புளியமரத்தாள்

மரம் பூக்கணும்ன்னு இவ காத்துருந்தாளா! இல்ல இவ பூக்கணும்ன்னு மரம் காத்துருந்துச்சான்னு ஊருசனம் அதிசயமாய் பேசிய புளியமரத்தாளப் பாக்கப்போன எங்களப் பாத்து, ‘அடியே! நீங்களாம் எப்பும் குத்தவைக்கப் போறீங்கட்டின்னு கேட்டா!‘ அதுக்கு நாங்க, கால் வலிக்கும்போது  குத்தவைப்போம்ன்னு சொன்னோம்.

உளியின் மொழி

“என்ன செய்கிறாய், தம்பி? அந்த இடைச்சி  கையில் குழைகளில்லை, காதுகளில் பாம்படமில்லை, இடையில் கூடையுமில்லை, அவள் கழுத்தை சுற்றிப் பிடிக்கும் அட்டிகையுமில்லை, இதில் நீ நடனப் பெண்ணை வடிக்க சந்தர்ப்பம் கேட்கிறாய்? கற்பனையே இல்லை, கவனமும் இல்லை.”

கண்டறியாதன

நமக்கு சிலது தெரிவதில்லை, என்ன தெரியவில்லை என்பதை உணர்வதற்கும் வழி தெரியவில்லை. சில கேள்விகளுக்கு உள்ளார்ந்த விடை இல்லை. பொதுப் புரிதலுக்குள் அடங்காத அதை ஈஷா உபனிஷத் இவ்வாறு சொல்கிறது : ‘அது அசைகிறது, அசைவதில்லை; தொலைவிலும், அருகிலுமாக இருக்கிறது; உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும்’

அடுத்த அமெரிக்க அதிபர் யார்?

இதுவரையில் வெற்றி எங்களுக்கே என்று கொக்கரித்துக் கொண்டிருந்த குடியரசுக்கட்சியினரின் சுருதி கமலா ஹாரிஸின் வருகைக்குப் பிறகு சற்றே குறைந்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இப்படித்தான் 2016லும் ட்ரம்ப்பிற்கு எதிராக ஊடகங்கள் இருந்தன என்று குடியரசுக்கட்சியினர் புறந்தள்ளுகிறார்கள். இரு அதிபர் வேட்பாளர்களும் தங்கள் துணை அதிபர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இருவருமே அத்தனை பிரபலமானவர்கள் இல்லை.

மாயையில் துளிர்க்கும் மலர்கள்

அந்த அறையின் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். வயதாகியும் அபுவின் மீதான ஈர்ப்பு அப்படியே இன்னுமிருக்கிறது. அவனும் அப்படியே. திங்கள் வெள்ளை, செவ்வாய் மஞ்சளும் சிகப்பும் எனப் பல வண்ணங்களில் ஒவ்வொரு நாளும் கைக்கொள்ளும் அளவு மாத்திரைகள் இருவருமே எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இருந்தாலும் என்னைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கைதாங்கலாகக் குளியலறைக்கு அழைத்துச் செல்லவும், வெளியே செல்லும்போது என்னை வண்டியில் அமரவைத்துத் தள்ளிக்கொண்டும் செல்கிறான். என்னிடம் அவன் முழுமையாகவே திரும்பி வந்துவிட்டான்.

தாபம்

போதும்’ என்ற குமாரிக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. நெடுநாள் கழித்த ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவள் எழுந்து சென்று அவளிடத்தில் படுத்துக்கொண்டாள். அவள் மனது குழம்பிப் போயிருந்தது. பகல் முழுவதும் ஈர உடையுடன் அலைந்ததால் அவளில் காய்ச்சலும் தொற்றிக்கொண்டது. நள்ளிரவில் உக்கிரம் கொண்ட காய்ச்சலால் அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். 

