“லெகோ ரூமில்” ப்ளாக்குகளை அவர்கள் கலவரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த “ஜிம்மி திங்” பாடலின் கிட்டார் கோவைகள் இந்நினைவுகளைக் கிளர்த்தெழுப்பின. லெகோ அறை என்பது பல பிறந்தநாட்கள் வழியே படிப்படியாக இயல்பாக உருவான ஒன்று. அவர்கள் மேலும் மேலும் ப்ளாக்குகளை சேர்க்கச் சேர்க்க அந்தக் கட்டுமானம் பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு அவர்கள் “Life Desired – WIP” என்று பெயரிட்டிருந்தார்கள்.
Category: இதழ்-324
கனியக்கா
வீட்டுக்கு ரெண்டுக்கூறு எடுத்து மொதல்லயே கொடுத்துருவாரு. சில நாள் வியாபாரம் சரியில்லாமல் கறி மீந்துப்போச்சுன்னா. ஓவ்வொரு கூறையும் பனையோலைப் பட்டையில் போட்டு பொதிஞ்சி ஓலைப்பெட்டியில் அள்ளிப்போட்டு, சைக்கிள் பின்னாடி வச்சுக் கட்டிக்கிட்டு பக்கத்தூரு… எங்கூருக்கெல்லாம் விக்க வருவாரு. அவர் குரலும் மலையாள வாடை கலந்த அழகான தமிழும் வாங்க விருப்பமில்லாதவர்களையும் வாங்க வச்சுரும்.
சகுனங்களும் சம்பவங்களும் – 1
உளநோய் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் என்பாரும் இறையியல் நிபுணரும் ஆங்கில எழுத்தாளரும் ஆன “நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) எழுதிய சி.எஸ்.லூயிஸ் என்பாரும் சந்தித்துப் பேசிக் கொண்டால் எதைப் பற்றியெல்லாம் உரையாடி இருப்பார்கள்? கடவுள் இருக்கிறாரா? இருந்தால் உலகப் போர்களைத் துவங்க ஆசீர்வதித்து இருப்பாரா? மகள் தந்தையை கவனிப்பதும், நண்பனின் அன்னையை பாதுகாப்பதும் – எல்லாமே காமத்தின் அடிப்படையில் தானா?
சந்திப்பு- யுவன்
அடுத்த நாள் கொஞ்சம் நிதானமாக எழுந்து, கிளம்பி, சிறிய காபி வித் யுவன் நிகழ்வு. அப்போது தான் கவனித்தேன் – கண்ணாடி குவளையின் கைப்பிடியை நான்கு விரல்களை மட்டும் பயன்படுத்தி பிடித்து, கட்டை விரலை தனியாக வைத்து குடிக்கும் காட்சியை. பின் தங்கி இருந்த இடத்தில் இருந்து புறப்பட்டோம். “காலம்” செல்வம் அவர்கள் – யுவனோடு ஒரு உரையாடல் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார்.
சிப்பிகளின் சிதறல்
வார்த்தைகள் உதடுகளில் நறுநறுக்க ஆரம்பித்திருந்தன. படிக்கட்டுகளை சுற்றிலும் பதற்றத்தோடு துளாவ ஆரம்பித்திருந்தாள். மண்டபம் வழக்கமான ஆள்நடமாட்டம் இல்லாமல் கலையிழந்து கிடப்பதை பற்றியோ, எங்கிருந்தோ வாரி இறைக்கப்பட்ட ஏதேதோ பொருட்கள் அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதை பற்றியோ அவளிடம் எந்த புகாருமில்லை. அவளது கவனம் முழுவதும் அவளது அழுக்கு மூட்டையை கண்டடைவதில் இருந்தது.
லக்ஷ்மி சிரித்தாள்!
தன் மருமகள் செல்வி ‘உண்டாகியிருக்கிறாள்’ என்ற நற்செய்தியை மகன் சபேசன் சொன்னதில் இருந்து முருகேசருக்கு ஒரே குதூகலம். “மகன், மூண்டு நாலு மாதத்திற்கு செல்விக்கு நல்ல சத்தான சாப்பாடுகள் கொடுக்கவேணும் கண்டியோ….தண்ணி கலக்காத நல்ல சுத்தமான பால் கொடுக்கவேணும். எங்களின்ட வயல்காறன் ராசு கிட்ட சொல்லி ஒரு கறவை மாடு ஒண்ட வாங்கி இஞ்ச கட்டி வச்சா நான் பால் கறந்து செல்விக்கு கொடுக்கலாம் கண்டியோ” என்ற முருகேசரின் ஆலோசனை உதாசீனப்படுத்தப்படவில்லை.
