பயணங்கள்- லண்டன்

This entry is part 1 of 9 in the series பயணங்கள்- லண்டன்

இங்கிலாந்து வீடுகளில் அழகான தோட்டங்களும் சிறிது புல்தரையும் இருக்கிறது. அமெரிக்காவில் புல்தரைகளுக்குத் தான் முதலிடம். அதற்குப் பிறகு தான் தோட்டங்கள். இங்கும் நுழைவாயிலில் அழகான பூந்தோட்டம். வளைத்து வளைத்துப் பூக்களைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். கற்கள் பதித்த தரை. 16ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்த பழைய வீட்டினை அழகாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் தந்தை ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதில் விற்பன்னராக இருந்திருக்கிறார். அவருடன் சில வருடங்கள் தங்கி தொழிலைக் கற்றுச் செல்லவும் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள்

யார்க் , கிராஸ் ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்

This entry is part 2 of 9 in the series பயணங்கள்- லண்டன்

எங்களுடைய பெரும்பாலான பயணங்களில் குறிப்பாக, ஐரோப்பாவில் தம்பதியர் சமேதமாக ஊரைச்சுற்றிப் பார்க்க வருபவர்கள் பலரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள். நாம் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாடினால் அவர்கள் அறுபதிலும் ஆசை வரும் என்று பாடுகிறார்கள். பொறாமையாக இருக்கிறது! “வயசான அக்காடான்னு ஒரு இடத்தில உட்காரணும்”என்று சொல்லாத ஆட்கள் இருக்கும் வரையில் இவர்கள் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருக்கிறார்கள்.

எடின்புரஃஹ் பயணக்குறிப்புகள்

This entry is part 3 of 9 in the series பயணங்கள்- லண்டன்

அழகான சாலைகளின் ஓரம் மஞ்சள் Daffodil பூக்கள் வசீகரிக்க, இலைகளுடன் மரங்கள் இருந்திருந்தால் அந்த இடமே சொர்க்கபுரி தான்! கதிரவன் மறைய, போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது வானம். அதிசயமாக ஓரிரு வண்டிகள் கடந்து சென்றது. மலைகளில் பனி இறங்கி மரங்களை அணைத்து நின்றது அழகு! குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து விட்டோம்

எடின்புரஃஹ் – செயின்ட் ஆண்ட்ரூஸ் பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 9 in the series பயணங்கள்- லண்டன்

கடற்கரைக்கென்றே ஒரு வாசம் உண்டு. முகர்ந்தும் முகராமலும் கொண்டே கரையோரம் ஒதுங்கியிருந்த கடற்பாசி, ஓடுகளைத் தாண்டி சிறிது தூரம் மணலில் நடந்தோம். இளம்பெண்கள் இருவர் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தவர்களைச் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் மட்டுமே அப்பொழுது அங்கு இருந்தோம். பொங்கி எழும் அலைகளின் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்

This entry is part 5 of 9 in the series பயணங்கள்- லண்டன்

ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைலேண்ட்ஸ்ன் கரடுமுரடான அழகு, காலத்தால் அழியாத வசீகரம். பரந்து விரிந்த நிலப்பரப்பில் விரவியிருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தும் வசதிகள் வழியெங்கும் இருக்கிறது. கோடைக்காலத்தில்அழகு மேலும் மெருகேறியிருக்கலாம். நாங்கள் சென்ற மழைக்காலத்தில் அப்பொழுதுதான் மரங்கள் துளிர் விட ஆரம்பித்திருந்தது.

ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

This entry is part 6 of 9 in the series பயணங்கள்- லண்டன்

அடுத்து நாங்கள் நிறுத்திய இடம் ‘World War II Commando Memorial’. இரண்டாம் உலகப்போரின் பொழுது அந்தப் பகுதிகளில் தங்கி பயிற்சி அளித்த நேச நாட்டுப் படைவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அருகே போரில் இறந்த வீரர்களின் நினைவிடமும் இருந்தது. அங்கிருந்து பிரிட்டனின் உயரமான மலையான ‘Ben Nevis’ காட்சி தருகிறது. உச்சியில் பனிக்காலத்தின் அடையாளமாகச் சிறிது பனி. அந்த மலையில் ஏற குறைந்தது ஒன்பது மணிநேரங்கள் ஆகலாம். வேண்டாம். தூரத்திலிருந்து பார்க்க அழகாக இருக்கிறது. என்ன? ஒருகாலத்தில் எரிமலையாக இருந்த மலை. உச்சியில் அதன் அடையாளங்களைக் காண மக்கள் செல்வார்கள் என்று அங்கிருந்த பயணிகள் கூறினார்கள்.

கிளாஸ்கோ

This entry is part 7 of 9 in the series பயணங்கள்- லண்டன்

இங்கிலாந்தின் ‘கம்ப்ரியா’வில் உள்ள ‘காக்கர்மவுத்’ என்ற அழகான நகரத்தில் அமைந்துள்ள ‘வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ் & கார்டன்’, ஆங்கில இலக்கிய உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்திற்கு அஞ்சலி செலுத்துகிறது. வேர்ட்ஸ்வொர்த் பிறந்து தனது ஆரம்பக் காலங்களை கழித்த இந்த வரலாற்று இல்லம், 18ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்று புகழ்பெற்ற காதல் கவிஞரின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

This entry is part 8 of 9 in the series பயணங்கள்- லண்டன்

மழைத்தூறல் ஆரம்பிக்க, பறவைகள் கோட்டைக்குள் பதுங்க ஓடிவருவதைப் பார்க்க அழகு. ‘சிலுசிலு’ தென்றல், மழையில் நனையும் மலை, மரங்கள், கருமேகங்களை விலக்கி வெளிவர எத்தனிக்கும் சூரியன், மங்கிய மஞ்சள் வெயிலில் அசைந்தாடும் புற்கள் என்று கோட்டையிலிருந்து கண்ட காட்சிகள் அருமையாக இருந்தது! ‘Catherine Called Birdy’ என்ற ஆங்கிலப்படத்தை அங்கே எடுத்திருக்கிறார்கள் என்று அங்கே இருந்தவர்கள் கூறினார்கள்.

அழகிய இலண்டன்

This entry is part 9 of 9 in the series பயணங்கள்- லண்டன்

லண்டன் வரலாற்றில் 1666ல் நான்கு நாட்களுக்கு நடந்த பெரும் தீவிபத்து காரணமாக நகரில் பல கட்டடங்களும் பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பல தேவாலயங்களும் எரிந்து சேதமடைந்துள்ளன. மக்கள் வீடின்றி தெருவில் நிற்க, பலரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆற்றைக் கடந்து சென்றிருக்கிறார்கள். ‘லண்டன் பிரிட்ஜ்’ செல்லும் வழியில் தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு நினைவுத்தூணை பார்த்துவிட்டு வாருங்கள் என்று எங்களை இறக்கிவிட்டார் அந்த பேருந்து ஓட்டுநர். நாங்களும் தகவல்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.