விழியிலிருந்து நினைவுக்கு

கவிஞர்களை இரு வரிசைகளில் எதிரெதிரே அமர்த்தி இருவர் இருவராகக் கவிதைகள் புனைந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. கவிஞர் யுய்யே எழுதிய பாடலுக்குப் போட்டியாகப் புனையப்பட்ட இப்பாடல் பரிசை வென்றது. இரு பாடல்களும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் அவ்விடத்தை அழகுபடுத்துவதாகப் புனையப்பட்டவைதான்.

எனக்கெனவே மலர்ந்தாயோ?

அந்நாளில் புத்தமதத் துறவிகள் பிரார்த்தனையின்மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து மனிதர்களையே காணக்கூடாது. இப்பயிற்சி பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை.

பனிவிலகலில் அக்கரை வெண்மை

இந்த நதியின் கரையில் அஜிரோகி என்றொரு வகையான மூங்கில் செடிகள் வளர்கின்றன. மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்படும் முன் இம்மூங்கிலின் பட்டைகளைச் சிறிது இடைவெளியுடன் முறம்போல் பின்னி ஜப்பானியர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவலை இப்பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது.

காவலும் தாண்டுவது காதல்

இசே கோயிலினுள் கடுங்காவல் வைக்கப்பட்ட காதலி மசாகோவுக்கு வெளியிலிருந்து இப்பாடலைத் தூதாக அனுப்புகிறார். எப்படி அனுப்பினார் என்ற விவரங்கள் தெரியவில்லை. கடைசியாக ஒருமுறை பார்க்க இயலாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று இளவரசிக்கு உணர்த்தும் இப்பாடல் இடையில் வேறொருவர் கையில் கிடைத்துவிட்டால் என்ன செய்வது?

இடம் மாறினும் மணம் மாறுமா?

அதிர்ச்சியுற்ற இவர் துணிந்து உடனடியாக சக்குராவின் எட்டடுக்குகளை அரண்மனையின் ஒன்பதடுக்குகளுடன் இணைத்து இப்பாடலை இயற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார். தலைநகரானது ஒன்பதடுக்குப் பாதுகாப்பால் சூழப்பெற்றுள்ளது என்றும் அரண்மனை ஒன்பது வாயில்களைக் கொண்டுள்ளது என்றும் இருவிதமாகப் பொருள்கொள்கிறார்கள்.

நிலவினும் நெடிது!

மனைவியின் வீட்டுக்குக் கணவன் இரவில் மட்டும் வந்து செல்வது வழக்கமாக இருந்த காலத்தில் ஒவ்வொரு இரவும் கணவன் தம் வீட்டுக்கு வருவாரா அல்லது வேறொரு மனைவியின் வீட்டுக்குச் சென்றுவிடுவாரா எனப் பெண்கள் தவித்திருப்பார்கள். கணவன் வரும்போது கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் அப்பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருப்பவை.

ஒருமுறை வந்து பாராயோ?

நிலவொளியை ரசித்துக் கொண்டிருந்தபோது நாம் தற்செயலாகச் சந்தித்தோம். ஆனால் உன்னை நான் கண்டுணர்வதற்குள் நிலவு மேகத்துக்குள் ஓடி மறைந்ததுபோல் சென்றுவிட்டாய்.

வாள்போல் வைகறை

ஜப்பானிய அரசகுடும்பத்தின் திருமணங்கள் பெரும்பாலும் பலதாரமணங்களாகவே இருந்தன. அரசியல் காரணங்களும் அடங்கும். பெண்ணின் தந்தையும் அரசரும் சேர்ந்து இதை முடிவு செய்வார்கள். மணமுறிவுகளும் அதிகம் இருந்தன. அதிகச் சிக்கல் இல்லாத முறிவுமுறையும் வழக்கத்தில் இருந்தது.

வலிவிடு தூது

இப்பாடலில் சில சொற்கள் இரட்டுற மொழிதலாகப் (சிலேடையாக) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, えやはいぶき என்ற சொல்லின் இறுதியில் வரும் いぶき என்பதற்கு இயூபெக்கி – சொல்ல வேண்டியது என்றும் இபுக்கி – மலையின் பெயர் என்றும் இருபொருள் கொள்ளலாம். சஷிமொ என்ற சொல் மூன்றாம் அடியிலும் நான்காம் அடியிலும் இருவேறு பொருள்களில் பயின்று வந்துள்ளது.

ஜப்பானிய பழங்குறுநூறு 47-50

னித மனங்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் இயற்கை எப்போதும் மாறுவதே இல்லை என்று பார்த்தோம். அதேபோன்ற கருத்தை உடைய பாடல் இது. ஜப்பானிய இலக்கியங்களில் இலையுதிர்காலம் தனிமையின் குறியீடு என்பதைக் கண்டோம். இப்பாடலில் இலையுதிர்காலம் வந்தது என்பதைத் தனிமை சூழ்ந்தது என்னும் பொருளிலும் பொருத்திப் பார்க்கலாம்.

தேடலும் மறத்தலும்

அட்சுததாவுக்குப் பல காதல்கள் இருந்ததாக “யமாதோவின் கதைகள்” குறிப்பிடுகிறது. இந்தப் பெண்ணின் வரவால் பழைய நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று மட்டுமே பாடலில் இருப்பதால் உரையாசிரியர்கள் இருவிதமாகப் பொருள் கொள்கிறார்கள். முந்தைய காதல்கள் யாவும் மறக்கப்பட்டுவிட்டன என்றும் இவர்போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கக் காத்திருந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை இக்காதல் மறக்கச் செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

நீ வருவாயென!

இப்பாடலில் நகாட்சுகி (長月) என்றொரு சொல் வருகிறது. நீண்ட நேரம் இருக்கும் நிலவு என்று பொருள். நிலவு நீண்ட நேரம் இருந்தால் இரவும் நீண்டது என்று பொருள். ஓர் ஆண்டின் நீண்ட இரவு வருவது செப்டம்பர் மாதத்தில். இலையுதிர்காலம் தொடங்கும் நேரம். ட்சுகி (月) என்ற சொல்லுக்கு மாதம் என்றும் ஒரு பொருளுண்டு. தமிழில் திங்கள் என்பதை நிலவுக்கும் மாதத்துக்கும் பொதுவாகச் சொல்கிறோமே, அதுபோல. நீண்ட நிலவு இருக்கும் இரவு என்றும் நீண்ட மாதம் காத்திருந்தேன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்ளலாம்.

கடவுளும் காணா அதிசயம்

இசேவின் கதைகள், யமாதோவின் கதைகள், கொக்கின்ஷு ஆகிய நூல்கள் இவர் கிழக்கு ஜப்பானுக்கு இரண்டு உதவியாளர்களுடன் இடம்பெயர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் இரண்டு காரணங்களுக்காக இவ்விடப்பெயர்வு சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. தலைநகர் கியோத்தோவிலிருந்து கிழக்கு நோக்கி இன்றைய தோக்கியோ வரை பயணப்பட்டதில் வழியிலுள்ள முக்கியமான இடங்களில் ஒவ்வொரு பாடலைப் புனைந்தார் என இசேவின் கதைகள் குறிப்பிடுகிறது. ஆனால் பாடல்களின் எண்ணிக்கையும் முக்கியமான இடங்களின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை. இது முதல் காரணம். மேலும், அரச குடும்பத்தில் பிறந்து உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறும் இரண்டே இரண்டு உதவியாளர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் பயணம் செய்வார் என்பதும் பொருத்தமாக இல்லை.