- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
心にも
あらでうき世に
ながらへば
恋しかるべき
夜半の月かな
கனா எழுத்துருக்களில்
こころにも
あらでうきよに
ながらへば
こひしかるべき
よはのつきかな
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: பேரரசர் சான்ஜோ
காலம்: கி.பி. 976-1017.
இவரது இயற்பெயர் இயேசதா. பேரரசர் முராகமிக்கு ரெய்செய் மற்றும் என்யூ என இரண்டு மகன்கள். இப்பாடலாசிரியர் பேரரசர் ரெய்செய்யின் இரண்டாவது மகன். முதல் மகன் கசான் இரண்டு ஆண்டுகளிலேயே பதவியிறக்கம் செய்யப்படுகிறார். பின்னர் கி.பி. 986ல் இப்பாடலாசிரியருக்கு இளவரசுப்பட்டமும் என்யூவின் மகன் இச்சிஜோவுக்கு அரசபதவியும் வழங்கப்பட்டது. சான்ஜோவைவிட இச்சிஜோ வயதில் இளையவர். ஆறு வயதே நிரம்பியவர். இருப்பினும் சான்ஜோவைத் தவிர்த்துவிட்டு இச்சிஜோ அரசராக முடிசூடக் காரணம் அப்போது அரசவையில் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்த மிச்சிநாகா. மிச்சிநாகாவின் ஆறு மகள்களில் முதலாமவர் இச்சிஜோவை மணந்தார். இரண்டாமவர் சான் ஜோவை மணந்தார். நான்காமவரும் ஆறாமவரும் இச்சிஜோவின் இரு மகன்களையும் மணந்தனர். மூத்தமகள் மீது மிச்சிநாகா அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். எனவே அவரது கணவர் இச்சிஜோ முடிசூட்டிக்கொள்ளவேண்டி இரண்டே ஆண்டுகளில் கசானையும் அவரது மகன் கோஇச்சிஜோ அரசராக முடிசூட்டிக்கொள்ளவேண்டி ஐந்தே ஆண்டுகளில் சான்ஜோவையும் தனது பலத்தைப் பயன்படுத்திப் பதவியிறக்கம் செய்தார் மிச்சிநாகா.
சான்ஜோவைப் பதவியிறக்கம் செய்ய மிச்சிநாகா கூறிய காரணம் சான்ஜோவுக்குப் பார்வைத்திறன் குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான். அது உண்மைதான் என்றாலும் உண்மையான காரணம் மூத்தமகள் தந்த அழுத்தம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அரசராக இருந்த ஐந்து ஆண்டுகளும் இவருக்கு மிகவும் சோதனை மிகுந்ததாக இருந்தன. இருமுறை அடுத்தடுத்த ஆண்டுகளில் அரண்மனை தீவிபத்தில் அழிந்தது. பதவியிலிருந்து இறங்கிய பின்னர் புத்தமதத் துறவியாக மாறித் தனிமை வாழ்வை வாழ்கிறார். அப்போதுதான் இப்பாடலை இயற்றினார். அடுத்த ஆண்டிலேயே முழுமையாகப் பார்வைத் திறனை இழக்கிறார். அதே ஆண்டு தனது 42வது வயதில் இறந்தும் விடுகிறார்.
பாடுபொருள்: தனிமைக்குத் துணையாகும் நிலவை விரைவில் காணமுடியாமல் போய்விடுமே என வருந்துவது.
பாடலின் பொருள்: ஒருவேளை இப்பூமியில் தொடர்ந்து வாழ்வேன் எனில் இன்று நான் காணும் இம்முழு நிலவின் அழகு என் உள்ளத்தில் மட்டுமே உறைந்திருக்கும்.
