தையல் சாமியார்

சைலண்ட் மோடில் போட்டு வைத்திருந்த செல் விர் விர்ரென்று அதிர்ந்தது. அப்போதுதான் வரத் தொடங்கியிருந்த தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு போனை கையிலெடுத்தேன். ஞாயிறு மதியம் இரண்டரை மணிக்கு போன் செய்து கூப்பிடுபவர்கள் யார் என்ற எரிச்சலுடன் எடுத்துப் பார்த்ததும் சகல புலன்களும் உடனடியாக சுறுசுறுப்படைந்தன. ஏனென்றால் அழைப்பு ராமநாதனிடமிருந்து. “தையல் சாமியார்”

ஜனநாயகத்தின் வழிகள்

இன்று தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலம். 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் 20,450 கண்டன ஆர்ப்பாட்டங்களும் அடுத்தபடியாக பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் முறையே 13,059 மற்றும் 10,477 ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. இவற்றில் கணிசமான அளவிலான போராட்டங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தே இங்கு நடத்தப்படுகின்றன. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்களை கேட்காமலேயே திட்டங்களை அமல்படுத்திடுகின்றன என்றும், அவை தமிழக நலன்களுக்கு எதிரானவை… இப்போது எட்டுவழிச் சாலை, கோவையின் குடிநீர் விநியோகம் தனியார்ப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், மக்களுக்கே தெரியாமல் கொண்டு வரப்படுகின்றன என்றும், இதற்கு முன்கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் குழாய்கள் பதிக்கும் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டம், நீட் நுழைவுத் தேர்வு முதலிய பிற திட்டங்களும்…

ரணங்கள்: ஃ பிர்தவுஸ்  ராஜகுமாரன்

This entry is part 29 of 48 in the series நூறு நூல்கள்

இந்த படைப்பின் பலம் என்பது, கோவையில் 80களின்  பிற்பகுதிகளில் தொடங்கி தொடர்ந்து சந்தேகத்தோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டு, பல்வேறு அவஸ்தைகளுக்காட்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கும் எளிய  இஸ்லாமியர்கள் பற்றி அது அளிக்கும் சித்திரம். நாவல் துவங்குவதே அத்தகைய ஒரு எளிய பெண்ணான நூர்ஜகானின் ஒரு நாளில்தான். நூர்ஜகானைப் போலவே, காதர்ஷா, காஸிம்  பாய், அஹமது ராவுத்தர், ஜமால் அஹமது ராவுத்தர் போன்ற எளிய மனிதர்களின் அவஸ்தைகளை வாசிப்பவரின் மனதை பிசையும்படி விவரித்திருப்பதுதான்.

ஈரம்

”காத்தால சமையல் உள்ள போய் லைட்டப்  போடும் போதே, கால்ல ஏதோ விறுவிறுன்னு ஊறின மாதிரி இருந்தது.  பாத்தா, மேடையில, தண்ணிப் பாத்திரத்தை சுத்தி, பழைய சாதம் வெச்ச பாத்திரத்தை சுத்தின்னு, ஏகப்பட்ட எறும்புக மொச்சுண்டு  இருந்தது, பகீல்னுது. இருந்த எறும்புப் பொடியத் தூவிட்டு, எங்கிருந்து வந்துருக்குன்னு பாக்கப் போனா,  இதோ இங்கேருந்துதான்,” என்று புழக்கடையில் கிணறு இருந்த இடத்தைக் காட்டினார். அங்கேதான், அந்த இடத்துக்கு அருகில்தான், அவர்கள் நின்று  கொண்டிருந்தார்கள்.மெதுவாக நானும் சேர்ந்து கொண்டு குனிந்து பார்த்தேன். அந்த இடத்தில், கிணற்றை மூடிய இடத்தில், ஒரு சின்ன பிளவு இருந்தது

சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி

This entry is part 31 of 48 in the series நூறு நூல்கள்

 வேணுகோபாலின் சொந்த  ஊர் போடி பக்கம் என்றாலும் தற்போது பல ஆண்டுகளாக கோவையில் வசித்துவரும் அவர் தன் வசிப்பிடத்துக்கு மிக அருகே நடைபெறும் இந்த மனித மிருக மோதல்களை, குறிப்பாக, மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் காரணமாக நடந்து வரும் மோதல்களை மையமாக்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.

