உவமைகள் அந்த தீவிரத்தை உணர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மலர்களும் பருவகாலங்களும் மனதை உணர்த்த கையாளப்படுகின்றன.இந்தப்பாடல்களில் ஒருசில பாடல்களைத் தவிர பெரும்பான்மை பாடல்கள் தலைவி தோழி கூற்றாக வருபவை. இல்லத்திற்குள் இருந்து பாடும் பாடல்கள். சங்கப்பாடல்கள் நிகழ்த்து கலைக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படியெனினும் வாழ்வின் சாரத்தை கைக்கொண்ட பாடல்கள்.
Tag: கமல தேவி
பெருமழை காலத்துக் குன்றம்
பரத்தை கூற்றாக வரும் ஒரு பாடலில் பரத்தை தலைவியை கேலி செய்கிறாள். தலைவனை தன்னிடம் இருத்திக்கொள்ள முடியாத தலைவியின் உறக்கத்தை, கவனமின்மையை நீர்நாயின் உறக்கத்திற்கு ஒப்பாக கூறுகிறாள். புதுவருவாயை உடைய வளமான மருத நிலத்தின் பொய்கை நிறைந்திருக்கிறது. அங்கு வாளை மீன்கள் தீட்டிய வாள் போல மின்னி விளையாடி நீருக்குள் மறைகிறது. அவற்றை கவனிக்காமல் அதன் கரையில் பசியோடு நீர்நாய் உறங்குகிறது
நீர்த்துறை படியும் பெருங்களிறு
இந்தப்பாடல்களில் வரும் பெருங்களிறு என்ற படிமத்தையும், தீர்த்தங்காரர்களின் கருணை மற் றும் அகிம்சையை என்மனம் இணைத்துக் கொண்டது . தன் குழுவிற்கான பாதுகாப்பு, வீரம் என்றிருந்து பின் வன்முறையாகி, எடுத்த வாளை வைக்கவிடாது மதம் கொண்ட களிறாக மாறிய இனக்குழுக்கள் தங்களை தாங்களே அழித்துக்கொண்டிருந்த காலத்தில் தீர்த்தங்காரர்கள் தங்கள் கருணையால் அந்த களிரை மெல்ல மெல்ல படிய வைத்திருக்கிறார்கள்.
தளிர் பெருமரம்
இந்த நான்கு பாடல்களும் தலைவனின் பிரிவை பேசுவதாக இருந்தாலும் இவற்றின் தொனி வேறு வேறு. ஒன்று ஆபத்தை நினைத்து அச்சத்தில் தலைவனுக்காக பதறுகிறது. ஒன்று கோடை கால வெம்மையை கண்டு உளம் துடிக்கிறது. மற்றொன்று காதல் வெளிப்பட்டதை நினைத்து வருந்துகிறது. அடுத்தது வானில் தன் பட்டம் ஊரறிய பறப்பதை கண்டு களிக்கிறது
காவிரி சூழ் நாடன்
மிக இளமையில் தன் முதல் போரை வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் எதிர்கொண்டான். வேப்பம்பூ சூடிய பாண்டியனையும் பனம் பூவை சூடிய சேரனையும் வென்ற வீரன் கரிகாலன். பறவைகளும் நாரைகளும் கரும்பு கொல்லைகளையும், நெல் வயல்களையும் கடந்து செல்கின்றன. பின்னர் அங்கிருந்து பூங்கொடிகளும் பகன்றை மலர்கள் பூக்கும் கடற்கரை கொடிகளின் மேலே பறந்து அங்குள்ள புன்னை மரங்களை தங்கும் நாடு காரிகாலனுடையது. தென்னையும் அதன் மறுபக்கம் வழை மரங்களையும் காந்தலும் சுரபுன்னையும் மலரும் நாடு அது.
வேந்தர்களைப் பாடுதல்
பகை நாட்டரசனின் அரண் வலிமையை கூறும்போது அவன் கோட்டையைச் சுற்றியுள்ள அகழி பற்றி கூறுகிறார். கோட்டை பாதுகாப்பு வீரர்களின் கையில் உள்ள தீப்பந்தத்தின் நிழல் அகழியில் விழுந்தால் கூட அதை கவ்விப்பிடிக்கப் பாயும் முதலைகள் உள்ள அகழி என்கிறார். இந்த ஒன்றைச் சொல்வதன் மூலம் அரண் வலிமையை அரசனுக்குச் சொல்லிவிடுகிறார்.
சிறுகோட்டுப் பெருங்குளம்
மல்லர் போர் என்பது எதிர்ப்பவரை குறிப்பிட்ட பொழுது தாக்குதல் நடத்தவிடாது செயலிழக்க செய்தல். அந்த மல்லனின் வீரத்தில் திகைப்புற்று மையல் கொண்ட ஊர், வெளியூரில் இருந்து வந்த மல்லனை வென்றவனாக ஏற்றுக்கொள்வதா.. வேண்டாமா என்று தடுமாறுகிறது. அங்கே கூட்டத்தில் மற்பார் காண வந்த ஒருத்திக்கு அவன் மீது மையல் உண்டாகிறது. அவளும் அவனை காதலிப்பதா? வேண்டாமா? என்று இருநிலைகளில் அலைகழிகிறாள்.