இவரது வாழ்வின் பிற்பகுதியில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் இவரை விரக்தியின் உச்சத்துக்குத் தள்ளுகின்றன. வாழ்வதைவிட இறப்பதே மேல் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார். கண்பார்வையும் குறைந்துகொண்டே வருவதால் வாழ்வு இனி நரகமாகத்தான் இருக்கும் என்று வருந்துகிறார். தனிமையில் வாழ்வதற்கு நிலவுதான் துணை என்றாலும் விரைவில் அந்நிலவையும் காணும் வாய்ப்பு பறிபோகுமே என்ற கவலையை வெளிப்படுத்தும் எளிய பாடல் இது.
வெண்பா:
வாழ்வதும் துன்பமே மாய்வதும் இன்பமென
ஆழ்மனம் எண்ணிடில் கண்நிறை – கீழ்த்திசை
தேய்ந்து நினைவில் உறைந்திடும் எந்தன்
தனிமை விலக்கும் நிலவு

Sans titre, 1987
கரையோர மேப்பிள்கள்
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
あらし吹く
み室の山の
もみぢ葉は
竜田の川の
錦なりけり
கனா எழுத்துருக்களில்
あらしふく
みむろのやまの
もみぢばは
たつたのかはの
にしきなりけり
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: மதகுரு நோஇன்
காலம்: கி.பி. 988-1050.
இவரது இயற்பெயர் நகாயசு. அரச குடும்பத்தினர் கல்வி கற்பதற்காக நடத்தப்பட்டு வந்த பல்கலைக்கழகத்தில் இலக்கியம் பயின்ற இவர் தனது 26வது வயதிலேயே புத்த மதகுருவாக மாறிவிட்டார். தற்போதைய ஓசகா மாகாணத்தின் செட்சு நகரில் வாழ்ந்து வந்தவர். சமகாலத்திய புலவர்களின் பாடல்களில் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று அப்பாடல்களைத் தன்னுரையுடன் தொகுத்திருக்கிறார். இது தவிர, ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 65 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 புலவர்களின் பிற்காலப் பட்டியலில் இடம்பெற்றவர்.
பாடுபொருள்: இலையுதிர்கால ஆற்றின் அழகு.
பாடலின் பொருள்: மிமுரோ மலையிலிருந்து வீழும் தட்சுதா ஆற்றின் இருமருங்கிலும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் ஆற்றுக்குக் கரை வரைந்ததுபோல் அழகூட்டுகிறது.
இயற்கையை வர்ணிக்கும் இன்னோர் எளிய பாடல். ஜப்பானில் இலையுதிர்காலத்தில் மேப்பிள் மர இலைகள் பழுத்து அடர்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
இத்தொடரின் 40வது பாடலில் (காதல் மறைத்தாலும் மறையாதது) விளக்கியதுபோல் இடைக்கால ஜப்பானிய வரலாற்றில் அரசவைகளில் அவ்வப்போது பாடல் புனையும் போட்டிகள் நடப்பதுண்டு. கவிஞர்களை இரு வரிசைகளில் எதிரெதிரே அமர்த்தி இருவர் இருவராகக் கவிதைகள் புனைந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. கவிஞர் யுய்யே எழுதிய பாடலுக்குப் போட்டியாகப் புனையப்பட்ட இப்பாடல் பரிசை வென்றது. இரு பாடல்களும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் அவ்விடத்தை அழகுபடுத்துவதாகப் புனையப்பட்டவைதான். ஒரேயொரு வேறுபாடு யுய்யே மலையடிவாரக் கிராமத்தின் தரை அழகாக இருக்கிறது என்று பாடியிருக்கிறார். இவர் தட்சுதா ஆற்றின் இருமருங்கும் ஜரிகை வைத்ததுபோல் இருக்கிறது என்று கவித்துவம் கூட்டியதால் பரிசை வென்றிருக்கலாம்.
வெண்பா:
வரையினில் வீழ்ந்திடும் தீம்புனல்நீள் ஆற்றின்
கரையினில் வீழ்ந்திடும் செம்மை – கரையென
நீண்டிடச் செந்தண் இலையவை கூட்டுமே
தட்சுதா ஆற்றின் அழகு
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