வெண்முரசு நாவல் – சொல்வளர்காடு – ஒரு பார்வை

பாண்டவர்களுக்கு பெரும் அவமானத்தில் முடியும் சபாபர்வத்தின் பின் வாசகன் மனதில் எழும் கேள்வி ஒன்றுண்டு. இந்த அவமதிப்பை, கீழ்மையை, அதையும் தாண்டி, பாண்டவர்களுக்குள்ளும், திரௌபதிக்கும் அவர்களுக்கும் இடையேயும் உருவாகும் மன வேற்றுமையை அவர்கள் எப்படி கடந்து சென்றிருப்பார்கள் என்பதும், ஒவ்வொருவருக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டதாக மாறியிருக்கும் என்பதே  கேள்வி. அதற்கு மூல நூலில் பெரிய விளக்கமில்லை. அவ்வப்போது  பீமனும், திரௌபதியும் வெளிப்படுத்தும் சீற்றங்களைத் தவிர கிட்டத்தட்ட எதுவுமே நடக்காதது போலவே அவர்கள் தங்கள் வீழ்ச்சியைக் கடந்து செல்கின்றனர். ஆனால் சொல்வளர்க்காடு நாவலின் ஒரு முக்கியமான அம்சம், திரௌபதி தர்மனிடம் கொள்ளும் விலக்கமும், அதை எதிர்கொள்ள முடியாத அவரது தவிப்பும், பின் அதைக் கடக்க தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளுதலும் ஆகும்.

நிறைவடையத் தவறிய மாபெரும் சாத்தியங்கள் – சோ. தர்மனின் ‘சூல்’

சோ.தர்மனின் சூல் நாவலைப் பற்றி எழுதப்போனால், அதன் முன்னுரையில், அவர் அந்த நாவலைப் பற்றிக் கூறுவதை ஒரு வழிகாட்டியாகக் கொள்வது அவசியம். அதில் அவர் ரஷிய அதிபர் ப்ரியெஸ்னேவ் (Brezhnev) சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ப்ரியெஸ்னெவ் காலத்தில்,சரியாக இன்னமும் 10 நாட்களில் மழைக்காலம் துவங்க இருப்பதால், இந்தப் பயிருக்கான விதையை,இவ்வளவு ஆழத்தில், விதைக்க வேண்டும் என்று சோவியத் அரசாங்கத்திடம் இருந்து ஒரு உத்தரவு வருகிறது. விவசாயிகள், அப்படியே செய்கிறார்கள். ஆனால்,பத்து நாட்களில் மழை துவங்கவில்லை.எல்லாப் பயிர்களும் காயந்து விடுகின்றன. அதை அதிபர் விமானத்திலிருந்து பார்வையிடும்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் பயிர் விளைந்து இருப்பதை பார்க்கிறார். உடனே அந்த உழவரை அழைத்து கேட்கிறார் என்ன நடந்தது. அதற்கு அவர் சொல்கிறார், ’நீங்கள் 10 நாட்களில் மழை துவங்கும் என்பதால், 4 அங்குல ஆழத்தில், விதைக்க சொன்னீர்கள். ஆனால்…

பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் திகழ்ந்த ஒருவர் உண்டு. அவர்தான் பல்வான்கர் பாலு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்த முதல் தலித் ஆட்டக்காரர் அவர்தான். ஏன் இவரை முன்னோடி என்றும், சொல்லப் போனால் ஆகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது சாதனைப் புள்ளிவிவரங்களே சாட்சி. … 1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் (சாமர் வகுப்பில்) குடும்பத்தில் பிறந்தவர் பல்வான்கர் பாலு. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார். அவர் பூனாவின் பார்சி இனத்தவருக்கு சொந்தமான கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அதன் ஆடுகளத்தை பராமரிக்கும் வேலையில் இருந்ததாகவே அவரைப் பற்றிய முதல் தகவல்கள் சொல்கின்றன. அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு பந்து வீசவும் செய்த பாலுவுக்கு மாதம் 3/- ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

