பற்றுவெளி

செல்வம் மச்சான்தான் ராத்திரி கஞ்சி கொடுப்பது வழக்கம்.  எப்பவும்போல் கஞ்சியை பதமாக ஊதி ஆறவச்சு ஊட்டுனார். கஞ்சி  உள்ளே இறங்காமல் கடைவாயில் வழியறதைப் பார்த்துமே  வெளியே போய் துண்டால் முகத்தை மூடிக்கொண்டு மச்சான் அழுகாச்சி பிடித்து விட்டார்.  ராத்திரியெல்லாம் எங்கய்யன் எங்ய்யன்னு என்று  கண்ணை மூடாமல் அனத்தியபடி கிடந்தார்.

ஈர்ப்பு அலைகள் – பகுதி 1

This entry is part 1 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் மற்றும் மண்டலங்களின் தூரம் மனிதர்கள் சாதாரணமாய் கடக்கும் தூரத்தை விட, மிக மிகப் பெரியது. இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாக பயணிக்கும் விஷயம் ஒளி மற்றும் அதைப் போன்ற மின்காந்த கதிரியக்கம். அந்த வேகம் நொடிக்கு 300,000 கிலோ மீட்டர்கள். விண்வெளி பெளதிகத்தில் மிகவும் முக்கியமான தூர அளவீடு ஒளி வேகம்.

திரிபுரை

“இந்த ம்யூசியத்துல பாருங்க – வித விதமான மொழி பேசும், பலவிதமான வாழ்க்கை கொண்ட வரலாற்றுச் சக்திகள் எல்லாம் ஒரே கூரைக்குள் இருக்கு. ஆனா பல அறைகளில் விதவிதமான காரணங்களால் இருக்கு. நாம எல்லாரும் அப்படித்தான் வாழறோம் – ஒவ்வொரு அறையிலும் ஒரு முகம். பல அறைகள், பல முகங்கள் – இது நம்மை உடைக்காம, நம்ம கதையைச் சொல்ல உதவனும். ஆனா எல்லா அறைகளும் ஒரு  பெரும்கதையின் பகுதி.

தொலைந்து போன பொருள்

முதலிரவன்று மனைவியுடன் முதன்முதல் சந்திப்பு ஏற்படும் முன்னர் சுதன்யா ஒரு சிட்டிகை பொடி உறிஞ்சி, தன நரம்புகளை சரியான நிலையில் வைக்க முயன்றிருக்கிறார். புது மனைவி ஹேமந்த பாலா முதன் முறையாக அருகில் வந்து மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டாள். ‘நீங்கள் பொடி போடுவீர்களா?’ வெட்கமடைந்த சுதன்யா சொன்னார். ‘நடுநடுவே கொஞ்சம் போடுவேன்.’ 

ஒற்றைத் தலைவலி

இனிமேல் தொலைக்காட்சியே கூடாது. டீனாவை அமைதியாக இருக்கச் செய்யத்தான் ஜாய்ஸ் அதை வாங்கினாள், ஆனால் அது இனிமேல் தேவைப்படாது. அவள் தொலைவியக்கியை எடுத்தாள், பிக் அப் ட்ரக்குகளுக்கான விளம்பரத்தில் மீதிப் பகுதியைப் பார்த்தாள், பிறகு தொலைக்காட்சியை அணைத்தாள். வெற்றுத் திரை அவளுக்கு அசௌகரியமாக இருந்தது. ஏதோ அந்தத் திரை அவளைக் கண்காணிக்கிறது என்பதைப் போல இருந்து அவளை நிதானமிழக்கச் செய்தது. தொலைவியக்கியை தாழ் மேஜையில் வைத்தவள், மற்றப் பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தாள். 

முன்னும் பின்னும் – சமத்துவத்தின் வியக்கத்தக்க தோற்றமும் அதன் அரசியலும்

மெக்மாஹனைப்  போலவே தெரசா பீஜேன்னும் சமத்துவம் என்கிற கருத்தியல் பழங்காலத்திலும் நவீனக்காலத்திலும் எப்படி மாறுபடுகிறது என்பதை சுட்டுகிறார். தற்போதைய காலத்தில், சமத்துவம் என்பது சமூகத்தின் பல்வேறு பிரிவுகள், நிலைகளில் உள்ள அனைவரையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்ற கருதுகோளை நோக்கி நகர்ந்திருப்பதாக சொல்கிறார். 17 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து குறித்த விவாதத்தில் அன்றைய சமூகம் வெள்ளை நிற மக்கள் எல்லோரும் சமம் என்ற நிலையை ஏற்றுக்கொண்டது.

