குவாரண்டீன்

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள்.

இறுதி சல்யூட்

தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான்.