‘தமிழ்நாட்டில் காந்தி’ – தி. சே. சௌ. ராஜன்

அம்பேத்கருக்கு நேரடியான எதிர்வினை என்றில்லாமல் காந்தியின் அரிஜனத் தொண்டு குறித்து 1944ல் தமிழில் ஒரு நூல் வெளிவந்தது. அது தி. சே. சௌ. ராஜன் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி”. புகழ்பெற்ற புனே ஒப்பந்தத்துக்குப் பின் காந்தி தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாட்டில், மாட்டு வண்டி, கார், ரயில், என்று பலவிதங்களில் பயணம் செயது 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்திக்கிறார். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் அவரை நேரில் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் செய்திருக்கிறார்கள். சென்ற இடங்களிலெல்லாம் தீண்டாமை ஒழிய பாடுபடுமாறு மக்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார் காந்தி.

அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரியில் காந்தியோடு இந்த பயணத்தில் இணைந்து கொள்கிறார் ராஜன். அங்கு தொடங்கி, காந்தியுடனேயே பயணம் செய்து, அவரது உரைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்கிறார். காந்தியின் நிழல் போல அவரைத் தொடர்ந்து சென்ற அந்தப் பயணத்தின் கதையை மிக சுவாரசியமாய் பதிவு செய்திருக்கிறார் ராஜன்.

உலக வரலாறு, ஆறு கோப்பைகள் வழியாக..

உலகின் முழு வரலாற்றை ஒரு ஆறு கோப்பைகள் வழியாக சொல்லிவிட முடியாதுதான். அதுவும், இந்த நூல் முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து மேற்காய் இருக்கும் உலகின் வரலாற்றையே அதிகமும் விவரிக்கிறது. முழுமையான வரலாறு என்று இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை மிக சுவாரசியமாய் விவரிக்கிறது. மேலே சொன்ன கார்ல் பாப்பரின் கூற்றைப்போல எல்லா வரலாறும் பெரும் வரலாற்றின் ஒரு அம்சத்தைப் பற்றியதுதானே?

வெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை

வெண்முரசின் பலங்களான அழகிய மொழி நடை, உவகையூட்டும் புதிய சொல்லாக்கங்கள் இந்த நாவலிலும் ஏராளமாக உண்டு. ஜெயமோகனின் பாரத நாவல்கள் எல்லாவற்றுக்குமே பொருந்தப்போகும் அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முந்தைய கட்டுரைகளில் நிறையவே சொல்லியுமிருக்கிறேன். இன்றும் அவை ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே, தற்போதைக்கு அதைப் பேசாமல், நாவலின் பொருள் குறித்தும் அமைப்பு குறித்தும் பேசுவது அவசியமாகிறது.

விம்பிள்டனை எதிர்நோக்கி

இன்று தர வரிசையின் முதல் பத்தில் இருப்பவர்களில், 25 வயதுக்குக் கீழே இருப்பவர் ஒரே ஒருவர்தான். முதல் ஐந்து வீரர்கள் அனைவரும் 28 வயதைக் கடந்தவர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் பெடரருக்கு வயது 34.. ப்யான் போர்க் 11 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வென்று ஓய்வு பெற்றபோது அவருக்கு வயது 26 தான் என்பதைப் பார்க்கும்போது இன்று டென்னிஸ் எவ்வளவு தூரம் வயதானவர்களின் விளையாட்டாகிவிட்டது என்பது தெரியும். அதனாலேயே அதன் பிரபல்யமும் சற்று குறைந்து விட்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது. 16 வயதில், விம்ப்ள்டனும் 19 வயதில் அமெர்க்க ஒபனும், தன் 20 வயதிற்குள் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று விட்ட பெக்கர், சாம்பிராஸ், போர்க் போன்ற இளம் வீரர்கள் இன்று எங்கே?

புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’

This entry is part 41 of 48 in the series நூறு நூல்கள்

மூவரின் குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதையும், அவர்களோடு இணையும் இன்னும் சிலரது கதையுமே இந்நாவல். இந்த மூன்று பாத்திரங்களையுமே , தமிழகத்தின் முக்கியமான வகை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்துப் படைத்திருக்கிறார் ஆசிரியர். மாறிவரும் காலத்தை சரியாகக் கணித்து விவசாயத்திலிருந்து, தொழிற்சாலைக்கு மாறும், காங்கிரஸ் மீது பற்று கொண்ட தேசிய முதலாளி ஆகும் கஸ்தூரிசாமி, திராவிட இயக்கச் சிந்தனைகளின் மீது பற்று கொண்டு, தமிழ்ப் பற்றும் கலை இலக்கிய ஆர்வமும் கொண்ட ஒரு லட்சியவாதியான ராஜு, தொழிற்சங்க நடவடிக்கைகளினால் ஈரக்கப்பட்டு, தொழிற்சங்கத்தின் கட்டுப்பாடு மிக்க வீரரான இடது சாரிப் பார்வைகொண்ட ஆரான் … இந்த மூன்று இயக்கங்களும் தான் தமிழ்நாட்டின் தலைவிதியை சுதந்திரத்துக்கு பின் தீர்மானித்தன எனும்வகையில் …

வெய்யோன் வரை

வெண் முரசு மீது இதுவரை அதன் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசும் விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகள் (critical review ) வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முதல் நூலான முதற் கனல் ஓரளவு இத்தகைய கவனம் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நூல்கள் இன்னமும் நல்ல விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பதாகவே படுகிறது. இந்திராபார்த்தசாரதி,நாஞ்சில் நாடன், மற்றும் பி.ஏ கிருஷ்ணன் ஆகியோர், முதற் கனல் குறித்து கருத்து கூறியிருக்கிறார்கள். மற்ற புத்தகங்கள் குறித்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.

மணி பத்மம் – ஆபிரகாம் எராலி

இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, இந்த மேற்கத்திய நாகரிகங்களுடன் இந்தியாவுக்கு இருந்த வணிக உறவுகள் இந்தியாவில் கொண்டு குவித்த செல்வ வளம். வர்த்தகம் உலகமயமாகும் போக்குக்கு இன்றும் இந்தியாவில் எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அன்றைய அறியப்பட்ட உலகத்துடன் இந்தியா தொடர்ந்து வணிக உறவுகள் கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது என்றும், அது கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது என்றும் ஒரு முடிவுக்கு எராலி வருவது வியப்புக்குரிய செயல். ஆனால் அதில் பிழை இல்லை என்றே தோன்றுமளவுக்கு அவர் அதை தர்க்க ரீதியாக நிறுவுகிறார்.

சின்ன அண்ணாமலையின் இரு நூல்கள்- 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்', 'கண்டறியாதன கண்டேன்'

அப்போது ராஜாஜியுடன் இருக்கிறார் ஒருவர். அவர் கேள்வி கொண்ட பார்வையுடன் ராஜாஜியைப் பார்க்க, ராஜாஜி அவரிடம், “வந்தவர், ஸ்ரீ சிவஷண்முகம் பிள்ளை. ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். என் கேள்விக்கு அவர் தன் பிறந்த வகுப்பைக் காட்டி ஒரு பலவீனமான காரணத்தைச் சொல்வாரோ என நினைத்தேன். அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தன் பலத்தைச் சொல்லி ஆதரவு கேட்டார். நிச்சயம் அந்தப் பதவிக்கு இவர்தான் தகுதி என்று உறுதி செய்து கொண்டேன்” என்கிறார்.