அடையாளத் தேர்வு

பாலச்சந்தரும், பார்வதியும் ஒருவர் மாற்றி ஒருவர் இரவெல்லாம் விழுத்திருந்து, வெழிலனுக்கு தேனீர் தந்து அவன் தேர்வுக்கு தயார் செய்ய உதவினார்கள். பாலச்சந்தர் தன் பங்கிற்கு மிக வினோதமான வழிமுறைகளைப் (algorithm) பயன்படுத்தி கேள்வித்தாள் தயார் செய்து தந்தார். அதிலிருந்து புதியதாக பன்னிரண்டு கேள்விகள் கிடைத்தது. அதற்கும் பதில்கள் தயார் செய்தான் வெழிலன். 

ஸ்ரீவாணி மேடம் 

சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா. 

சகுனங்களும் சம்பவங்களும்-3

ஆண் நாத்திகர்களை முகக் குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்களிடமிருந்து வேறுபடுத்தலாம். ஈரானிய ஆண்களை விட ஹிஸ்பானிக் ஆண்கள் அனைத்து நீள் தாடிகளையும் சாதகமாகப் பார்க்கிறார்கள். பாரசீக வெறுப்புப் பேச்சைக் கண்டறியும் இயந்திரக் கற்றல் மாதிரியை அறிஞர்கள் வெளியிட்டனர். எதிர்பாலினத்தவரை விரும்பும் பெண்களை விட தற்பால் உறவுகளில் உள்ள டச்சுப் பெண்கள் குற்றங்களில் சந்தேகிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆதவன், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – உளவியல் பார்வை

கைலாசம் தனது கவலையைச் சமாளிக்க பல பாதுகாப்பு உணர்வுக்கான டிஃபென்ஸ்  வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக, அவர் தனது சக ஊழியரான அகர்வாலுடன் தொடர்புகொள்வதைத் தவிர்ப்பது, அடக்குமுறை அல்லது மறுப்பு ஆகிய உணர்வின் வடிவமாக பார்க்கலாம். இதன் மூலம் அவர் சங்கடமான உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளைப் புறந்தள்ள முயற்சிக்கிறார்.

மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு

நேற்றைக்கு வாளோங்கி நாள் முழுக்க யுத்தம் செய்து எப்போதோ மாலை மயங்கும்போது பின்னாலோ முன்னாலோ வந்த அரசுப்படை வீரர் ஆழக் குத்தி இறக்க வைத்த வாளை திரும்பக் கொடுத்தபோது அந்த உயிர் படிந்த வாள் உத்தியோகஸ்தனால் கவனமின்றிப் பின்னால் எறியப்பட்டது.  அவ்வீரன் இறந்திருந்தால் நேற்று இரவில் அவன் தகிக்கப் பட்டிருப்பான்.

காவிரி சூழ் நாடன்

This entry is part 15 of 19 in the series கவிதாயினி

மிக இளமையில் தன் முதல் போரை வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் எதிர்கொண்டான். வேப்பம்பூ சூடிய பாண்டியனையும் பனம் பூவை சூடிய சேரனையும் வென்ற வீரன் கரிகாலன். பறவைகளும் நாரைகளும் கரும்பு கொல்லைகளையும், நெல் வயல்களையும் கடந்து செல்கின்றன.  பின்னர் அங்கிருந்து பூங்கொடிகளும் பகன்றை மலர்கள் பூக்கும் கடற்கரை கொடிகளின் மேலே பறந்து அங்குள்ள புன்னை மரங்களை தங்கும் நாடு காரிகாலனுடையது. தென்னையும் அதன் மறுபக்கம் வழை மரங்களையும் காந்தலும் சுரபுன்னையும் மலரும் நாடு அது.

தன்னை அறியும் தாலாட்டு!

மனிதனின் தனிப்பட்ட குணம் என்னவென்றால் அவன் மனத்தால் இயக்கப்படுகிறவன்.” ஆகவே தன்னைப் பற்றிய ஆராய்ச்சியை அவனால் மனத்தில் செய்துகொள்ள முடிகிறது. நீண்ட பயிற்சிக்குப் பின்னரே ஒருவனால் தன்னைப் பற்றிய பல பிம்பங்களையும் தன்னுடன் தொடர்பு கொண்டிருப்பவை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றிற்குண்டான பெயர்களையும் வைத்து அவற்றின் பல இயல்புகளையும் பகுத்தறிய இயல்கிறது.

ட்டி.கல்லுப்பட்டி நகுலின் 418 வது கேட்ச்

ஏன் நண்பரே அந்த கேட்ச்சை விட்டீர்கள். எனக்குத் தெரியும் அது மிகச்சுலபமான கேட்ச் என்று. 418 வது கேட்ச். எவ்வளவு விலைமதிப்பில்லாத கேட்ச் என்று உலகமே அறியும். உங்களின் இரக்கத்தால் தானே நாங்கள் ஜெயித்தோம்.  அனைத்தையும் விளக்கிச்சொல்லி எங்கள் பத்திரிக்கைக்கு சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் என் தந்தையின் மரணம் நிகழ்ந்து விட்டது. முப்பது நாட்கள் நான் எங்கும் போகக்கூடாது.

குமார சம்பவம் மஹா காவ்யம்- 10

வழக்கமாக சப்த ரிஷிகள் நீராடி முடித்து, மலர்களையும், தூர்வா என்ற புல்லையும் வைத்து அர்ச்சனை செய்தவை மட்டுமே இருக்கக் கண்டவர்கள், நதியின் வெண் மணலையே கண்டனர்.  யோக சாதனைகள் செய்பவர் மூடிய கண்களுடன் தங்கள் தியானத்தில் ஆழ்ந்து இருந்ததையும் கண்டனர்.  பாதங்களின் கட்டை விரல் மட்டுமே பூமியை தொடுவதாக நின்றபடி ஸூரியனையே நோக்கியபடி ப்ரும்ம ரிஷிகள் தவம் செய்தபடி நின்று கொண்டு இருந்ததைக் கண்டனர். 

வட்டம்

அர்ச்சுன வாயிலினுள் நுழையும் முன்  வலது புறமாக காட்டுக்குள் நுழைந்து சென்றால் கழுகுப் பாறையை அடையலாம். அருகிலேயே பிரசன்னரின் மடம் உள்ளது. பிரசன்னரின் மடத்தில் விழுப்புண்களுடன் கொஞ்ச காலம் அணங்கர் தங்கியிருந்தார். குருவின் அருளினால்தான் இந்நகரம் நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கழுகுப் பாறையின்  நுனி நின்று நோக்குகையில்தான் ஒரு கணம் தோன்றி மறைந்தது இந்த மாநகரம்.

அதிரியன் நினைவுகள் – 43

This entry is part 42 of 48 in the series அதிரியன் நினைவுகள்

இவை அனைத்திற்கும், ஏற்றுகொள்ளப்பட்ட வழிபாட்டு மரபுகளில் தொடர்ந்து ஏற்பட்ட  அபரிதமான வளர்ச்சியும், ஒருசில மக்களின் இச்சகப் போக்கும்,   அரசு மானியங்களை எதிர்பார்க்கிற சில சமயக்குருமார்களின் கேவலமான நடவடிக்கைகளுமே காரணமாக இருக்கக்கூடும். சோகமும் இனிமையும் கொண்ட ஆண்ட்டினூஸ் முகம் பாமர பக்திகாரணமாக ஏழைகளுக்கும், நலிந்தோர்க்கும் சகாயத்தின் வடிவம் ; தங்கள் பிள்ளைகள் இளம்வயதில் பறிகொடுத்த ஒரு சிலருக்கு அவன் முகம் ஆறுதலையும் தருகிறது

ரகசியமானது காதல்

இப்பாடலுக்கு மறுமொழியாக இப்புலவர் இயற்றியது “ஓஷிமா மீனவர்களின் உடையைவிட அதிகமாக நனையும் அளவுக்கு என் கண்ணீர் வற்றாமல் இருக்கிறது” என்பது. இப்பாடலின் இறுதி அடியில் கைப்பகுதியின் வண்ணம் மாறியிருக்கிறது என்று வருகிறது.

