பெரும்பாலும் இன்றைய நவீன வாழ்க்கையின் பல எதிர்மறை அம்சங்களின் தொகுப்பாகவே நாவல் அமைந்த போதும், இறுதியில் ஒரு நம்பிக்கை ஒளியுடனேயே முடிகிறது என்பதும் ஒரு சிறப்பு.இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்.இன்றைய தமிழகச் சூழலில் ஒரு வகையான அரசியல் சரிநிலையை இந்த நாவல் மீறுகிறது. அது எது என்பதை நான் சொல்லப்போவதில்லை. வாசகர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளலாம்.
Category: இதழ்-309
ஒருத்தி மகளாய்ப் பிறந்து…
கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனையோ சிசுக்களைப் பிறந்த சில நாட்களுக்குள் பெற்ற தாய்களிடம் இருந்து பிரிக்கும் பாவத்தையும், அந்தப் பச்சிளம் குழந்தைகளை அன்புடன் ஆதரவுடன் வளமுடன் வளர்க்கும் குடும்பங்களில் சேர்த்த புண்ணியத்தையும் ஒருசேர செய்து வருகிறேன். இதுவரை நான் வழிசெய்த எந்த இடமாற்றமும் துயரத்தில் முடிந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம், மனிதர்களின் தராதரத்தைக் கணிக்கும் எனது சாமர்த்தியம்
லோர்க்கா கவிதைகள்
நான்கு நிலவுகள் தகிக்கும் இரவு
ஒரே ஒரு மரம்
அதன் ஒரே ஒரு நிழல் அங்கே ஒரே ஒரு பறவை.
உன் உதடுகளின் வழித்தடத்தை
என் தேகத்தில் தேடுகிறேன் காற்றை தீண்டாமல் முத்தமிடுகிறது
நீர் தாரை
தத்தெடுக்கப்பட்ட சீனப் பெண்
சீனர்களும் வெண்தோலினரும் வெவ்வேறு விகிதத்தில் வாழும் ஒரு வித இடைப்பட்ட வாழிடத்திலேயே நான் எப்போதும் வசித்து வந்தேன். குறிப்பாக வட அமெரிக்காவில் இனங்கள் ஊடே தத்தெடுக்கப் பட்டவர்களுக்குரிய புறவெளிகளும் வசதிகளும் (spaces and resources) போதிய அளவில் அமைக்கப் படவில்லை இனத்தின் மக்கள் தொகை எவ்வளவு இருந்தாலும், புறவெளிகளும் வசதிகளும் .வெகு குறைவாக, தொலை தூரத்தில் இங்கும் அங்குமாக, பயன்படுத்திக் கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளன.
பிரதி
அன்றுதான் அல்கா முதன் முதலில் அந்த ஒளிரும் கிருஷ்ணனைக் கண்டாள். அதென்ன அப்படி ஒரு அழகு ஒய்யாரம். இடையில் என்ன ஒரு ஒசிவு. அவன் காலருகே தலையை அள்ளிப்பிடித்தபடி ஒரு பித்தி. அவள்தான் தான் என்று நினைத்தாள் அல்கா. கண்ணைக் கொட்டி கொட்டி எத்தனை முயன்றாலும் நீர் திரண்டுகொண்டே இருந்தது. ரமாபாய் சொன்னாள் ‘பரவால்ல இந்த அழகுக்கு முன்னாடி அழாட்டிதான் தப்பு’. அந்த ஒரு மாலையில் அந்த அயல் நிலத்தை தனதாக உணர்ந்தாள் அல்கா.
உயிர்த்தலில் லயித்து
வெளிச்சமற்ற வானத்தில்
மின்னவே இல்லை
நினைவு நட்சத்திரங்கள்
நிம்மதி தருமாறு
எப்பொழுதும்.
அன்பைக் கொன்ற
அசௌகரியத்தை
சமர்ப்பிக்கின்றேன்
மிளகு: அத்தியாயம் அறுபது
அப்பா பசிக்குது அப்பா தாகமாக இருக்கு. எங்கே போனீங்க. ஏன் என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க? என்னைச் சுத்தி ஒரு பட்டாம்பூச்சி பறக்கறது. சித்ரசலபம். அதைத் தவிர வேறே ஒரு உயிர் இங்கே இல்லே. நான் யார் கூட விளையாடணும்? முதல்லே எனக்கு யார் சோறு போடுவாங்க? எங்கே நான் உறங்கறது? தனியாக நான் என்ன செய்யணும்? அப்பா அப்பா அம்மா எங்கே போயிட்டாங்க?
கரையைத் தொடாத அலையின் பாடல்
காட்சியின் உச்சத்தில் ஆடியடங்கி
மையத்தில் செத்து வீழ்கிறாள்
உன் சிரிப்பு அடங்குகிறது
பிரவாகிக்கும் இசையுடன் திரையிறங்க
அகத்துள் துவங்குகிறது நாடகமொன்று
பிரபஞ்சத்தின் கட்டமைப்பு- 3
விண்மீன் மண்டலங்கள் பொறிக்கப்பட்ட , அளவற்ற , நெகிழக்கூடியதான, உச்சகட்ட வெப்பமும் அடர்த்தியும் கொண்ட மிகச்சிறிய புகைமண்டலத்திலிருந்து உருவான, ஆயிரத்து ஐநூறு கோடி ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற ஒன்று தான் பிரபஞ்சம் என்பதே நம் இறுதியான கண்டறிதல்.
