ஒரு மனிதர். அவரின் பல பரிமாணங்களைப் பற்றிப் பேச முப்பது செயல்முறை விளக்கங்கள். ஒருவரைப் பற்றி முப்பது பேர் பேசப் போகிறார்கள். திரும்பத் திரும்ப அரைத்த மாவையேதான் அரைத்திருப்பார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. முப்பது பேரும் முப்பது விதமாக அவரை அலசி ஆராய்ந்தார்கள். ஒருவருக்குக் கூட அவர்கள் தலைப்பில் கொடுத்த நேரத்தில் பேசி முடிக்க முடியவில்லை. அவ்வளவு விஷயங்களைக் கொட்டித் தீர்த்தார்கள்.
சரணாகதி
அன்பு, பிரியம், பக்தி கலந்து அவன் “கிருஷ்ணை” என்று அழைக்கும்போது, அவள் உணர்வு நரம்புகள் மீட்டப்படும். அவள் மனக்கொடியில் “கிருஷ்ணை” என்ற அவன் வாய்ச் சொல் மலர்ந்து மலர்ந்து தேன்வடிப்பதை, ரகசிய மணமாய் நுகர்வாள். ஆனாலும் அவள் சக்கரவர்த்தினி அல்லவா? அவளால் காதல் படிக்கட்டில் இறங்க முடியாது. அவளால் இறங்க முடியாது என்பதால், இவனால் ஏறவும் முடியாது
இசைப் பயணம் – சங்கீத யாத்திரை
ஆதிசங்கர பகவத்பாதரின் மாத்ருகா பஞ்சகத்தை அவர் அழகுற விளக்கியபோது உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று! சகோதரிகள் பாடியதும் மிகமிக அருமை! திரௌபதி – கிருஷ்ணன் இவர்களுக்கிடையேயான நட்பு பற்றிய விளக்கங்களும் வெகு அருமை! ‘பாரோ கிருஷ்ணைய்ய’ எனும் அருமையான கனகதாசரின் பாடல் நட்பின் வெவ்வேறு நிலைகளைச் சுட்டிக்காட்டியது. சகோதரிகள் இதனைப் பாடியவிதமும் கண்களில் ஈரம் கசிய வைத்தது.
பஞ்சமி
திகில் படங்களைக் கூட பார்க்கத் திராணி இல்லாத பரிமளாவால் பேயைப் பார்ப்பது, அதனால் துன்புறுத்தப்பட்டு மாண்டு போவது என்றெல்லாம் யோசிக்கவே பேரச்சமாக இருந்தது. மரணம் நிகழும் நாளென ஓலையில் குறிப்பிட்டிருந்த திதியான பஞ்சமி என்ற பெயரே அவளுக்கு ஏதோ அமானுஷ்யமான வார்த்தையாகத் தோன்றியது.
யுகமலர் தொடும் மானுட விரல்
“அப்போ அடுத்த கேள்வி, அவரு இத எப்படி சாதிச்சிருப்பாரு? இதுக்கான பதில் நமக்கு நாராயண குரு கிட்ட இருந்து கிடைக்கலாம். நாராயண குருவ ஒரு சீர்திருத்தவாதி, ஆன்மீகவாதினு மட்டும் பாக்காம, அவருக்கு ஒரு தொழில் முனையும் மைன்ட்செட் இருந்திருக்கு, அதை அற வழியில மக்களோட பிரச்சனைகளை தீர்க்க உபயோகப் படுத்தியிருக்கறத நம்மாள தெரிஞ்சிக்க முடியுது”
3. நுண்பொருள் காண்பது அறிவு
தன்னை அறிதல் எங்ஙனம்? நான் இருக்கிறேன் என்பதை ஒருவர் அறிந்து கொள்வதற்கு புறக்கருவிகளின் உதவி அவசியமே இல்லை. நான் என்ற உணர்வு நம் எல்லோருக்குமே சுயமாக விளங்கி வருகிறது. “ஆத்மா ஸ்வதசித்தம்.” நம் யாருக்குமே நம்முடைய இருப்பு குறித்து எந்த விதமான ஐயமும் இல்லை. இங்கு சிக்கல் என்னவென்றால், நாம் எல்லோரும் நம்மைக் குறித்து ஒவ்வொரு விதமாக அறிந்து வைத்துள்ளோம்.
நாவல் றெக்கை– அத்தியாயம் 12
குழுவில் பத்துக்கு ஏழு பேர் இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளராக வலநாடும் மற்றும் ஃபிஜியும், மொரீஷியஸ்ஸும் வந்தவர்களுக்கு அடுத்த தலைமுறை தமிழர்கள். மதறாஸ், மதுரை, நெல்லை, கோவை என்று சுற்றுலாவாகக்கூட மெயின்லாண்ட் போனவர்கள் யாரும் இல்லை. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் அநேகமாக எல்லோரும் தட்டுத் தடுமாறி தாய்மொழி பேசக்கூடியவர்கள்.
