குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.