மறம் பாடுதல்
புறநானூற்றின் போர்ப்பாடலில் மாதவிடாய் பெண்களை உவமையாகக் கூறுமளவிற்கு உவமை அற்றுபோனதோ என்று வாசிக்கும் போது தோன்றியது. செய்யுள் அழகியலில் உவமைச்சிறப்பிற்கு முக்கியமான இடம் உண்டு. எந்த உவமையும் அழகற்றது இல்லை. ஒரு உவமை எந்தப்பாடலில் எந்தப்பொருளில் எங்கு வைக்கப்படுகிறது என்பதே அதன் அழகை தீர்மானிக்கிறது
சந்தனம் வாடும் பெருங்காடு
சங்ககாலத்தில் இளம் பெண்கள் முருகு பிடித்து விட்டது என்று முருகனுக்கு பலி கொடுத்து குறிகேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு முருகு அயர்தல் என்று பெயர். வழக்கத்துக்கு மாறாக தலைவி சோர்வும் தனிமையும் கொள்வதை அன்னை கவனிக்கிறாள். அவள் உள்ளம் திடுக்கிட்டு விழித்து குழந்தை பெண்ணானதை உணர்ந்திருக்கும். அவள் அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளிக்கிறாள். வழிபாடு மூலம் எதையோ அறிவிக்கிறாள்.
வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும்
பதிற்றுபத்து புறநானூறுக்கும் முந்தைய காலத்தில் எழுதப்பட்டது. பதிற்றுப்பத்தில் எழுதிய ஒரே ஒரு பெண்பால் புலவர் காக்கைபாடினியாார். இவர் ஆடுகோட்பாட்டு சேரலாதனின் அவைப்புலவராக இருந்துள்ளார். இந்தப்பாடல்களில் பாடப்பட்ட சேரலாதன் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் அதே ஔியுடன் காலத்தில் நிற்கிறான். இன்று வாசிக்கும் போதும் அவன் கண்ணி தாழாது நிற்கிறது
தீரத்தின் ஔி
வெள்ளரிகாயின் விதைபோன்ற அரிசி சோற்றை நீரிலிட்டு உண்டு,பரல்கற்கள் உள்ள வெறும்தரையில் படுத்துறங்குவதை விட எனக்கு அந்த பெருங்காட்டின் ஈமப்படுக்கை தாமரை பூத்த குளம் போன்றது என்கிறாள். கண்கலங்காது கடந்து செல்ல முடியாத பாடல் இது. போரில் கொல்லப்படுவது வேறு. இது வேறு இல்லையா?
காத்திருப்பின் கனல்
இந்தப்பாடலும் நீண்ட நாள் பிரிவைப் பாடும் பாடல். மாமரத்தின் கிளையில் மின்னும் கரியநிறத்தில் குயில் அமர்ந்திருக்கிறது. அந்தக்குயிலை பார்த்தபடி தென்னம் நெய்யிட்டு வாரப்படாத தன் கூந்தலை வருடிய தலைவி பிரிவை நினைத்து கலங்குகிறாள். மாம்பூக்களின் மஞ்சள் நிற மகரந்ததுகள்கள் கரியகுயில் மீது படிந்திருக்கிறது.
காட்டாற்று வெள்ளம்
அகநானூற்றில் மாசாத்தியாரின் இரண்டு பாடல்கள் [324,384] உள்ளன. இப்பாடல்களில் தலைவன் வரவை நோக்கியிருக்கும் தலைவியின் உணர்வுகளை எழுதியுள்ளார்.
முல்லை நிலத்தில் கார்காலம் வந்து விட்டது. மழை நீரால் நிலம் குளிர்ந்து ஈரமாகிக் கிடக்கிறது. இந்த காலநிலையே இந்தப்பாடல்களின் உணர்வு நிலையாகவும் உள்ளது. ஆனால் தலைவனின் வரவு நோக்கியோ,தலைவன் வந்துவிட்டதாலோ,வராததாலோ,வர வேண்டாம் என்று மறுப்பதாலோ அந்த கார்காலத்தை தலைவி எவ்விதமாக உணர்கிறாள் என்பதே ஒவ்வொரு பாடலின் நிறபேதமாக இருக்கிறது.
மொழியென்னும் ஆடி
ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார், காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற் றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் “மொழியென்னும் ஆடி”
பேரன்பை அருளும் துக்கம்
குழந்தை பெறுவதற்காக ‘பேக்கேஜ் மெடிசின்ஸ்’ என்று தனக்கு இல்லாத நோய்க்கெல்லாம் மருந்து சாப்பிடும் நந்தினியிடம் ‘உன் உடம்பு தானே ஊரான் வீட்டுப்பண்டமா’ என்று தோழி கேட்பாள். ஒரு மனித உடல் இயந்திரமாக பார்க்கப்படும் அவலம் இந்த சிகிச்சைகளில் அப்பட்டமாக நடந்தேறுகிறது.