சேவாக் ⊕ முல்தானின் சுல்தான்

சிறந்த மட்டையாளராக ஆவதற்கு இள வயதிலிருந்தே பயிற்சியாளர்கள் மட்டையாளர்களை. V யில் ஆடச் சொல்லுவது வழக்கம். இந்த V என்பது,மட்டையாளரின் காலடியில் தொடங்கி, மிட் ஆன், மற்றும் மிட் ஆப்.என்ற நிலைகளுக்கு இரு கோடுகள் போட்டால் வருவது. பந்தை இந்த V க்குள் மட்டுமே செலுத்தி ஆட முயற்சிக்கும் போது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் குறையும் என்பதே அதன் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் தனிச் சிறப்புவாய்ந்த சேவக் போன்ற மட்டையாளர்களுக்கு இது பொருந்தாது. அப்படிச் சொல்லும்போது இதையும் சொல்ல வேண்டும்; சேவாக்கிற்கும் ஒரு V உண்டு…

வி ராம்நாராயணன் – ஒரு முதன்மை மனிதனின் கிரிக்கெட் நினைவுகள்

நான் கவனித்த தமிழ்நாடு- ஐதராபாத் ஆட்டங்களில் தமிழகத்தின் தோல்விக்குக் காரணமான ஒரு பந்து வீச்சாளர் வி.ராம்நாராயண். தமிழ்நாட்டுக்கு வெங்கட்ராகவனும், வி.வி. குமாரும் என்றால், கர்நாடகத்துக்கு பிரசன்னாவும், சந்திரசேகரும். ஆனால், ஹைதராபாத்துக்கு என்றால் என் நினைவில் வி.ராம்நாராயண் மட்டும்தான். கர்நாடகத்தின் பிரசன்னா, சந்திரசேகர் போன்ற ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிவிடும் தமிழக மட்டையாளர்களான வி. சிவராமகிருஷ்ணன், டி .ஈ. ஸ்ரீநிவாசன், ஜப்பார் ஆகியோர் ஏனோ ராம்நாராயணிடம் பதுங்கினர். அப்போது அவர் ஒரு இடதுகை சுழல் பந்து வீச்சாளர் என்றே நினைத்திருந்தேன்.

மதுவிலக்கு சாத்தியங்களும் நிதர்சனங்களும்

கடந்த சில வருடங்களாகவே, பல சமூக ஆர்வலர்கள், சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து மதுவிலக்கு பற்றி பேசி வந்தாலும், தமிழ்ச் சமூகத்தில் சமீபத்தில் நடந்த பள்ளி மாணவி மதுவருந்தி மயங்கிக் கிடந்த வீடியோ, 4 வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் காட்சி இன்னும் வேறு சில காட்சிகளும் இந்த மதுவிலக்கு வேண்டும் எனும் எண்ணத்திற்குப் பெரும் வலுவைச் சேர்த்திருக்கிறது.

எம்எஸ்வி – ஓர் அஞ்சலி

எழுபதுகளில் நான் மேலே சொன்ன கே பாலச்சந்தர் படங்களின் பாடல்களிலும் சரி, எம்ஜிஆர், சிவாஜி படப்பாடல்களிலும் சரி, எம்எஸ்வியின் இசையமைப்பில் செவ்வியல் தன்மை அதிகரித்து செமி-கிளாசிகல் என்று சொல்லக்கூடியப் பாடல்கள்தான் அதிகம் வந்தன. அபூர்வ ராகங்கள், மன்மத லீலை போன்ற படங்களின் பாடல்களும், எம்ஜிஆர் படங்களின், நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, இதுதான் முதல் ராத்திரி, என்ன சுகம் என்ன சுகம், கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் போன்ற பல பாடல்களும் செமி கிளாசிகல் என்ற வகையைச் சேர்ந்தவை. சிவாஜி படங்களிலும், அன்பு நடமாடும் கலைக் கூடமே, அம்மானை அழகு மிகு கண்மானை, செந்தமிழ்ப் பாடும் சந்தனக் காற்று, காதல் ராஜ்ஜியம்,ஆகாயப் பந்தலிலே போன்ற பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தப் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றாலும் நுட்பமாக விவாதிக்கப்பட்டு ரசிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு நான் காணும் காரணம், அறுபதுகளில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை தமிழகத்தில் நிலவி வந்த கர்நாடக இசை மீதான ஒருவகை ஒவ்வாமையும் அலட்சியமும்தான். சற்றுத் துணிந்து சொல்வதானால், அறுபதுகளில் உச்சத்தை அடைந்த பார்ப்பன வெறுப்பின் ஒரு பகுதியாகவே கர்நாடக இசையும் ஒதுக்கி வைக்கப்பட்டது.