இருளையும் ஒளியையும் வென்றவன்

This entry is part 11 of 14 in the series குடாகாயம்

கரவாஜியோ இறந்து இப்பொழுது நானூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றும் செவ்வியல் முறையின் முக்கிய மாமேதை என்றும் இருளையும் ஒளியையும் ஓவியத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று நமக்குக் கற்றுக்கொடுத்த வித்தகர் என்றும் புகழப்படுகிறார். கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) என்ற மாபெரும் வகைப்பாட்டை ஓவியங்களில் துவக்கிவைத்தது

பொற்குகை ரகசியம்- சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பு அனுபவம்

கதாசிரியரின் பல வரிகள் ரசிக்கும் படி உள்ளது. “ கொமாரப்பாளையத்தில் சங்கமேஸ்வரன் என்னும் பெயர் உள்ளவர்களை தேடுவது,  மாலத்தீவில் டூனா மீனை தேடுவது போலத்தான்”. “எந்த நேரமும் உடைந்து நொறுங்கி விழக் கூடிய கண்ணாடி பாத்திரத்தை போல நடமாடிக் கொண்டிருந்தாள் அம்மா”. “அந்த எழுத்துக்களை கவ்விக் கொண்டு ஒரு சிவப்புக் கழுகு இறகுகளை விரித்து மேலெழுந்துக் கொண்டிருந்தது”. “நீட்டலும், மழித்தலும் வேண்டா என்ற முதுமொழியை பின்பற்றும் வண்ணம் முள்ளாய் பரவிய  தாடியும், மீசையும் வைத்திருந்தார்”

தெய்வநல்லூர் கதைகள் – 21

This entry is part 21 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

சிறுவர்களை கூட்டி வைத்து விளையாடுவதாக கேட்டவர்களுக்கு குருசாமியண்ணன் சொன்ன பதில்களின் தொகுப்பாக இப்பதிலைச் சொல்லலாம் – “அதென்னடே சின்னப்பயலுகங்கே? நீ பொறக்கையிலேயே  மீச மயிறோடயே பொறந்தயோ? பள்ளிக்கூட பாடத்தக் கூட படிக்கமாட்டாம படிப்ப நிப்பாட்டுனவன்லாம் பெரிய மனுசன். பாடத்தத்தாண்டி பொஸ்தகம் படிக்க இவங்கல்லாம் சின்னப்புள்ளைக, என்னடே?

அருண் பாண்டியன் கவிதைகள்

எந்தத் திரைப்படங்களிலும்
காட்டப்படாத வன்முறைகள்
எந்நேரம் வேண்டுமானாலும் நடக்கும்
அப்படித்தான் ஒருநாள்
அப்பமொன்றை சப்பிக்கரைக்கும் நிமித்தத்தில் ஏதேதோ நிகழ்ந்து விட்டிருந்தது
ஒற்றைப் பள்ளிச் சிறுவனை
பத்து வாலிபர்கள் கூடித் தாக்கும் பேரவலம் அது

அறிவிப்புகள், வாசகர் கடிதம்

உங்கள் வாடிக்கையாளரின் திருமண நாள் வருகிறதா? அதற்கு உரிய வாசகங்களோடு, நானே பிரத்தியேகமாக எழுதிய மாதிரி வசனங்களை உருவாக்கி, நீங்களும் நானும் இணைந்து எடுத்த நினைவுகளை விநோதமாக மீட்டெடுத்து, நம் உறவை பலப்படுத்தி, அடுத்த விற்பனையை ஊக்குவித்து, திருப்திகரமான அனுபவமாக மாற்றுவது எவ்வாறு என்று யோசியுங்கள்.

இரு கவிதைகள்

நினைவின் தடங்கள்
மெல்ல மெல்ல அழிய
முன்பு போல
சலசலப்பில்லை
சமுத்திரத்தில்…
இப்போதெல்லாம்
சடலத்தை துக்கமின்றி
அணுகும் மருத்துவனைப்
போல் சலனமின்றி
கடக்க முடிகிறது