தனி மனிதச் சுதந்திரம் அதன் மோசமான எல்லையில் அரசின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும் சுய அழிப்பிற்குமே இட்டுச்செல்லலாம் . குடும்பம் அதன் சாதகமான எல்லையில் ஒரு குழந்தை வளர்வதற்கான ஆகச் சரியான அமைப்பாக விளங்குகிறது. சீரான குடும்பங்கள் சீரான சமூகங்களையும் உருவாக்குகின்றன. தனிமனித விடுதலையின் சாதகமான எல்லையில் தனி மனிதன் எந்தக் கட்டுக்களும் இன்றி தன் முழுத்திறனையும் கொண்டு புதிய உச்சத்தை அடைய முடியும். குடும்பம் தனிமனிதன் எனும் இவ்விரு புள்ளிகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருந்தாலும் அவற்றிற்கிடையே பெருந்தூரங்கள் எளிதில் உருவாகிவிட முடியும் என்பதை இக்கதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
Author: சிறில் அலெக்ஸ்
எனக்கு நினைவுள்ளது
அவனுக்கு தாங்கள் எங்கு
தலைப்பட்டிருக்கிறோம் என்று
ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
குழுத் தலைவன் கட்டுக்குள் வைத்திருந்தான்
அறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து
பைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை. அதன் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டாட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model5) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவாக்கப்பட்டது. அரிஸ்டாட்டிலின் புவிமையக் கொள்கைக்கு முதல் பொருட்படுத்தத் தகுந்த மாற்றுக் கொள்கை கிறீத்துவத்தின் உள்ளிருந்தே எழுந்தது. சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism6) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்பணியாளர். அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. அரிஸ்டாட்டிலிய அறிவியலறிஞர்கள் பலராலும் நிராகரிக்கப்பட்டது. வெளியிடப்பட்டு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகுகூட 15 அறிவியல் அறிஞர்களே சூரியமையக் கொள்கையை ஆதரித்தனர், பின்பற்றினர் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். அவற்றில் இருவரின் விதிமீது கிறீத்துவம் தீர்ப்பெழுதியது.
ஓராயிரம் கண்கள் கொண்டு
அமெரிக்காவில் ஜெல்லி பெல்லி என ஒரு சிறிய மிட்டாய் வகை உண்டு. வாழைப்பழம் சாப்பிடும்போதெல்லாம் உங்களுக்கு ஒரு சிறுவயது நியாபகம் வந்துபோகுமென்றால் ஜெல்லி பெல்லியும் அந்த நியாபகத்தை மீட்டெடுக்கும். பல சிறந்த இலக்கிய நாவல்களும் ஜெல்லி பெல்லியைப் போன்றவை. அவை வேறொரு வாழ்வனுபவத்தை நமக்குத் தரவல்லவை. ’ஆழி சூழ் உலகு’ ஒரு பெரிய பலாப்பழத்தை உரித்து நம் முன் வைத்ததைப்போல வைக்கப்பட்டுள்ளது. பூடகமில்லாத வெளிப்படையான நேரடியான எழுத்து.