ஒருமுறை வந்து பாராயோ?
நிலவொளியை ரசித்துக் கொண்டிருந்தபோது நாம் தற்செயலாகச் சந்தித்தோம். ஆனால் உன்னை நான் கண்டுணர்வதற்குள் நிலவு மேகத்துக்குள் ஓடி மறைந்ததுபோல் சென்றுவிட்டாய்.
துகளியல்
மகரந்த ஆய்வுகள் குற்றப்புலனாய்வில் மட்டுமல்லாது மருந்துகளில் கலப்படங்களை கண்டுபிடிக்க, அருங்காட்சியங்களில் இருக்கும் மிகப்பழைய ஓவியங்களின் காலத்தை நிர்ணயிக்க, தொல்படிம மகரந்த தாவர துகள்களைக் கொண்டு ஹைட்ரோ கார்பன் படிமங்கள் இருக்குமிடத்தை எண்ணெய் நிறுவனங்கள் கண்டறிய என்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சிசிபஸ்
இன்னொரு முறை
இழுத்துப் போனேன் நிழலை
மலையுச்சிக்கு.
முன்பு போல்
நிழலோடு உருண்டது தான் மிச்சம்.
திருப்பித் திருப்பி
இப்படியே.
என்ன அபத்தம்?
இனியொரு முறை
ஒரு கைபார்த்து விடலாம்.
இம் முறை
யார் வேதாளம்
யார் விக்கிரமாதித்யனென்று
தெரியவில்லை.
வீழ்ச்சியடைந்தவர்களால் ஒதுக்கப்பட வேண்டியவை! வீழ்ந்தவர்களால் உரக்கக் கூறப்படாதவை!!
இவ்வுலகில், தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய
இயலாதவர்களையும்கூட உயர்ந்த நிலைக்குச் சேர்க்கும்
புனிதத் தலங்கள் பல, மூன்று உலகங்களிலும் உள்ளன.
ஆனால் நினைக்கவும் கூடாத நடத்தைகொண்டு
தவறிழைத்த மக்களையும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல
உனது ஒப்பற்ற புனித நீரே அனைத்துப்
புனிதத் தலங்களையும்விட உயர்வானதாகிறது.
என்ர ராசாவுக்கு
திருமணமாகி ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும். இருவரும் தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசிக்கும் எண்ணத்தில் திருச்சி வந்திறங்கி, பின்னர் சில திருத்தலங்களை தரிசித்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை வந்தடைந்தனர். ஆகம விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருந்த ராஜகோபுரங்களின் கம்பீரமும் அழகும் அவர்களை பிரமிக்கவைத்தது.
”பலகை, டிவி எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டேன்”
கம்ப்யூட்டர் ஒரு மெஷின். அதை சரிவர பயன்படுத்துவது நம் கையில் உள்ளது. அதன் திறனையும், தேவையையும் புரிந்து கொள்வதும் நம் வேலை. உதாரணத்திற்கு, உங்க சர்வீஸ் ஸ்டேஷன்ல, கார்களின் சக்கரங்களை அலைன் செய்வதற்கு இரண்டு மெஷின்கள் உள்ளது. ஒரு ஷிஃப்டில், 10 கார்களை அலைன் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டால், இருபது வண்டிகளை மட்டுமே ஒரு நாளில் அலைன் செய்ய முடியும்.
