பயனர் அனுபவம் – பயனர் ஆய்வுகள்

பயனர் எதிர்பார்ப்பதை சரியான வகையில் அவருக்கு அளிக்கவேண்டுமென்றால் அதற்கான பயனர் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் முடியாது. இந்த மாதிரி பயனர் ஆய்வுகளை மேற்கொள்ள பல வழிமுறைகள் இருக்கின்றன. எந்த வலைதள வடிவமைப்பிற்கு எந்த மாதிரியான பயனர் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை தெளிவாகச் சிந்தித்து பின்னர் அதனைப் பின்பற்றி அது நடத்தப்பட வேண்டும். சில பெரிய வியாபார நிறுவனங்கள் தங்களது வலைத்தள வடிவமைப்பை புதிதாக மாற்றும்போது இந்த மாதிரி பயனர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும்கூட அந்த வலைத்தளமானது ஒரு சரியான பயனர் அனுபவத்தைத் தராமல் தோல்வியடைந்துவிடுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

பெர்ஸோனா என்னும் பயனர் ஆளுமை

சுருங்கச் சொன்னால் இந்த பெர்ஸோனா என்பது ஒரு பயனரின் ஆளுமை. முந்தைய அத்தியாயத்தில் சொல்லப்பட்ட ’பயனரின் மனநிலை மாதிரி’ யுடன் (Mental model) எல்லாவிதத்திலும் தொடர்புடையது. ஒரு வலைத்தளத்தை உபயோகிக்கும்போது இருக்கும் பயனரின் மனோபாவத்தை இது கோட்டிட்டுக் காட்டும். அவர்களின் முடிவெடுக்கும் திறன், தொழில்நுட்பம் பற்றிய பயனரின் பார்வை மற்றும் அணுகுமுறை, வாழ்வியல் முறை பற்றிய தெரிவுகள், தெளிவுகள், அவர்களின் அன்றாட பொதுவான நடவடிக்கைகள், வழக்கங்கள் என எல்லாவற்றையும் தெளிவான முறையில் காட்சிப்படுத்துவதாக அது இருக்கும். அது தவிர பயனர்கள் வாழும் பிராந்தியம் பற்றிய குறிப்புகளையும் கொண்டதுதான் இந்தப் பெர்ஸோனா.

மன மன மன மென்டல் மனதில்

மன மாதிரி பற்றிய ஆய்வு ஒன்றில், இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு தாளைக் கொடுத்து ஒரு காபி கோப்பையையும், சாசரையும் (Cup and saucer) அதில் வரையுமாறு சொன்னபோது அனைவருமே சொல்லி வைத்தாற்போல் ஒரு சாசரை வரைந்து அதன் மேல் கோப்பையை வரைந்து, கோப்பையின் கைப்பிடி வலது புறமாக இருக்கும்படி வரைந்தார்களாம். அவர்களில் ஓரிருவர் மட்டுமே கைப்பிடியை இடதுபுறமாகவோ அல்லது கோப்பையையும் சாசரையும் டாப் ஆங்கிளில் தெரியுமாறோ வரைந்தார்களாம். இன்னொரு விஷயம், யாருமே இரண்டையும் தனித்தனியாகக் கூட வரையவில்லை. ஆக கப் அண்ட் சாசர் என்றதுமே நமக்கு இருக்கிற மன மாதிரி இப்படித்தான் இருக்கிறது. கோப்பையின் கைப்பிடியை வலது பக்கமாக வரைவதுகூட நம்மில் பெரும்பான்மையானவர்கள் வலதுகைப் பழக்கம் உடையவர்கள் என்பதனால்தான்.

பயனர் அனுபவம் – 2 : தகவல் கட்டமைப்பு

ஒரு பயனர் அனுபவ வல்லுநர் தாமாகவே இந்த மாதிரி சைட் மேப்பையோ, அல்லது தகவல் கட்டமைப்பையோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிறுவனம் எந்த நோக்கத்திற்காக ஒரு வலைதளத்தை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு அந்த நிறுவனத்துடன், அவர்களின் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களுடன் (Stakeholders) கூடி ஆலோசித்து, பயனர் பிரதிநிதிகளை (User representatives) வைத்துதான் இதைச் செய்யமுடியும்.

பயனர் அனுபவம் – ஒரு அறிமுகம்

நீங்கள் இப்போது ஒரு வலைத்தளத்தை முதன் முதலாக உபயோகிக்க வருகிறீர்கள். எனில் உங்களால் அவ்வலைதள சேவையை நீங்களாகவே எளிதாகக் கற்றுக்கொண்டு, மிக விரைவாக இயக்க முடிகிறதா?. தவறுகள் செய்யாமல், தடுமாறாமல், தெளிவாக உபயோகிக்க முடிகிறதா? மேலும் மறுமுறை அதே வலைதளத்தைப் பயன்படுத்தும்போது,அதன் வடிவமைப்பையும், அதன் நேவிகேஷன் (Navigation) அம்சங்களையும் தெளிவாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறதா?