ஆர்.எஸ். தாமஸ் கவிதைகள்

அவர்களது கைகளை
என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்
அழுத்தமான கைகள்
அன்பில்லை அவற்றில்,
வலிய வரவழைக்கப்பட்ட
ஒரு மென்மையைத் தவிர.
கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து
வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.

முகநாடகம், மேலெழுந்தபோது

அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.

இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?

50, 20-ஓவர்களென ஒரு நாளைக்குள் கதை முடிந்துவிடும் வகையான வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் உலகில் பிரபலமாகிவிட்ட காலமிது. லட்சோபலட்சம் ரசிகர்களின் கவனம் பெரிதும் இந்தப்பக்கம் இருப்பதால், கிரிக்கெட்டின் மூலமும் பணம்பார்க்க ஆசைப்படும் கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் பார்வையும் இங்கேதான். வருமானமின்றி கடை ஓட்ட முடியுமா என்ன? கிரிக்கெட்டின் சர்வதேசத் தலைமை “இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?”

…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி

அவர் குறிப்பாக எதையும் சொல்லவந்தாரில்லை. தன் வார்த்தைகளின் மூலம் யாரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவோ, எவரையும் மாற்றவோ, நம்பவைக்கவோ முயன்றதில்லை. ”நாயின் மீது கல்லெறிவதுபோல என்மீது கேள்விகளை எறிகிறார்கள். நாய் குரைக்கிறது. நானும் குரைக்கிறேன்! அவர்களோ என் குரைப்பிலிருந்தும் ஏதேதோ அர்த்தம் காண்கிறார்கள்’ என்கிறார்.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியுடனான தன் அனுபவங்களை விவரிக்கிறார் ஏகாந்தன்

பின்னிரவின் நிலா

ஹென்னூர் மெயின் ரோட்டோரமாக உடைந்துகிடந்த பாதசாரிகளின் நடைபாதையில் கால் தடுமாறி நடந்தார் அவர். செருப்புத் தைக்கிறவனும், பிளாஸ்டிக் சாமான் விற்பவனும் அங்கும் இங்குமாகக் கடைபோட்டிருக்க, பெட்டிக்கடை ஒன்று நடைபாதையில் துருத்திக்கொண்டு நின்றது. கொஞ்சதூரம் நடந்து வலதுபுறமாகத் திரும்பி வினாயகர் கோவில் முன் வந்து, வாசலில் இருந்தே ஒரு கும்பிடு போட்டார். பக்கத்து சந்தில் நுழைந்து இடதுபுறம் திரும்ப, வரிசையாக இருந்த கட்டிடங்கள் ஒன்றில் இண்டியாபோஸ்ட்டின் சிவப்பு மஞ்சள் லோகோவுடன் போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. உள்ளே இருந்த தபால்பெட்டியில் கடிதத்தைப்போட்டுவிட்டு வெளியே வந்தார்.

நிஜமாக ஒரு உலகம்

’எதுக்கு இந்த மாபெரும் அறிவு, அங்குமிங்கும் ஓடல், ஓயாத தேடல். விடுறா.. பொல்லாத வாழ்க்கை. சாகாவரமா வாங்கிண்டு வந்துருக்கோம்? இன்னிக்கோ நாளைக்கோன்னு இடர்ற கேசு.. இதுக்குப்போயி எத்தனைப் ப்ரயாசை, எத்தனை அலட்டல்!’  எங்கோ பார்த்துக்கொண்டுத் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான் விவேக்.  அவனையே பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக், கிளாசில் மேல்முட்டும் நுரையை லேசாக ஊதி ஒதுக்கிவிட்டு, சூடான ஃபில்டர் காஃபியில் எழும் வாசனையில் கொஞ்சம் லயித்தான்.

டாம் ஆல்ட்டர் என்றொரு  கலைஞர்

ஹிந்தியின் பல ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு, சத்யஜித் ராய், மஹேஷ் பட், ஷ்யாம் பெனகல் போன்ற தரமான இயக்குனர்களின் படைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் ஆல்ட்டர். அஸ்ஸாமியா, தெலுங்கு, குமாவூன் மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார் டாம் ஆல்ட்டர்.  300 திரைப்படங்கள், நாடகங்கள் என இந்தியக் கலை உலகில் பலவருடங்களாகப் பிரகாசித்த ஆளுமை. … இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் வென்றபின், அமெரிக்கா சென்றது. அதில் டாம் ஆல்ட்டரும் இடம்பெற்றிருந்ததோடு அந்த ஆட்டத்தில் ஆடவும் செய்தார் அவர்! ஆர்வமாக, விஷய ஞானத்துடன் கிரிக்கெட் பத்திகள் எழுதிய அவர், எண்பது, தொண்ணூறுகளில் மதிக்கப்பட்ட கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்போது வந்துகொண்டிருந்த ஸ்போர்ட்ஸ்வீக், டெபொனேர் (Debonair) ஆங்கில இதழ்களிலும், அவுட்லுக்(Outlook) வார இதழிலும் வெளியான இவரது கிரிக்கெட் விமரிசனக்கட்டுரைகள்,  விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