ஆர் அபிலாஷின் நாவல்-'ரசிகன்'

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு புது ஹீரோவும் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கான வளர்ச்சிப் பாதையில் ஒரு குறிப்பிட்ட ரோலை கட்டாயம் செய்திருப்பார். அது, தன் தாயைக் கொன்று தங்கையைக் கெடுத்து குடும்பத்தை அழித்தவனை பழிவாங்கும் பாத்திரம். இதற்கு விதிவிலக்குகள் உண்டு எனிலும், இதை ஒரு பொதுவிதியாகச் சொல்லுமளவு நம் நாயகர்கள் கணிக்கக்கூடிய பாதையில்தான் பயணித்திருக்கின்றனர். இதைப் போலவே தீவிர தமிழ் இலக்கியத்தில் அநேகமாக எல்லா எழுத்தாளர்களுமே ஒரு சீரழிந்த அறிவுஜீவி/ கலைஞன் குறித்த நாவலோ அல்லது சிறுகதையோ எழுத வேண்டும் என்று இருக்கிறது போல. சு.ரா ஆரம்பித்து, ஜெயமோகன் தொடர்ந்து, ராமகிருஷ்ணன் மற்றும் பலர் எழுதியது இப்போது அபிலாஷின் முறை.

எம்.கோபாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

என்னைப் பொறுத்தவரையில் எல்லா மட்டங்களிலுமே தொழிற்சங்கங்கள் வலுவிழந்துவிட்டன என்றுதான் தோன்றுகிறது. திருப்பூரும் அதில் விதிவிலக்கல்ல. ஆனால் திருப்பூரில் பனியன் தொழிலாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை அமைத்துக் கொடுத்ததில் தொழிற்சங்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தொழிலாளர்களுக்கு இன்று சாத்தியமாகும் ஒவ்வொரு விஷயத்திலும் சங்கங்களின் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்று. இன்றும் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் நடக்கிறதா என்ற கேள்விக்கு அவசியமே இல்லை. மணல்கடிகை நாவலில் இதைப் பற்றிய எனது பார்வை தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

வெண்முரசு – ஒரு பார்வை

எத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்). ஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளை பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது.

விட்டல் ராவ் – ஓர் ஆளுமை மற்றும் இரு நூல்கள்

அதேபோல் ஹோசூரில் kenilworth castle என்ற ஒன்று இருந்தது மிக அழகாக இதில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள அதே பெயருள்ள கோட்டைப் போலவே இங்கும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி தன காதலிக்காக கட்டினான் என்பதும் காதலில் ஏமாற்றம் அடைந்தபின் தன நாயை சுட்டுக் கொன்றுவிட்டு அந்தக் கோட்டையிலேயே தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதும் அந்தக் கெனில்வொர்த் கோட்டைக்கு ஒரு காவியத் தன்மை தருகின்றன.