கரிக்குருவி நூறு
பிரகாசிக்கும் முகம், சுருக்கம் விழாத தோல், சரியாத ஸ்தனங்கள், தேயாத வளைவுகள் இவையெல்லாம்தான் அவன் கண்ணுக்கும் தெரிந்திருக்குமா… நான் கணவனோடு நிறைவாக வாழ்ந்து முதிர்ந்தவள் என்பது தெரியாதா? என் மனம் குறித்து ஏன் அவன் சிந்திக்கவில்லை? இதற்காக எத்தனைநாள் திட்டமிட்டு காத்திருந்தான்… தெரிந்தவனா? தெரியாதவனா? அறிமுகமானவனா? பேசிப் பழகியவனா? உறவா? எதிரியா? வழிப்போக்கனா…. விடையற்ற கேள்விகள் உதயமாகும் போதெல்லாம் எனது உடல் முழுவதும் சன்னி வந்தது போல் நடுங்குகிறது
அதிரியன் நினைவுகள் -28
இருபத்தாறு வயதில், உரோம் நகர வீதிகளில், வியப்புக்குரிய அவர் அழகை இளைஞர்கள் கொண்டாடியதுண்டு, அந்த அழகில் கிட்டத்தட்ட எதையுமே அவர் இழந்தவரில்லை. தொடர்ந்து அபத்தம், முரண்பாடுகள், மகிழ்ச்சி என்று வாழ்நாளை கழித்த மனிதர். அந்நாட்களில் அவரிடம் கண்ட சுயநலம் இன்று முற்றியிருந்தது. பயணம் மேற்கொள்கிறபோதெல்லாம் தனது தலைமை சமையற்காரரை உடன் அழைத்துசெல்வார்; அவரது தோட்டக்காரர்கள் கப்பலில் கூட அவருக்காக, அரிய மலர்களைக் கொண்டு வியக்க வைக்கும் படுக்கைகளை உருவாக்கினார்கள்
பயணங்கள்- லண்டன்
இங்கிலாந்து வீடுகளில் அழகான தோட்டங்களும் சிறிது புல்தரையும் இருக்கிறது. அமெரிக்காவில் புல்தரைகளுக்குத் தான் முதலிடம். அதற்குப் பிறகு தான் தோட்டங்கள். இங்கும் நுழைவாயிலில் அழகான பூந்தோட்டம். வளைத்து வளைத்துப் பூக்களைப் படங்கள் எடுத்துக் கொண்டோம். கற்கள் பதித்த தரை. 16ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்த பழைய வீட்டினை அழகாகப் பராமரித்து வைத்திருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் தந்தை ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதில் விற்பன்னராக இருந்திருக்கிறார். அவருடன் சில வருடங்கள் தங்கி தொழிலைக் கற்றுச் செல்லவும் மாணவர்கள் இருந்திருக்கிறார்கள்
ஜம் என்று இருக்க வேண்டும்
தினச் சம்பளத்தின்
கசங்கிய தாள்களை அம்மாவிடமும்
கசங்காத தாள்களை என்னிடமும் பார்க்கலாம்
வீடடைய நடுச்சாமம் ஆகுமென்பதால்
சோறெடுத்துச் செல்லும்
வயர்கூடையில் டார்ச்லைட் இருக்கும்
எடுத்துப்போக மறந்துவிட்டேனென்று
இருள் வெளிச்சம்
அதிகாரத்தின் நெடிய கைகளில் இருந்து தப்பிக்க அது இயங்கும் நேரத்தில் நாம் இயங்காமல் இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். வறியவர்களின் கைகள் இருளில் தான் ஓங்கியிருக்கும் வாய்ப்பிருக்கிறது. அது அதிகாரத்தை கூட நடுங்க வைக்கும். அம்மா செய்த ஒரு கொலையை நான் கண்டிருக்கிறேன். அது இருளில் ஆரம்பித்து இருளில் முடிந்ததால் பகலின் நியாய சட்டங்கள் அதற்கு பொருந்தாது என்ற வியாக்யானம்
தேவாலயம் செல்லுதல்
ஆயினும் நான் நின்று பார்க்கிறேன்: உண்மையில் அடிக்கடி செய்கிறேன்,
ஒவ்வொரு முறையும் ஒருவித இழப்பில் முடிகின்றது இதே போல,
எதைப் பார்ப்பது என வியக்கிறேன்; மேலும், வியக்கிறேன்
எப்போது தேவாலயங்கள் முழுமையாகப் பயனற்றுப் போகும் என,
அவற்றை என்னவாக நாம் மாற்றப் போகிறோம் என
தங்க நகரம்
அதை வெகு நேரம் மார்க் ஆராய்ந்து தன் குறிப்பேட்டில் ஏதோ எழுதினார். சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். ஜானை அருகில் அழைத்து அந்த கல்லை சுட்டி காட்டினார். பார்ப்பதற்கு அது ஒரு துணியை அடித்து துவைக்கும் துவைகல் போன்று தோன்றியது. அதன் மேற்பரப்பில் எல்லாம் பச்சை பாசி படர்ந்திருந்தது. ஆங்காங்கே சில மஞ்சள் மற்றும் சிவப்பு கறைகள் போல் திட்டுகள் தெரிந்தன.
மாதவிப் பொன் மயிலாள்
ஒரு ஆவர்த்தம் ஜதி சொல்லி பின்னழகைக் காட்டி அசையாமல் அவள் நிற்க உளி அந்த மென்மையான கற்களில் அவள் நின்ற நிலையை வடித்துக் கொண்டிருந்தது. பின்னர் ‘தர்ஷன் தேஜோ நாத்’ என்ற ‘ஸ்தாவன்’ (பதம்) எடுத்து அபிநயிக்க அதில் சித்தம், சித்தாலயம் என்ற நிலையில் அவள் ஆடாமல் அசையாமல் நின்றாள். அந்த நிலையில் உடலின் கீழ்ப் பகுதி ஒரு நேர்க்கோட்டில் நிற்க, இடை ஒசிந்து, மார்புகள் விம்மி, கரங்களில் தாமரைத் தண்டு கொண்டு வருடும் வீணை அமர்ந்திருக்க, காதுக் குழைகள் நிலைத்து நிற்க, நெற்றி விரிய, எடுத்துக் கட்டிய சிகையே மகுடமாக அவளே ஒரு சாத்யகி போல நின்றாள்
