ஜொராஸ்ட்ரியனிசம்

ஜொராஸ்ட்ரியர்கள் இந்த சடங்கு விழாக்களை செய்வதற்காக மகிகளுக்கு வணக்கஸ்தலங்களை நிர்மாணித்துக் கொடுத்தனர். அவை ஆங்கிலத்தில் ‘fire temples’ (தீக் கோயில்கள்) என அழைக்கப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில், சசானிய பாரசீகப் பேரரசு ஜொராஸ்ட்ரியனிசத்தை அதன் அதிகாரபூர்வ மதமாக மாற்றியபோதே உண்மையில் அது ஒரு மதமாக நிறுவப்பட்டது என்று சொல்வேன். அதற்கு முன், இது பாரசீக மற்றும் பிற பேரரசர்களின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்திருக்கலாம். ஆனால் அது உத்தியோகபூர்வ அரச மதமாக மாறிய பின்னர்தான் பரவத் தொடங்கியது.