இயற்கையான உறவில் மலரும் மகவு என்ற அமைப்பை நீர்த்துப் போகச் செய்து, அந்த உறவு தரும் கடமை, பொறுப்பு, அன்பு, வம்சம் என்று காலம்காலமாய் மனித இனமும், சட்டமும் பணிந்து கொண்டாடிய ஒன்றை, ஒப்பந்தங்களால் அடைவதில், சட்டச் சிக்கல்கள் எழத்தானே செய்யும்? யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளுங்கள். பணத்திற்காக கருவை சுமந்தவர்களென்றாலும், அத்தகைய அனைத்துப் பெண்களும், தாங்கள் கற்பனை செய்தபடி, அந்தக் குழந்தையிடமிருந்து உடலால் பிரிந்திருப்பது எளிதல்ல என்ற இடத்திற்கு வந்து சேர்ந்து மனச் சோர்விற்கும் ஏக்கத்திற்கும் உள்ளாகிறார்கள்.
Tag: மகப்பேறு மருத்துவம்
அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை!
“என்ன ஒரு மாதிரியா இருக்க!” காலையில் வேலை முடிந்து வந்த பிரேம் முகத்தின் உள்ளேயும் படித்தான்.
“வீட்ல இல்லங்க.”
ஒன்றும் சொல்லாமல் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டு போன பிரேமை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள் ரேணு.
இப்போதெல்லாம் அடிக்கடி அவன் பேசும்போது குழந்தையை பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. அவளை விட அவனுக்குத்தான் எதிர்பார்ப்பு அதிகம்.
