ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி… 

This entry is part 1 of 2 in the series ஆத்தோரம் மணலெடுத்து

தாத்தா தான் அவனுக்கு அப்பா. அவன் டிஎன்ஏயில் பாதி பங்கைக் கொடுத்து, நிகில் என்ற பெயரையும் வைத்தவர் அவனுடைய முதல் பிறந்தநாளுக்கு முன்பே சாலை விபத்துகளில் இறந்தவர்கள் கணக்கில் சேர்ந்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் அம்மா மீளவில்லை. அவள் மன ஆறுதலுக்கு பரதநாட்டியப் பள்ளி. வீட்டின் தரைத்தளத்தில் இருந்து வரும் சலங்கையோசைக்கு நிகில் பழகிவிட்டான். தேர்வுகளுக்குத் தயார்செய்யும்போது கூட அது இடையூறாக இருந்தது இல்லை. 

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி

This entry is part 2 of 2 in the series ஆத்தோரம் மணலெடுத்து

இளம் வயதில் அழகும் அறிவும் நிறைந்த ஒருத்தியின் மேல் பையன்களுக்கு மோகம் வருவது இயற்கை. காலப்போக்கில் அழகின் தாக்கம் குறைந்து அறிவின் உயர்ச்சி மட்டுமே தங்கும். அப்போது ஆசைக்கு பதில் பிரமிப்பு. நிகிலுக்கும் விரைவில் அந்த மாற்றம் நிகழும். திரும்பிப் பார்க்கும்போது, ‘சே! என்ன அசட்டுத்தனம்!’ என்று நினைக்கத் தோன்றும். வெட்கப்பட ஒன்றும் இல்லை. உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஒரு பாலம்.