திணைக்கோட்பாடு – பெண்மையம்

இந்து மதத்தில் தொன்மக்கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றங்களின் பிரதிபலிப்புகள். பரசுராமனின் கதை, ஆண் தலைமையை அதிகாரத்தை ஏற்கும் சந்ததிகளைப் பற்றிப் பேசுகிறது. அத்துடன் எல்லாம்மா உடம்பில் ரேணுகாதேவியையும் ரேணுகாதேவி உடம்பில் எல்லம்மா தலையையும் பொருத்தி, பண்பாட்டு தளத்தில் பெண்ணுடலை கட்டமைத்திருக்கும் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி இருக்கிறது.

நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்

நாஞ்சில் நாடனின் புனைவுகளில் பெண்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறேன். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் 2012ல் மும்பை தமிழ்ச் சங்கத்தில் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் கண்ட பசித்தவனின் பயணத்தைப் பேசி இருக்கிறேன்.  கொரொனா காலத்தில் மும்பை தமிழ்க் கூடலில் மும்பை படைப்புலகம் என்ற தொடர் சொற்பொழிவில் நாஞ்சில் நாடன் புனைவுலகத்தையும் ஏற்கனவே நான் பேசி எழுதி பதிவு செய்திருக்கிறேன்.