மற்றுமோர் அற்புதமான விஷயம் – பகுதி -2
இரவில் ஜன்னலருகே அவள் அமர்ந்தாள். அவளால் தூங்க முடியவில்லை. தன் வாழ்வில் எதிலிருந்தும் இத்தனை பிரிக்கப்பட்டதாக அவள் இதற்கு முன் உணர்ந்ததே இல்லை. தன் கவனத்தைத் திருப்பிக் கொள்ளும் முயற்சியாக, க்ரே வில்லியமுடைய அறையில் மேல் புற மர வேலைப்பாட்டின் கீழே சுவரில் சில சித்திரப் பாணிகளை அச்சிட்டுக் கொண்டிருந்தார். கோதுமையும், சோளப் பூக்களும் கொண்ட துவக்க கால அமெரிக்க வரைவு ஒன்றை அவர் கண்டு பிடித்திருந்தார்.
நெட்பிலிக்ஸ் (Netflix) பிறந்த கதை
இந்த வழக்கின் க்ளைமாக்ஸ் காட்சி 1983 ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அரங்கேறியது. இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் வைத்த ஒற்றைக் கேள்வி இதுவே. “மக்கள் தங்கள் விருப்பம் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கும் VCR ஐத் தடை செய்ய வேண்டுமா?” கேட்பதற்கு எளியதாகத் தோன்றும் இந்தக் கேள்வி, தொழில்நுட்பம், படைப்புரிமை மற்றும் சட்டவரையறை என்ற பல சிக்கல்களைக் கொண்டிருந்தது.
வேலாயுத முத்துக்குமார் கவிதைகள்
விடிகாலை கார்த்திகை மழையில்
முற்றத்து கூடம் நிரம்பிவிட்டது.
மனப்பிறழ்வுற்ற அம்மா
வாரியலால் பெருக்கிக் தள்ளுகிறாள்.
பெருக்கப் பெருக்க நிறைகிறது மழை.
ஓர் கணத்தில் மழையோடு
உரையாடத் தொடங்குகிறாள்
யமுனை சீராகப் பாய்கிறது
“ரவி, உங்களுடைய அந்த நேர்மையான கோபத்தைப் பார்த்து உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு விமர்சகர், ஒரு கவிஞர். வாழ்க்கையை நீதி ,அநீதி என்று பிரித்துப் பார்ப்பீர்கள். அவசியமற்ற மதிப்புகளை வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பீர்கள். நான் விமர்சகன் இல்லை. வாழ்க்கையை நான் அப்படியே எதிர் கொள்வேன் ; அதனோடு ஒட்டிக் கொள்வேன் ; நான்தான் வாழ்க்கை. ரவி, உங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்”
மரங்களின் அகன்ற வலை
தாவரங்கள் மைக்கோரைசல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி உணவைப் பகிர்ந்து கொள்கின்றன என்ற பரவலான நம்பிக்கை இருந்தபோதிலும், சான்றுகள் முடிவில்லாதவை. ஆய்வக மற்றும் கள சோதனைகளில், தாவரங்களுக்கு இடையில் மாற்றப்படும் கார்பன் மற்றும் பிற வளங்களின் அளவு பொதுவாக குறைவாகவே இருக்கும், பெரும்பாலும் மைக்கோரைசல் வேர்களில் இருக்கும். அதாவது பூஞ்சைகள் ஒரு தாவரத்திலிருந்து கார்பனைப் பெறுகின்றன, ஆனால் அதில் பெரும்பகுதி மற்றொரு தாவரத்திற்கு மாற்றப்படுவதற்குப் பதிலாக பூஞ்சையிலேயே இருக்கும்.
என் நண்பன்
“ஊஹூம். பயமாயில்ல. ஆனா, என்னவோ போல இருக்கு. இத்தனை பெரிய மணற்பாங்கு. தூரத்தில் அவ்வளோ பெரிய சமுத்திரம். இப்படி எல்லையே இல்லாமல் இருக்குதேன்னு பார்த்தா மலைப்பா இருக்கு. இத்தனை பெரிய கடவுளின் படைப்பில் நான் எத்தனை அல்பமான சின்னவள்னு தோணுது. இதையெல்லாம் படைச்ச கடவுள் எத்தனை உயர்ந்தவர்னு தோணுது. அவரை ஒரு தடவையாவது பார்க்கணும்னு தோணுது” என்றாள். அவள் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போல மெய் மறந்திருந்தாள்.
தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?
ஒரு தடுப்பூசியில் அதன் முதன்மைப் பொருளான ஆன்டிஜென் (Antigen) தவிர, அதன் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் ‘துணைச் சேர்க்கைகள்’ (Adjuvants & Excipients) மிக முக்கியமானவை. குறிப்பாக, தொற்றுநோய்களைத் தாண்டி இன்று புற்றுநோய் சிகிச்சையிலும் இவை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
நளனும் கார்கோடகனும்
நளனும் நடந்தான். ஆனால் பத்தாவது காலடியில் அந்த நாகம் அவனைக் கொட்டியது. உடனே நளனுடைய உருவம் மெள்ள மெள்ள மாறியது. அந்த நாகம் தன் இயல்பான உருவை எடுத்துக் கொண்டது, ஆனால் நளன் தன் இயல்பான உருவை இழந்தான். கார்கோடகன் சொன்னது: நள மகாராஜா, உன் அழகை தான் இழந்தாய். வருத்தப் படாதே. அந்த கொடியவர்கள் உன்னை அடையாளம் காண முடியாது. உன்னை ஏமாற்றியவர்கள் இன்னமும் உன்னைத் தேடுகிறார்கள்.