நீல வாகா

அனிருத்துக்கு தேர்வு வருகிறது, நன்றாக படிக்க கூடியவன், ஆனால் கடந்த சில மாதங்களாகவே எதிலும் சற்று பிடிப்பு இல்லாமல் இருக்கிறான். தேர்வு சமயத்தில், தேவை இல்லாமல் அதிகம் பதட்ட படுகிறான். ஒருவருடம் இடைவெளி விட்டு மருத்துவம் தொடரட்டுமா என்கிறான். ஒருவேளை சரியாக படிக்கவில்லை என்றாலும் வேறு யோசனை செய்வேன், சென்ற ஆண்டு தேர்வில் என்பத்தி நான்கு சதவிகிதம் எடுத்திருந்தான். 

புரத்தல்

தொழுவத்தின் கூரையில்
முட்டையிட்டு அடைகாத்த
கோழியின்
பக் பக் ஒலி
இரவைக் கூட்டிக்கழித்து
எல்லாம் சரியாக
இருப்பதாய்ச் சொன்னது

கேள்வியின் நாயகனே

‘என் அறியாமைகள் எனக்குத் தெரிகின்றன; அப்படியென்றால் நான் எப்படி புத்திசாலியாக இருக்க முடியும்?’ இந்தப் புதிரை விடுவிப்பதற்காக, அவர், அறிவுஜீவிகள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்பவர்களான அரசியல்வாதிகள், கவிஞர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோரிடம் கேள்விகள் கேட்டிருக்கிறார். துறைசார் அறிவு அவர்களுக்கு இருந்த போதிலும், அதனாலேயே மற்ற அனைத்திலும் தாங்கள் அறிவு மிக்கவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும்

This entry is part 10 of 11 in the series காருகுறிச்சி

அவர் தனக்கு தெரியாத எதையும் எழுதுவதில்லை.  இது எழுத்தாளனின் முக்கிய அம்சம்.  இவர் அடிப்படையில் ஒரு தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்.  ஆனால் கூகிள், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை மட்டுமே முழுதாக நம்பி இறங்காதவர். களத்தரவுகளை நம்புபவர்.  இதுவே படைப்பின் ஆன்மா ஆகையால், அவர் காருக்குறிச்சியைத் தேடி நேரில் சென்று அனுபவத்தை பெற்று நமக்கு கடத்தியிருக்கிறார்.

ரா.கிரிதரன் குறுங்கதைகள்

மதியம் பனிரெண்டு மணிக்கு ஒரு முறையும் ரெண்டு மணிக்கு ஒரு முறையும் இறந்ததாக நர்சரி பள்ளிக்கூடத்து டீச்சர் மாலினி சொன்னாள்.  எப்படி ரெண்டு தடவை ஒருவர் இறக்க முடியும் எனக் கேட்கக்கூட அவளுக்கு நேரம் இருக்கவில்லை. ரெண்டரை மணிக்குள் குழந்தைகளை வீட்டில் சேர்க்காவிட்டால் பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் ஓடிவிட்டாள்.

ராவண நிழல் – புதினம்

சிவராவின் அப்பா காலத்தில் தோலின் விலை கடுமையாகக் கூடிவிட்டது. மேலும் வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதியாக ஆரம்பித்தது. பற்றாக்குறைக்கு ஏஜெண்டுகள் எல்லாக் கிராமங்களுக்கும் சென்று தேடிப் பிடித்து ஆட்டுத்தோல்களை வாங்கிச் சென்று விடுவர். கடைசியில் கணிகர்களுக்கு நோஞ்சான் ஆட்டுத்தோல் மட்டும்தான் கிடைத்தது. இதனால் கணிகர்கள் பலர் மிகவும் துன்பப்பட்டனர்.

மனிதர்களின் கதை: நிழல்  நிஜம்

ஒரு புதினத்துக்கு காலப் பின்னணி மிக முக்கியமானது; ஏனெனில் அதை சார்ந்தே பாத்திரங்களின் மொழி, மற்றும் வர்ணனைகள் அமையும். மட்டுமன்றி, சமகாலத்தை படைப்பாக்குதல் ஒரு சவால்! நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகங்களும், முகமூடிகளுமே அவர்தம் வாழ்வியலும்,பண்பாட்டு,பொருளாதாரச் சிக்கல்களுமே ’ராவணநிழல்’ எனும் படைப்பிலக்கியத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்பதை எவருமே மறுக்கவியலாது.

ஹர்ஷ சரித்திரம்- 2

ஆபரணங்களின் ஒளி கண்களைக் கூசச் செய்ய, நடுவில் ஒரு இள வயது வீரன், மாலதி மலர்களால் ஆன மாலை இடை வரை தொங்க, உலகையே வெற்றி கொள்ளும் முக பாவனையோடு அமர்ந்த்திருந்தான்.  அணிந்திருந்த பொற் சங்கிலியில் பதிக்கப் பட்டிருந்த சிவந்த மாணிக்கம் தூசியினால் மறைக்கப் பட்ட அவன் முகத்தை தெளிவாக காட்டியது.  வன தேவதையில் கையில் பல வண்ண மலர்கள் இருப்பது போல அவன் உடலில் பத்ம ராக, வெண்ணிற மணிகள்  அலங்காரமாக பதிக்கப் பட்ட ஆடை.

அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள்

ராமகிருஷ்ணனின் கதை எப்போதாவது நமது செல்கள், நமது டிஎன்ஏ மற்றும் நமது புரதங்களின் நுணுக்கங்களுக்குள் மிகத் தொலைவில் அலைகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, அவரது எழுத்து புத்திசாலித்தனமாகவும் அணுகக்கூடியதாகவும் உள்ளது. சராசரி வாசகருக்கு இந்த உயர்-சூழல் கருத்துக்களை மறைக்க அவர் பாடுபடுகிறார், மேலும் அவரது அத்தியாயங்கள் பெரும்பாலும் அவரது அறிவியல் கருத்துக்களுக்கு உருவகங்களாகவோ அல்லது முன்மாதிரிகளாகவோ செயல்படும் துடிப்பான நிகழ்வுகளுடன் தொடங்குகின்றன

மிளகு – அத்தியாயம் 87

நாலைந்து கட்டிடங்கள்   சிதிலமடைந்து, அதெல்லாம் நானூறு வருஷம் முன்பு மனுஷர் வசித்த சிறு மாளிகைகளாக இருக்கலாம். விளக்குத் தூண் தெருச் சந்திப்பில் இருந்து விழுந்ததாக இருக்கலாம். அப்போது அங்கே சந்தித்துப் பிரியும் சாலைகள் இருந்திருக்கலாம். அப்புறம் சிதிலமடைந்து ஜ்வாலாமுகி கோவில். மகா முக்கியமாக சதுர்முக  பஸதி, கிட்டத்தட்ட சிதிலமடையாமல்

வேர்கள்

இந்த உலகம் எவ்வாறு தோன்றியது, எதனால் செய்யப்பட்டது, எவ்வாறு ஒழுங்குபடுத்தப் படுகிறது மற்றும் இயற்கை நிகழ்வுகளின் காரணம் என்ன? – சிந்தனைக்கும் எட்டாத காலத்திலிருந்து, அல்லது குறைந்தபட்சம் மானுடம் தொல்பிரதிகளை விட்டுச்சென்ற காலத்தில் இருந்து மானுடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடைகளையே கொடுத்தனர்

மொகரைல சவக்களை

This entry is part 25 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

எம் ஏ என் சார் கேட்பதற்குக் கூட காத்திராமல் நாங்கள் நடந்ததைச் சொன்னோம். முக்கியமாக எதையுமே கேட்காமல் நேரே போய் படுத்திருந்த பிரேமை அடித்து எழுப்பியதையும், பிரேமிடம் எதையும் கேட்காமலேயே தொடர்ந்து அடித்ததையும், நாங்கள் அவரை தடுக்க முயற்சித்ததையும் நால்வருமாக சொல்லி முடித்தோம். எம் எஸ் சி சார் முகத்தில் அதுவரை இருந்த “ஹேண்ட்ஸம்நெஸ்” மெல்ல வடிந்து ஜெயராஜ் சார் வகுப்பில் வைவதைப் போல “மொகரைல சவக்களை” வந்தமர்ந்தது.

