எம். எல். – அத்தியாயம் 16

அன்று கட்சி ஆஃபீஸை நாராயணன் தான் பூட்டினான். ஆஃபீஸ் செக்ரட்டரி கனகசபை, சுப்பிரமணியபுரத்தில் யாரோ தோழரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நாலு மணிக்கே சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். கட்சி அலுவலகத்தை விட்டுப் புறப்படும் போது நாராயணனிடம், “நீ பொறப்பட நேரமாகுமா?” என்று கேட்டார். “பிரஸ்லே இருந்து “எம். எல். – அத்தியாயம் 16”

தெய்வமரம்

பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்தது “மங்களவிலாஸ்” வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு. அந்த இடம் வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ ஒரு பய உணர்ச்சியோடுதான் அந்த வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த வீடு தரும் அமைதியின்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த வீடு அது. முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட மோசமாக இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி நீண்ட வாசற்படியில் சரியாகக் கண் தெரியாத முத்தையாவின் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே வருபவர்களை நோக்கி அவள் எதையோ சொல்கிறாள் எனத் தோன்றும். மாறாத கண்களுடன் வெற்றிலை பாக்கு மெல்வதை உள்ளே வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று அந்த இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார்.

புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’

This entry is part 41 of 48 in the series நூறு நூல்கள்

மூவரின் குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதையும், அவர்களோடு இணையும் இன்னும் சிலரது கதையுமே இந்நாவல். இந்த மூன்று பாத்திரங்களையுமே , தமிழகத்தின் முக்கியமான வகை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்துப் படைத்திருக்கிறார் ஆசிரியர். மாறிவரும் காலத்தை சரியாகக் கணித்து விவசாயத்திலிருந்து, தொழிற்சாலைக்கு மாறும், காங்கிரஸ் மீது பற்று கொண்ட தேசிய முதலாளி ஆகும் கஸ்தூரிசாமி, திராவிட இயக்கச் சிந்தனைகளின் மீது பற்று கொண்டு, தமிழ்ப் பற்றும் கலை இலக்கிய ஆர்வமும் கொண்ட ஒரு லட்சியவாதியான ராஜு, தொழிற்சங்க நடவடிக்கைகளினால் ஈரக்கப்பட்டு, தொழிற்சங்கத்தின் கட்டுப்பாடு மிக்க வீரரான இடது சாரிப் பார்வைகொண்ட ஆரான் … இந்த மூன்று இயக்கங்களும் தான் தமிழ்நாட்டின் தலைவிதியை சுதந்திரத்துக்கு பின் தீர்மானித்தன எனும்வகையில் …

நிறப்பிரிகை

உண்மையில் அது வரையில் அந்தப் பெண்ணோ, என் வகுப்பில் வேறு யாருமோ என்ன ஜாதி என்ற கேள்வி ஒரு போதும் என் மனதில் வந்ததேயில்லை. ஜாதிகள் பல உண்டு என்பது தெரியும். ஒவ்வொருவரும் பேசுகிற மொழிக் கொச்சையும், சாப்பிடுகிற சாப்பாட்டின் ருசியும், பழக்க வழக்கங்களும் வேறு வேறு என்று தெரிந்ததே தவிர, அதனால் மனிதர்களை வேறு வேறு மாதிரி நடத்த வேண்டும் என்றோ, நினைக்கவேண்டும் என்றோ தோன்றியதேயில்லை.

கடைசிக் கனவு

என்னை இன்று கொலை செய்யப் போகிறார்கள். சரியாகச் சொல்லப் போனால் தூக்கிலிடப் போகிறார்கள். தூக்கில் தொங்கும்போது எனது மனநிலை எப்படியிருக்கும் என்பது தெரியாது. ஆனால் என்னைத் தூக்கிலிடுகிறவனின் மனநிலை எப்படியிருக்குமென்பது தெரியும். நானும் இதற்கு முன்னால் அந்த பொறுப்புமிக்க பணியைச் செய்தவன் தான்.

ஏற்கெனவே எப்போதும்

ஆதி உணர்வு அச்சம். எங்க நாம தாக்கப்பட்டுறுவமோன்னு ஒரு பயம். இதுதான் உலகத்தில் எந்த உயிருக்கும். மனிதன் சமூக விலங்கு. அவனும் முதலில் வெளிச் சமூகத்தை அச்சத்துடனே பார்க்கிறான். பின்னர் எப்படியாவது அதில் சேர்ந்து தனது தனித்தளத்தைக் கைவிட்டுக் கரைந்து விடப்பார்க்கிறான். கரைவதில் அவனுக்கு அபாயம் குறைவு.

தன்மானத் தேடல் – ரேமண்ட் சான்ட்லரின் ஃபிலிப் மார்லோ

உண்மை எது பொய் எது என்ற தெளிவில்லாத மார்லோவின் உலகில் போலீஸ்காரர்கள் வராமல் இருக்க முடியாது. சான்ட்லரின் போலிஸ்காரர்கள் லட்சியவாதிகள் அல்ல, முழுக்க முழுக்க ஊழலானவர்கள் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட, யதார்த்தத்தை ஒட்டிய பாத்திரங்களைக் கொண்டு சான்ட்லர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சமநிலையை அடைகிறார். சான்ட்லரின் கதைகளில் மார்லோ அத்தனை வகை போலீஸ்காரர்களையும் சந்திக்கிறான். சிலர் வன்முறையால்தான் குற்றங்களை ஒடுக்க முடியும் என்றால் அப்படியே ஆகட்டும் என்று நினைப்பவர்கள், சிலர் மிகவும் கடுமையான காவல்துறைப் பணியைத் தங்களால் இயன்ற அளவு நன்றாகச் செய்ய முயற்சி செய்பவர்கள்.

லூயீஸ் எர்ட்ரிக் – கதை அறிமுகம்

பெண்குழந்தை, ஊனமானது, வாழப்போவதில்லை என்பது ஒதுக்கி வைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான ஆண், ஊனமற்றது, வாழக் கூடியது தேர்வு செய்யப் படுகிறது.
கழித்துக் கட்டப்பட வேண்டிய உயிரிடம் தருவதற்கு இருக்கிறது. வாழ்வுக்கு உகந்ததென்று தேர்ந்து வளர்க்கப்பட்டதிடம் அதை வாங்குவதற்குக் கூட திராணி இல்லை.

என் பிறப்பின் ஆண்டுகள்

நான் பேச இயலாமல் உறைந்து போய் ஊமையாய் நின்றேன். பெட்டி கடுமையாக அழத் தொடங்கினாள். முழங்கையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். நான் உடைந்த துகள்களை பெருக்கச் சென்றபோது, உடைந்த குரலில் என்னைப் போகச் சொன்னாள். நான் ஷெரிலைத் தேடிச் சென்றேன். அவள் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் தூரத்துக் கோழிப் பண்ணையில் இருந்தாள். என் மீது ஏன் பழி சுமத்தினாய் என்று கேட்டதற்கு, என்னை வன்மத்துடன் ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, “ஏனென்றால் நீ வெள்ளையாக இருக்கிறாய்,” என்றாள்.