காகமும் அழகு
வீதிகளில், கூரைகளில், நிலத்தில் வெண்பனி போர்த்தப்பட்டிருக்கிறது. கண்ணுக்கு எட்டியவரையில் எங்கும் வெண்மை தெரியும் அந்தப் பனிக்காலத்தின் காலையில், அந்த வெள்ளைப் பரப்பின் மேல் கருமை நிறக்காகம் அமர்ந்திருப்பது பாஷோவுக்கு அழகாகத் தோன்றுகிறது. காகம் வெள்ளை நிறப் பின்னணியில் அமர்ந்திருக்கையில் கருப்பு வெள்ளை நிறபேதம் காட்சியழகைக் கூட்டுகிறது. பொதுவாக விரும்பப்படாத காகமும், அந்தக் காலையில் காட்சியழகுக்காக விரும்பப்படுகிறது.
தெய்வநல்லூர் கதைகள்- 31
ஆனால் அந்த விடுமுறை ஒரு வதையாக மாறிப்போனது. புதன்கிழமையிலிருந்து பொங்கல் விடுமுறை ஆரம்பம் என்ற மகிழ்வில் விடிந்த ஒரு திங்கள்கிழமை காலை ஊரின் பொது இடங்கள் சிலவற்றில் கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களை ஒத்த ஆண்,பெண் உருவங்கள் உடலுறவின் எல்லா நிலைகளையும் முயற்சிப்பது போன்ற கரிக்கோடு ஓவியங்கள் தென்பட்டன. அதில் ஆணுக்கு நேராக பிரேம், பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் பெண் படத்துக்கு நேராக சங்கீதா, பத்தாம் வகுப்பு, அ பிரிவு, தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தது.
வெனிசுவேலா: மோதலின் நடுவில் நிற்கும் நாடு
வெனிசுவேலாவின் மகத்தான எண்ணெய் இருப்பு, சீனா, ரஷ்யா, ஈரான், கியூபா போன்ற நாடுகளுடனான அதன் கூட்டணி, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களுக்கு முரணாக இருப்பதாலேயே அமெரிக்கா அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச அளவில் விமர்சித்தாலும் அமெரிக்க பாதுகாப்பும் வெனிசுவேலா அரசின் முறையற்ற நிர்வாகத்தையும் கவனத்தில் கொண்டே மதுரோ நாடு கடத்தப்பட்டதாக வெள்ளைமாளிகை கூறி வருகிறது.
கோசின்ரா கவிதைகள்
பாம்பு
உரித்த சட்டை அங்கேயிருந்தது
எந்தப்பாம்பும்
அதை அணிய
எடுத்துக்கொண்டு போனதில்லை
ஒரு பாம்பின் சட்டையை
இன்னொரு பாம்பு அணிவதில்லை
அகவாழி
ஆழமறிய இயலாத ஆழ்கடலென அகவய மனித மனங்களின் கடலாகவும் எங்கும் பரந்து எல்லாவற்றையும் ஏந்தி, எல்லாவற்றையும் எல்லோருக்கும் தரும் புறவய அருட்கடலாகவும் ‘கடல்’ இருமுகங்காட்டி நிற்கிறது. அதன் முதல் முகம் லூசிஃபருக்கும் இரண்டாம் முகம் கிறிஸ்துவுக்கும் உரியது என நாம் கருதலாம். கடலின் முதல் முகம் மானுடத்தையும் அழிக்கவும் இரண்டாம் முகம் மானுடத்தைத் திளைக்கவும் செய்கிறது.
பெல்லா தார் – இரங்கல்
தாரின் முத்திரை என்பது நுட்பமான நீண்ட காட்சிகள், காலத்தை அதன் மூல வடிவில் எதிர்கொள்ள நம்மைப் பணிக்கின்றன. கில்லெஸ் டெலூஸ் முன்வைத்த கால-பிம்பம் எனும் கருத்தாக்கத்தோடு ஆழமாகத் தொடர்புடையது அவரின் திரைமொழி. இங்கே சினிமா என்பது ஒரு செயலைத் துரிதப்படுத்துவது அல்ல, மாறாக காலத்தை அதன் போக்கில் சுதந்திரமாக விட்டுவிடுவது. ஹான்ஸ்-ஜார்ஜ் கடாமர் கூறுவது போல், கலை என்பது வெறும் தகவலல்ல, அது அனுபவத்தின் வழியே கிட்டும் ஒரு தரிசனம்.