சருகுகள்

’அன்றே நான் இறந்திருக்க வேண்டும். அந்த நாளைக் கடந்திருக்கக் கூடாது. கடந்தேன். ஏன்? ஏன் கடந்தேன்?’ குழம்பினான் அவன். அலைக்கழிக்கும் விதி அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா? இன்னும் அடிபட்டு, மிதிபட்டுத் துடிக்கவேண்டாமா? செய்வதறியாது திணறவேண்டாமா? நாலுபேர் வாயில் பட்டுத் தெறிக்கவேண்டாமா? பைத்தியம் பிடித்து அலையவேண்டாமா? உடனே சொகுசாக செத்துப்போய்விட்டால் எப்படி? 

ஹகீம் ஸனாய் – பாரசீக மெய்ஞானி

சுற்றுச்சுவரினால் மூடப்பட்ட நந்தவனத்தை சுல்தானும் படையும் கடக்க நேரிட்டது. தோட்டத்திலிருந்து மேலெழுந்து வந்த கீதம் – சுல்தானைப் பெரிதும் வசீகரித்தது. தன் தளபதிகள் மற்றும் ஹகீம் ஸனாய் பின்தொடர தோட்டத்தினுள்ளே நுழைந்தான். சங்கீத மயக்கத்தில் இருந்த அவனை, உள்ளே கண்ட காட்சி திணறவைத்தது. ஒரு குடிகாரன். அவனைச் சுற்றிலும் தடதடக்கும் இன்னிசை; நாட்டியம். யாரது என உற்றுப்பார்த்ததில் தெரிந்தது. லாய்-குர் (Lai-Khur) ! சுல்தானின் வருகையை அலட்சியம் செய்ததோடல்லாமல் மதுவை வழங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் கோப்பையை நீட்டினார் லாய்-குர். கூடவே குழறலாக ஒலித்தது அவர் குரல்: ’நிரப்பு கோப்பையை.. சுல்தான் ஒரு குருடன் எனக் கூவியே குடிக்கின்றேன்!’ என்று சொல்லி கோப்பையை நிரப்பிக்கொண்டார்.

ஐபிஎல் -10 : க்ரிக்கெட் கோலாகலம்

200, 230 என்றெல்லாம் அணிகளின் ஸ்கோர்கள் தவ்விய கதைகளைப் பார்த்தால் போதுமா? நூறுக்கும் கீழே அணிகள் நொறுங்கிவிழுந்த ஐபிஎல்-இன் அபத்தக்கதைகளைப் பார்க்கவேண்டாமா? போனவருடம் கீழ்வரிசையில் இருந்த பஞ்சாப் இந்தவருடம் முதல் நாலுக்குள் வரக் கடும் முயற்சி செய்தது. மும்பைக்கெதிராய் 230 போட்டுக் கலக்கிய இந்த அணி, டெல்லியையும் ஒருகை பார்த்தது

அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

தன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார். கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா! நான் உனை அழைக்கிறேன் !’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை. மொழியாக்கம்…

க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்  (பகுதி – 2)

அடுத்த நாள் எங்களோடு ஹோட்டலில் உட்கார்ந்து காலைஉணவு சாப்பிட, எங்களோடு வந்திருந்த க்யூப மொழிபெயர்ப்பாளரை அழைத்தோம். அவரும் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் அதிகாரிகள் அவர் க்யூபன் என அறிந்ததும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்! நாங்கள் குறுக்கிட்டுப் பேசியும் பிரயோஜனமில்லை. அவர் வெளியேறி வேறெங்கோ போய் சாப்பிடுமாறு ஆயிற்று. க்யூபாவின் வெளிஉலகுக்குத் தெரியாத ரகசி்ய முகங்களில் இதுவும் ஒன்று. ஹோல்கின் நகரில் அநேக சிறு பூங்காக்கள், அறிவியல், சரித்திர மியூசியங்கள் உள்ளன. சிறிய விமான நிலையமும் இந்நகரில் இருக்கிறது.