கண்ணாடிப் பரப்பு
அடுத்தநாள் ‘மெகபூபா’ பாடலை மிக மெல்லிய சத்தத்தில் வைத்து தொட்டிக்கு மேலே பிடித்துக்கொண்டேன். வா வா என் அன்பே வாழ்வின் பேரன்பே என்று அலைபேசி அதிர்ந்தது. என்னை போலவே அதற்கும் அந்த ஒலி இனிய அதிர்வாக இருக்குமா என்று தெரியவில்லை. உடனே இந்த மீன் ஆணா பெண்ணா என்று முதன்முதலாக கேள்வி வந்தது. இத்தனை நாள் என்னைப்போலவே அதையும் பெண் என்று நினைத்திருந்தது எத்தனை மடத்தனம் என்று பாடலை நிறுத்தினேன்.
கிஞ்சுகம்
வசிஷ்டர் … .. நிதானமானகுரலில் பேசத்தொடங்கி இறுதியாக, “தசரதன் தன் வேள்வியால் தன்னை எரித்து உண்டாக்கிய பெருந்தீ ராமன். இன்று இளையராணி தொடங்கியிருக்கும் நீண்ட பெருமழையால் அந்த பெரும்வேள்வித்தீ அணையாதிருக்க சீதை உடனிருக்க வேண்டும். சூரியனை அடிவயிற்றில் காக்கும் புவியளித்த வெம்மை சமித்து சீதை. காக்க வேண்டியது அரசகடமை இளவரசே,” என்கிறார்.
தையல்
“சொல்லத் தெரியாம இல்ல லோகு…நம்ம செல்லம் முருங்கமரக்கிளையாட்டம். ஒருமுறியில் ஒடிச்சு நம்மப்பக்கம் வச்சிக்கலாம்…அப்பிடி செஞ்சுட்டு எங்குலசாமி முன்னாடி எப்பிடி போய் நிப்பேன்…”
“குலசாமி எது?”
“பெருமா மல அடிவாரத்து பிச்சாயி…”
“பச்சப்பிள்ளைய கையில வச்சுக்கிட்டு இருக்கறவளா…அதான் நீ இப்படி இருக்குற. எங்கமாறி மருதவீரனா இருக்கனும். குதிரையில தூக்கிப்போட்டுட்டு பறக்கற ஆளு…”என்று சிரித்தாள்.
அமுதம்
வீட்டின் பின்னால் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பார்வதி அரவம் கேட்டு ஓடிவந்து, “டேய்…உன்னப்பெத்தவடா நானு. நாரத்தண்ணியகுடிச்சா பெத்தவக்கூட பொம்பளையா மட்டுந்தான் தெரிவாளா…அவதான் என்னிய வயல்ல கொண்டு போய் போட்டுருங்கன்னா. அதுக்கு உங்கப்பன ஏண்டா அடிச்ச…அவரு எங்கூட இருக்காம உங்களுக்கே பண்ணையாளு வேல செஞ்சுக்கிட்டு வயல்லயே கிடக்கனுமா…” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.
மத்தளம் கொட்ட
மார்பில் மடியில் தோளில் படுத்துறங்க வைத்தவர். எப்பொழுதும் அவர் பக்கத்தில் சாய்ந்தே அமர்ந்திருந்த நினைவு. உண்ணும் போதும் அவரின் பக்கம் தான். வேண்டாம் என்பதை எடுத்து அவர் தட்டில் போடவும் பிடித்ததை கேட்காமல் எடுத்துக்கொள்ளவும் வசதி. கணக்கு வழக்கு பேசும் இவர் யார்?
ரீங்கரிப்பு
“நம்ம வயலா செல்வம்?”
அவர் கொஞ்சம் வெட்கப்பட்டதைப்போல திரும்பிச் சிரித்துத் தலையாட்டினார்.
“நாத்து வுட்டாச்சு போலயே…”
“ஆமாமா… மூணு குழி… இத வாங்கறதுக்குள்ள இந்தச் சென்மம் மாஞ்சுப்போச்சு…”
சாய்ந்துகொள்ள வசதியான பாதங்கள்- வாசிப்பனுபவம்
வாழ்க்கைக்கு துணையாக ஒருமரம் போதும் என்று அடிக்கடித் தோன்றும். முதுகை சாய்த்துக்கொள்ள, அப்படியே கால்நீட்டி கிட்டத்தட்ட படுத்துக்கொள்ள, இலைகளின் சலசலப்புச் சத்தத்தில் அப்படியே உறங்கிப்போக, வெயிலில் நடக்கையில் பின்புறமிருந்து தலைக்கு மேல் விரியும் அம்மாச்சியின் முந்தானையைப்போல நிழல் கவிய நின்றிருக்கும் ஒற்றை மரம் போதும் என்ற ஆசுவாசத்தை, ஒருவரை இன்னொருவரில் கண்டுகொள்ள, பதின்வயதின் புரிந்து கொள்ளமுடியாத பாழ்தனிமையில் விடுதிவாழ்வில் இத்தகைய வெளிச்சத்தை இலக்கியமன்றி எனக்கு எதுவும் தந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
