ஜம்பம்

குப்பைக்காரனுக்கு  ஒரு நாள் ஈரக்குப்பை மறுநாள்  உலர் குப்பை என்பதாய்க்கணக்கு. உலர் குப்பை போடும் நாள் என்றால் எனக்கும் மகிழ்ச்சி.  குப்பைக்காரன் விசில் சப்தம் வீட்டருகே நெருங்குகிற மாதிரிக்கு உணர்ந்தேன். ஆமாம் என் வீட்டருகே வந்துவிட்டான். தமிழ் உச்சரிப்பில் வீணாய்ப்போன தெலுங்கு பேசும் ஆந்திரப்பெண் கையில் வெள்ளை சாக்கு வைத்துக்கொண்டு குப்பை வண்டியோடு தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள்.

யானை வெரூஉம்

எட்ஜ் சாம்பியனாக இருந்த போது என் அப்பாவுக்கு கல்கத்தாவிற்கு மாற்றல் வந்தது. நாங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தோம். எனக்கு மீசை லேசாக அரும்பியிருந்தது. ஆக அழ முடியாது எனும் கட்டாயம் வேறு. என் அக்கா வெஸ்ட் பெங்காலில் படித்தவள் ஒரு வருடமாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கிறாள். குடும்பமே கல்கத்தா திரும்பும் குதூகலத்தில் இருந்தது. நான் பேசிப்பார்த்தேன். ஒரு பயனும் இல்லை. வாழ்க்கை இனித்துக்கொண்டே இருக்கக் கூடியதல்ல என்பது அந்த காலத்தில்தான் அறிமுகமானது. என்னை ரயிலேற்றிவிட பிலுக்கோண்டு மட்டும்தான் வந்திருந்தான்