வரிசையில் ஒரு சிநேகம்

தன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூட ஏதோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய். இருவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பின்னால் நீண்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்த வாகன வரிசையின் மீதும் ஒரு கண் வைத்தபடியேதான் இருந்தாள் சகி.  இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடும் என்றே அவளுக்குத் தோன்றியது.

வேட்டை நாய்

முதுகிலும், கைகளிலும் பட்டிருந்த காயங்களின் வலிக்கடுமை பிரெலைப் பாதித்துக் கொண்டிருந்தது.  அவர்கள் அவனை வலுவாகத் தாக்கி அடித்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள்.  அவனோ ஒரு முட்டாளைப்போல் இங்கே நின்று கொண்டு தன் பிரச்சினைகளுக்கு மிக எளிதான ஒரு பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறான்.  தனது அம்மாவும் தங்கையும் வாத்துகளை விட  முக்கியமில்லாதவர்களாக மாறிவிட்டிருக்கிறார்களா என்ன?