6. மறைக்கப்பட்ட திட்டம்

இந்த அணுவின் அமைப்பு நடராஜப் பெருமானின் நடனத்தோடு ஒப்பிடப்படுகிறது. அவனுடைய ஒழுங்கான நடன அமைப்பின் காரணமாகவே இந்த அண்டம் இயங்குகிறது எனலாம். ஆடும் அவன் கையில் தீ, காலில் மண், தலையில் நீர், கையில் உள்ள உடுக்கையில் காற்று, ஆடுமிடம் ஆகாயம் எனப் பஞ்ச பூதங்களும் அவனாகவே நின்று, அனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் தான் அனைத்துள்ளும் நின்று ஆடுகிறான். இதுவே அணுத்தாண்டவம்.

காண்பதில்லா குழந்தைகளின் உலகில் காட்சியாகி

குனிந்தவுடன்
தன் தோளின் மீது
கழுத்தைக் கட்டிக் கொண்ட
குழந்தையைத் தூக்கி
குழந்தையைத் தூக்காமல்
இலேசாய் நடப்பதை விட
இலேசாய் நடப்பதாய்
நடந்து செல்கிறான்
நெகிழ்ச்சியில்
தந்தை!

ஸ்வப்ன வாசவ தத்தா – 3

This entry is part 3 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

சகே, ருமன்வான், வாசவதத்தா இல்லாமல் அரசர் கௌசாம்பி வர மாட்டார். இந்த வேஷம் இருக்கட்டும். நாம் சாதாரண பிரஜைகள். அரசரிடம் கொண்ட அபிமானத்தால் யோசிக்கிறோம். புல் படுக்கையில் படுப்பவன் அரச போகங்களை உயர் தர சயனாசனங்களை நினைத்து பார்க்க கூட முடியுமா? அரசனுக்குரிய பட்டு ஆடைகளை, விரிப்புகளை எண்ணித் தான் பார்ப்பானா? நம் வரையில் திட்டமிட்டோம். ஸ்வாமி ஜாதி- செல்வந்தர்கள் வழி.  சிறைக்குள் இருப்பவனுக்கு மோகம் வரச் செய்வதில் கந்தர்ப்பனுக்கு என்ன ஆனந்தம் ? 

பழிவாங்கும் தீ – அம்பை

அந்த மாலையுடன் வலிமை மிகுந்த பல அரசர்களிடம் சென்று பீஷ்மரை தோற்கடிக்க உதவிக் கோரினாள். ஆனால் பீஷ்மரை பகைத்துக் கொள்ள எவரும் விரும்பாததால் அனைவரும் மறுத்துவிட, அம்பை துருபதனிடம் சென்றாள். துருபதனும் மறுத்துவிட, அவனின் அரண்மனை வாசலில் தாமரை மாலையை தொங்கவிட்டு காட்டுக்கு சென்றாள் அம்பை. அங்கே இருந்த சில முனிவர்கள் அவளை பரசுராமரை அணுகுமாறு கூற, பரசுராமரிடம் சென்றாள்

வாசகர் கடிதம்

கதை காட்சிகளாகவே நகர்வது வாசகனை வெள்ளையம்மாளின் உலகத்துக்குள் பிரவேசிக்கச் செய்ய எளிதாகவும், ஏதுவாகவும் இருக்கிறது. நிறைய நுண் தகவல். அந்த வட்டாரத்துக்கே உரித்தான தகவல்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன (குச்சிக் கிழங்கு விளைச்சல், மம்பட்டியும் காரைச்சட்டியும் கொண்டு செய்யும் சித்தாள் வேலை, புலியூர் கடவீதிக் காட்சிகள்). அவள் ஐஸ்கிரீமை சாப்பிடுவாளா? எப்படிச் சாப்பிடுவாள்? என்ற எளிமையான சுவாரசியத்தைத் தூண்டவும் கதை தவறவில்லை