வந்தாரங்குடி புத்தக விமரிசனம் – வாசகர் எதிர்வினை

ஆனால் இந்தப் போராட்டத்தை கண்மணி முற்றிலும் வன்னிய சாதியினரின் போராட்டமாக சுருக்கித்தான் விட்டார், வன்னியரல்லாத சமூகங்கள் இந்த நிகழ்வை எப்படி எதிர் கொண்டன என்பது குறித்த பதிவுகளே இந்த நாவலில் இல்லை.

சன்னமான குரல்

“எனக்கு….இந்த ஆன்மீகம், தேடல் போன்ற வார்த்தைகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனா அந்த மாதிரி வார்த்தைகளே எனக்குக் கொஞ்சம் பயம். பாருங்கோ, நான் ஒரு நல்ல டூத் பேஸ்டையே ரொம்பக் காலமா தேடிண்டிருக்கேன் அதுவே இன்னும் கிடைச்ச பாடில்ல, இதுல ஆன்மிகமெல்லாம்எப்படித் தேடறது”.

ஒரு மாபெரும் தேடல்

இந்த நூல் பிரமிக்கத்தக்க புள்ளிவிவரங்கள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பாக இருக்கிறது. பொதுவாகவே நம் அனைவருக்கும் கடந்துபோன பொற்காலத்தைக் குறித்த ஒரு மயக்கமும் நமக்குப் பின்னால் வருவது ஒரு பேரழிவே என்ற எண்ணமும் உண்டு. இந்த மனநிலையை மிகக் கறாரான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிராகரிக்கிறது இந்நூல். உதாரணமாக, 1776ல் ஆதாம் ஸ்மித், ஒரு சராசரி ஆங்கிலேயன் பண்ணைத் தொழிலாளி என்றும் அவனது வாழ்க்கைத் தரம் ஒரு ரோமானிய அடிமையின் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்ந்ததல்ல என்றும் குறிப்பிடுவது இந்நூலில் நினைவு கூரப்படுகிறது.

எல்லைகளுக்கு அப்பால் – குல்திப் நய்யார் சுயசரிதை குறித்து

தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் ஒரு பிரபல மருத்துவரின் மகனாகப் பிறந்த நய்யார் லாகூர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளிவந்தவுடன் இந்தியப் பிரிவினைக்கு ஒரு நேரடி சாட்சியாக இருக்க நேரிடுகிறது. தாமும் தம்குடும்பமுமே அகதிகளாக இந்தியாவுக்கு வந்து மற்ற எத்தனையோ எண்ணற்ற அகதிகளைப்போல் தம் வாழ்வையும் புதிதாக ஆரம்பிப்பதிலிருந்து துவங்குகிறது இந்தச் சுயசரிதை. சியால்கோட் நகரிலிருந்து டெல்லிக்கு வரும் வழியில் தங்களது அனைத்தையும்க ணப்பொழுதில் இழந்து பிச்சைக்காரர்களாகவும் நாடோடிகளாவும் மாற நேரிட்ட எண்ணற்ற மனிதர்களில் ஒருவராகிறார் குல்தீப் நய்யார்.

ஆதவனின் புனைவுலகம்

எந்த ஒரு எழுத்தாளரின் படைப்பையும் நாம் ஏன் விரும்புகிறோம்? அவர் நம் புரிதலுக்கான புதிய வாசல்களைத் திறக்கிறார் என்பது ஒன்று. இன்னொன்று, நமக்கு மிகவும் பரிச்சயமான, நாமறிந்த உலகைக் குறித்தும் அதன் மனிதர்களைக் குறித்தும் நாம் என்ன நினைக்கிறோமோ, அதையே நம்மைவிட அழகாக, மிகச் சரியான சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். காகித மலர்களைப் படித்தபின் எனக்கு மேற்சொன்ன இரண்டுவித உணர்வுகளும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. செல்லப்பாவும் விஸ்வமும் கணேசனும் பத்ரியும் எனக்கு மிக நெருக்கமானவர்களானார்கள். அவர்களில் என்னில் பல பகுதிகளைக் கண்டேன், அவர்கள் என் வெவ்வேறு முகங்களைப் பிரதிபலித்தார்கள்.