சுநீதி, நிர்மலா மற்றும் நூரி
பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் என்றாலும் மகாராஷ்டிர தோல் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ’எப்படி ஒரு வட இந்தியப் பெண் தமிழகப் பெண்களின் ஒழுக்க குறைவினால் நோய் வந்ததாகத் தெரிவிக்கலாம்’ என்றும் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவப்படிப்பு முடித்தபின்னர் சிகாகோவிலும் லண்டனிலும் பணியாற்றி விட்டே சுநீதி சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில் 1973-ல் இணைந்தார்
வாழ நினைத்தால் வாழலாம்
க்ரையோனிக்ஸ்’ (cryonics) என்ற துறையில் முன்னிலை வகிக்கிறது. மரணத்தை வெல்லவும், வாழ்தலை நீடிப்பதற்கும் உதவும் துறை க்ரையோனிக்ஸ். மிக மிகக் குறைந்த தட்ப வெப்ப நிலையில் மனித உடல்களைக் குளிரூட்டி, பின்னர் தேவையான போது மீண்டும் உயிர்த்தெழச் செய்யும் தொழில் நுட்பத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
காலிங் பெல்
சத்யா அவனைக் குளிக்க வைத்தாள். மெதுவாகப் படுக்கையில் சாய்த்தாள். மாமியாரிடம் பொதுவாகப் பேச விரும்பாத சத்யா, இன்று போன் செய்து ஒன்றுவிடாமல் ஒப்புவித்தாள். அவனின் அம்மா சத்யாவைத் திட்டித் தீர்த்தாள். உடனே சென்னைக்கு பஸ் பிடித்தாள். ராம் விடிய விடிய உறங்காமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். சத்யா அவன் தலையில் எலுமிச்சைப் பழம் தேய்த்துப் பார்த்தாள். பித்தம் குறைந்தபாடில்லை. அவனது அம்மா வந்தவுடன், ராமின் உடல்நிலைக் கண்டு பதற்றமடைந்தாள்
தோசையம்மா தோசை
என்றைக்காவது இட்லியோ உப்புமாவோ சப்பாத்தி பூரியோ செய்தால் ஏதோ ஒப்புக்கு சாப்பிடுவோமே தவிர தோசை என்றால்தான் எல்லார்க்கும் குஷி. எங்களுடன் அம்மாவும் தோசையை தட்டில் போட்டு க்கொண்டு சாப்பிடும்போது அதிலிருந்து ஒரு விள்ளலை பிடுங்குவது சுஜியின் வழக்கம். அம்மா சிரித்தபடி அந்த விள்ளலை அவள் வாயில் ஊட்டிவிடுவாள்.
மறக்கப்பட்ட தியாகி: கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை
ஆஷ் படுகொலை என்பது ஆரிய சனாதன தர்மத்தினைக் காப்பதற்காக உயர்சாதி இந்துக்கள் இணைந்து செய்த தனிமனித பலாத்காரம் என்று சிலரால் விமர்சிக்கபப்டுகிறது. ஆஷ் கொலைக்கான காரண காரியங்களை நுட்பமாக ஆராயும் பொழுது, இக்கொலையானது ஆஷ் மீது சுதேசிகள் கொண்டிருந்த தீரா பகையின் விளைவாகவே நடந்ததென்பது புலனாகும்
இந்தியாவின் சுருக்கமான வரலாறு – ஜான் ஜூபர்ஸிக்கி (தமிழில் அரவிந்தன்)
5000 ஆண்டுகளிலிருந்து இன்றுவரை நடந்தவை ஒரே நூலில் அமைந்த பூசரடுகள் போல நீண்டு வருகின்றன. இடுபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி மொகசந்தாரோ, ஹராப்பா நாகரிகத்திலிருந்து இன்று நடக்கும் அரசியல் மாற்றங்கள் வரை சமகாலதன்மையை உணர்ந்தும் வகையில் அமைந்திருக்கிறது.
தெய்வநல்லூர் கதைகள் – 19
மதிய வகுப்புகளில் முதல் வகுப்பு மீசை சாருடையது என்பதால் அதிகம் பதட்டப்பட வேண்டியதில்லை என ஆறுதல் கொண்டோம். மீசை சார் வரும்போதே ஓரக்கண்ணால் பிரேமை கவனித்தவாறே வருவது தெரிந்தது. இயல்பாக இருப்பது போல பாடத்தை ஆரம்பித்தவருக்கு ஐந்து நிமிடங்கள் கூட தாங்க முடியவில்லை. பிரேமை தன் இருக்கை அருகே அழைத்தார். உரையாடல் இருபது விநாடிகளில் முடிவடைந்தது. மீசைக்குள் ஒரு இளநகை அரும்புவதை எங்களால் உணர முடிந்தது. அதன்பின் வகுப்பு வழக்கத்தை விட இனிமையாக போனது.