க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்

ஹவானா வியெஹாவின் பிரதான சாலையோரமாக மரங்களின் நிழலில் 2007- ல் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவுச்சிலை ஒன்று இந்திய அரசினால் நிறுவப்பட்டது. அந்த முக்கிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இந்திய கலாச்சார உறவுக் கழகத்தினால் (ICCR), இந்தியாவிலிருந்து கூபாவுக்கென பிரத்யேகமாக அனுப்பப்பட்டது அது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், மற்றும் கலைஞர்களை மதிக்கும் பிரதேசம் லத்தீன் அமெரிக்கா. கூபா அதற்கு விதிவிலக்கல்ல. தாகூர் சிலை திறப்பு விழாவின்போது, பழைய ஹவானாவில் உள்ள ` காஸா த லா ஏஷியா` எனப்படும் `ஏஷியா ஹவுஸ்(ஸ்பானிஷில் Casa de la Asia) பள்ளிக்குழந்தைகளை வைத்து தாகூரின் நாடகம் ஒன்றின் ஒரு அத்தியாயத்தை, எங்களுக்கு நடத்திக் காண்பித்தது. பள்ளிக்குழந்தைகள் உற்சாகமாக அதில் நடித்தது எங்களுக்கு சிலிர்ப்பூட்டிய விஷயம். கூப்ர்களுக்குப் பிடித்த உலக அரசியல் தலைவர்களில் மஹாத்மா காந்தியும் ஒருவர்.

ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்

ஜெனீவா ஏரியின் நடுவில், ஏரி ரோன் நதியை (Rhone River) சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஜெட் தூ (Jet d’Eeu) – தண்ணீரை 200 கி.மீ.வேகத்தில், 140 மீட்டர் உயரத்துக்குப் பீச்சியடிக்கும் பெரிய water jet-மின்ஃபௌண்டெய்ன். வானில் 33000 அடி உயரத்தில் பறக்கையிலும் கீழே தெரியும் இது. ஜெனீவாவின் அதிபிரபலமான சுற்றுலாப்பகுதி. ஏரியின் கரையோரத்தில் பந்துகளை எறிந்து, பந்துகளோடு பந்துகளாக ஓடும் சிறுவர்கள், சிறுமிகள்; கையில் வாக்-மேன், காதில் இயர்ஃபோன், முகத்தில் ஃப்ளேம்-கலர் காகில்ஸ்(goggles) என உல்லாச நடைபயிலும் நங்கைகள்; விதவிதமான மனிதர்கள். `ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே..!` என்றெல்லாம் மனம் தமிழ் சினிமா பாட்டை எக்கச்சக்கமாக எடுத்துவிடும்!

உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா

சோமாலி கரென்சிக்கு அப்போதும் அதிக மதிப்பிருந்ததில்லை. ஒரு அமெரிக்க டாலர் வாங்க சுமார் 180-200 ஷில்லிங்குள் தேவை. கடைவீதியில் கட்டுக்கட்டாக சோமாலி ஷில்லிங் நோட்டுகள் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்த்து ஆரம்பத்தில் மிரண்டிருக்கிறேன். ஒருமுறை அரபுக்கடையில் நிடோ டின் வாங்கிய நண்பர் கோவிந்த் குமார் 20 ஷில்லிங் கட்டுகளில் மூன்றைத் தூக்கி வீசுவதைக்கண்டு பதறினேன். `என்னது! நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே! ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே! நோட்டா இது! ஒரே அழுக்கு, புழுதி. எண்ண ஆரம்பிச்சா தும்மல் வரும்! நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும்! அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே!` என்றார். நல்ல நாடு இது! எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு! – என்று நினைத்துக்கொண்டேன்.

காலாவதியாகிவிட்டதா டெஸ்ட் கிரிக்கெட்?

அக்டோபரில் வரவிருக்கும் ஐசிசி மீட்டிங்கில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான உலக சேம்பியன்ஷிப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது, ஐசிசி தரவரிசைப்படி, உலகின் முதல் இரண்டு இடங்களில் உள்ள டெஸ்ட் அணிகள் சேம்பியன்ஷிப்பிற்காக, ஒரு நடுநிலை மைதானத்தில் (neutral ground) மோதவேண்டும்; இந்த சேம்பியன்ஷிப் போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என ஒரு திட்டம் வலம் வந்துகொண்டிருக்கிறது. இப்போது இருப்பதைப்போலவே இரு நாடுகளுக்கிடையே நடத்தப்படும் டெஸ்ட் தொடர்பற்றிய தேதிகள், ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளே பேசித் தீர்மானித்துக்கொள்ளலாம் எனப் பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது, இரு தரப்பு டெஸ்ட் மற்றும் பிறவகைக் கிரிக்கெட் தொடர் விஷயத்தில் ஐசிசி மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐசிசி உறுப்பினர்-நாடுகள், டெஸ்ட் கிரிக்கெட்டை புதுப்பிக்க, மேலும் புதிய யோசனைகளை சொல்லக்கூடும்.

