. “பிகாஸ் த வோர்ல்ட் ஈஸ் ரௌண்ட், இட் டர்ன்ஸ் மீ ஆன்,” என்று பாடினார், ஆனால் அவர் பாடியது மோசமாக இருந்தது. “பிகாஸ் த விண்ட் ஈஸ் ஹை, இட் ப்ளோஸ் மை மைண்ட்.”….“இது பீட்டில்ஸ்! யோகோ ஓனோ ஒரு நாள் ‘மூன்லைட் ஸோனாட்டா’வை வாசித்துக் கொண்டிருந்தார், ஜான் லென்னன் சொல்கிறார்: எனக்கு அந்தச் சுர வரிசையைத் தலைகீழாக் கொடு!”

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2

“நீண்ட இழை மேபிள் (மரம்),” என்றார் ஸோர்கின், சுட்டியபடி. “பழைய ஸிட்கா ஸ்ப்ரூஸ் (மரம்). வார்ப்பு இரும்பு. நிக்கல். பதினெட்டு அடுக்குகள் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கின்றன, பார். அது யூரியா ரெஸின் ஒட்டுப் பசை. இதற்கு முன்னால் ஒரு காலத்தில் இதுவே மிருகத் தோல்களிலிருந்து காய்ச்சிய ஊன்பசையாக இருந்தது.”
அவர் கம்பிகளின் மேல் தன் கையைத் தடவினார். “எஃகிரும்பு. கூடவே செப்புக் கம்பியில் சுற்றிய எஃகிரும்பு.”
“இப்ப இங்கே பார்,” என்றார் அவர். “இது அத்தனை சிறப்பு. காஷ்மீர் (கம்பளம்).” அவனுடைய வியப்பைப் பார்த்து அவர் சிரித்தார். “ஆமாம், காஷ்மீர். திருப்பு முனைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.”

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1

காய்கறிகளை வெட்ட உதவும் ஒரு சிறு பலகையையும், சீவுவதற்குப் பயன்படும் கத்தி ஒன்றையும் வெளியே எடுத்தார். சாக்லெட்டின் மீது கத்தியால அழுத்தி வெட்டுமுன்னர், கத்தியை இப்படியும் அப்படியும் நகர்த்தி அலைத்தார், பிறகு ஓரிடத்தில் இலேசாகப் பொருத்தினார். எதனுள்ளும் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதைத் தன் வாய்க்குள் போடுவது அவருக்கு ஏற்காது. கத்தி இறங்கி, சாக்லேட்டுக்குள் காரமெல் இருப்பதைக் காட்டியது. ஒரு பாதித் துண்டை எடுத்து அதைத் தின்றார். அதைத் தின்னும்போதே, சிலர் அந்த சாக்லேட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமலே அந்த சாக்லேட் முழுவதையும் குருட்டுத்தனமாக வாயிலிட்டுத் தின்று விடுவார்கள் என்று நினைக்கவும் அவர் உடலில் நடுக்கம் பரவியது.