நான் ஆணையிட்டால் – 3
நீ என்னைவிட பதினைந்து வயது சின்னவள். அதனால் தெரிந்திருக்காது. அரசாங்கக் கல்விக்கூடங்கள் கிறித்துவம், தேசப்பற்று, ஒழுக்கம், (பைபிள்) கடவுளின் மேல் நம்பிக்கை, ஐரோப்பிய பண்பாடு இவற்றில் இருந்து விலகிப்போனதால் குழந்தைகளை வீட்டிலேயே கற்பிக்கும் பழக்கம் அரை நூற்றாண்டுக்கு முன் தொடங்கி வேகமாக வளர்ந்தது
மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
போர்த்துகல் படைகள் வருவதை துரிதப்படுத்த அவர்களின் ஒரு பகுதியை கோவாவில் இருக்கும் போர்த்துகல் காவல்படையில் இருந்தும். டையூவில் இருந்தும், டாமனில் இருந்தும் உடனடியாக ஷராவதி நதியில் பயணம் செய்வித்து அனுப்பவும், அவர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் தரப்படும் என்றும் வேண்டும் கடிதத்தை உடனே பெத்ரோ பிரபு மூலம் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெத்ரோ இதற்கான உத்தரவை கோவா பிரதிநிதி ப்ரகான்ஸாவுக்கு அனுப்பி உடன்பட வைத்ததாகப் பகிரப்பட்டது.
அதிரியன் நினைவுகள் -41
கடலோரக் காவல்படைகளை ஆய்வு செய்தேன். கடமையில் நேர்மை, துருப்புகளுக்கு அளித்த பயிற்சியில் புதிய முறை,பொறியியல் வேலைகளின் தரம் ஆகியவற்றிற்காக அவர்களின் தளபதிகள் மிகச்சிறந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள்…… நன்கு அறியப்படாமலும், பராமரிப்பின்றியும் கிடந்த கடலோரப் பகுதிகளெங்கும், கள ஆய்வைமேற்கொண்டு தேவையெனில் எனக்கு முன்பாகப் பயணம்செய்த கடலோடிகளின் குறியீடுகளைத் திருத்தவும் செய்தேன்
பாவம், மரணம், நரகம்
இடப்பகுதி ஒருவித தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், கருமை நிறத்தில் வலப்புறம் ஒருவித நரகம் போலவும், நடுப்பட்ட பெரும்பகுதி சுவர்க்கம்-நரகம் போன்றவற்றின் கலவையாகவும் தோன்றுகின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நாம் பகுதிகளைத் தனித்தனியே பார்த்தாக வேண்டும். முதலில் இடப்புறம், இது ஈடன் தோட்டத்தின் வடிவம். நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது கீழ்ப்பகுதி, இங்கே கர்த்தர் ஏவாளையும் ஆதமையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்,
வேந்தர்களைப் பாடுதல்
பகை நாட்டரசனின் அரண் வலிமையை கூறும்போது அவன் கோட்டையைச் சுற்றியுள்ள அகழி பற்றி கூறுகிறார். கோட்டை பாதுகாப்பு வீரர்களின் கையில் உள்ள தீப்பந்தத்தின் நிழல் அகழியில் விழுந்தால் கூட அதை கவ்விப்பிடிக்கப் பாயும் முதலைகள் உள்ள அகழி என்கிறார். இந்த ஒன்றைச் சொல்வதன் மூலம் அரண் வலிமையை அரசனுக்குச் சொல்லிவிடுகிறார்.
உள்ளத்தில் உள்ளேனா?
வானத்தில் வட்டநிலா என்னை அழச்சொல்கிறது. இல்லையில்லை. அழவைப்பது என் உள்ளத்தின் நினைவுகளே. கண்ணீர் பெருக்கெடுப்பதற்கு நிலவைக் குறை கூறுவானேன்?
குமார சம்பவம் மஹா காவ்யம்- 8
ஹே! பார்வதி, திடுமென அந்தகாரம் மறைந்து வானம் சந்திரனின் ஒளி நிரம்பி நிர்மலமாகத் தெரிவதைப் பார். யானைகள் குளித்து குளத்தை சேறாக்கி விட்டு சென்ற பின் சற்று நேரத்தில் குளத்து ஜலம் சுத்தமாக ஆவது போல இருள் சேறு போல வானத்தை மறைத்திருந்தது. சந்திரனின் வரவால் தூய்மையாகி விட்டது. தூய்மையான எண்ணங்கள் கொண்ட நல்லவர்கள் கால வசத்தால் கஷ்டங்கள் அனுபவிப்பதும், பின் நன்மை அடைவதும் போல இருக்கிறது.
கோசின்ரா கவிதை
குடித்த பின்புதான்
அவருக்கு அதிகதிகமான தாகம் எடுக்கிறது
காதலியின் தந்தை கேட்கிறார்
தம்பி நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா
கடவுள் விழுங்கிய படி பதில் சொன்னார்
இல்லையென்றார்
கு.அழகர்சாமி கவிதைகள்
யார் முந்தி
யார் பிந்தி
என்றெல்லாம் இல்லை.
பறவைகள் தமக்குள்
போட்டி போட்டுக் கொண்டா
பறக்கின்றன?