கிரிக்கெட்: மனதை வசீகரித்த மாயாஜாலம்

அப்போது, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா என்கிற பத்திரிக்கை வந்தது. ஸூப்பர் சைஸ் வாரப்பத்திரிக்கை. கிரிக்கெட் பத்திகளுக்காக லைப்ரரிகளுக்குப்போய் அதைத் தேடிப் படிப்பேன். கிரிக்கெட் சீசனில், ஸ்போர்ட்ஸ்வர்ல்ட் (Sportsworld), ஸ்போர்ட்ஸ்டார் ஆகிய வார இதழ்களை வாங்கிப் படிப்பது வழக்கம். இதுவரை பேரை மட்டுமே கேட்டிருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான, பட்டோடி, வாடேகர், சோல்கர், விஸ்வநாத், கவாஸ்கர், துராணி, இஞ்ஜினீயர், சந்திரசேகர் ஆகியோரின் ஆக்‌ஷன் படங்களை பார்த்ததும் ஏதோ தேவலோகத்து மனிதர்களை தரிசித்த பரவசம் மனசில் பாய்ந்ததை மறக்கமுடியுமா? ‘பாடப் புஸ்தகத்தப் படிக்காம, கண்ட கண்ட புஸ்தகங்களை எல்லாம் வாங்கிப் படிக்கிறான் பாருங்கோ!` -அப்பாவிடம் அம்மாவின் கோழிச்சொல்லல் கிரிக்கெட் ஆர்வத்துக்கு அவ்வப்போது பக்கவாத்தியமாய் அமைந்தது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: புதிய பயிற்சியாளர் – புதிய பாதை

ஐந்து வருடங்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் ஜான் ரைட் அறிமுகப்படுத்திய buddy system என்று அழைக்கப்பட்ட, ஒரு பௌலர்- ஒரு பேட்ஸ்மன் என ஜோடி, ஜோடியாகப் பந்துவீச்சு, பேட்டிங் எனப் பயிற்சி செய்தலை கும்ப்ளே மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். அதே சமயம், நெட்-பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்து இந்திய வீரர்களுடன் அவர்களது பேட்டிங் செய்யும் முறை, பௌலிங் ஆக்‌ஷன் போன்றவைகளில் ஏதேனும் குறை தெரிந்தால், மாற்றம் தேவைப்பட்டால் அதுபற்றி அவர்களுடன ஒன்றுக்கு ஒன்றாய் பேசி, கவனத்தைக் கொணர்கிறார். தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் அவர்களை முறையே பௌலிங் அல்லது பேட்டிங் செய்யவைத்துக் கூர்ந்து கவனிக்கிறார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தீராத பிரச்சினைகள்; இந்திய அணியின் டூர் சர்ச்சைகள்

இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில், ஜிம்பாப்வே போன்ற வலிமையற்ற அணியுடன் மோத நேர்கையில், எதிரணிகள் பொதுவாக, திறமைகாட்டுகின்ற ஆனால் சர்வதேச அனுபவமற்ற வீரர்களை சோதிப்பதற்காக அணியில் சேர்ப்பது வழக்கம். அதைத்தான் இந்திய கிரிக்கெட் போர்டும் செய்தது. அதே சமயத்தில் ஜூலை-ஆகஸ்டில் வரவிருக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 -மேட்ச் டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். அதனால், கிட்டத்தட்ட ஓய்வின்றி இந்தியாவுக்காகத் தொடர்ந்து விளையாடிவரும் அனுபவ வீரர்களுக்கும், அத்தகைய தொடருக்குமுன் போதிய ஓய்வு கொடுப்பது உத்தமம் என நினைத்திருக்கவேண்டும்.

டி—20 கிரிக்கெட்: இந்தியா–ஜிம்பாப்வே தொடர், 2016

இரு அணிகளும் ஆளுக்கொன்றாக வென்றிருந்ததால் தொடர் வெற்றிக்கான மூன்றாவது போட்டி ரசிகர்களிடையே உற்சாகத்தைக் கிளப்பியிருந்தது. இந்த முறை ஜிம்பாப்வே டாஸ் வென்று இந்தியாவை உள்ளே இறக்கியது. துவக்க வீரர் மந்தீப் சிங் மலிவாக வெளியேற கே.எல்.ராகுல் அருமையாக ஆரம்பித்தார். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மட்சிவாவின் வெளியே சீறிய ஒரு பந்தை க்ராஸ்-பேட் செய்ய முயன்று தமது ஸ்டம்ப்பின் மீதே திருப்பிவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பினார். வந்ததும் வராததுமாய் இல்லாத ரன்னுக்காகக் குடுகுடுவென ஓடிய மனிஷ் பாண்டே நேரடித் த்ரோவில் ரன் அவுட்.