அந்தப் பையன் கவனம் சிதறிய ஒரு கணத்தைத் தேர்ந்தெடுத்து எழுந்து சரேலென்று கதவை நோக்கி ஓடினாள். அவள் கை தாழ்ப்பாளைத் தொட்டு இழுப்பதற்குள் அந்தப் பையன் சுதாரித்து விட்டிருந்தான். அவளைத் தடுத்து அவள் முடியைப் பிடித்திழுத்து தரையில் தள்ளிவிட்டான். அவள் முகம் சுவரில் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள். ‘அம்மா..’
Tag: தமிழ் இலக்கியம்
நீர்ப்பறவைகளின் தியானம்
பத்து வருடங்களுக்கு முன்பு “நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பை வாங்கினேன். அப்போது என்னை கவர்ந்த முதல் அம்சம் என்பது இதில் உள்ள கதைகள் எல்லாமே படிப்பதற்கு “ஜாலி”யாக இருந்தது என்பதுதான். “ஜாலி” என்பது வாசிப்பின்பம் / சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். “இடம் பெயர்தல்” பேய்கதை பாணி, “காணாமல் போனவனின் கடிதங்கள்” என்பது துப்பறியும் பாணி கதை என விதிவிதமான கதை கலவையாக இருந்த யுவனுடைய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.
அனாயாசம்
அம்மா மௌனமாக யோசித்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின் பேச ஆரம்பித்தாள். ‘’மனுஷாள் எல்லாருமே சாவைக் கண்டு பயப்படறா. ஏன்னா சொந்த பந்தங்களோட இருக்கறதயும் லௌகிக சந்தோஷங்கள்ல மூழ்கியிருக்கறதலயும் மட்டுமே வாழ்க்கைன்னு நம்பறா. அப்படிப் பட்டவாளுக்கு சாவுன்னு சொன்னா பயம் வந்துடுது. சாவுக்கு அப்பறம் நாம என்ன ஆவோம்னு தெரியலயேங்கற பயம். அடுத்த ஜென்மம் பத்தி பயம்.
