தீச்சொல் நிகண்டு

சொன்னாக் கேக்க மாட்டேங்கேரு பாட்டா? என்ன எழவுக்காக்கும் குத்தி இருந்து இந்த பேஸ்புக், கூகுள், வாட்ஸ்ஆப் எல்லாவற்றையும் விடாம நோண்டுகேரு? ஒரு நாளைக்கு ஆறேழு மணிக்கூர் இதே வேலையா? அந்த நேரத்திலே என்னலாம் எழுதலாம், வாசிக்கலாம்… போற காலம் வந்தாச்சு… பின்னே மூலக்கடுப்பு, உள்மூலம், வெளிமூலம், கந்தமூலம், கனகமூலம் வராம என்ன செய்யும்?

கவிஞர் பாசனின் ஸ்வப்ன வாசவதத்தா – 1

This entry is part 2 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

ஸ்வப்ன வாஸவ தத்தா என்ற இந்த நாடகம், அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த ஒரு கதையின் அடிப்படையில் எழுதப் பட்டது என்று அறிகிறோம். உதயனன், பத்மாவதி என்ற இருவரின் கதை இது. அவர்களின் சந்திப்பும், வாழ்க்கையுமே கதையின் அடிப்படை.   வத்ஸ என்ற ப்ரதேசத்து ராஜா உதயனன். அவன் மனவி வாஸவதத்தா. யௌகந்தராயன் என்ற மந்திரி.  இந்த நூலுக்கு முன்னோடியாக யௌகந்தராயன் என்ற பெயரில் ஒரு நாடகம் இந்த கவியே எழுதியுள்ளார்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1

இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார்.

அசைந்தாடு சீலை ஆலாபனம் – உஸ்தாத் அஞ்சலி

This entry is part 1 of 22 in the series இசைவாணர்

தனி வாத்தியத்தில் மட்டுமே தங்களை அர்ப்பணிப்பவர்கள், அந்தக் கருவியில் புதுமையான ஆழத்தை அடைந்து, இசையை உச்சத்தில் கொண்டு செல்வதற்கான திறனைக் கொண்டவர்கள். மேலும் நுணுக்கமாக பார்த்தால், ஒவ்வொரு வாத்தியக் கருவியிலும் பல்வேறு சங்கீத பரிமாணங்கள் மறைந்திருக்கின்றன. எந்த வாத்திய கருவியிலும் இன்னும் முழுமையாக மீட்டபடாத இசை, அறியாத இசைப் பரிமாணங்கள் உள்ளது,  அதைப் புதியதாக உருவாக்கும் திறன் இருக்கின்றது

நடமிடும் விரல்கள்

This entry is part 2 of 22 in the series இசைவாணர்

‘கோபாலி மேடைக்கு வருவது தெரியும், உட்கார்ந்திருப்பது தெரியும், உட்காருவது தெரியாது, மைனா கிளையில் அமர்வதைப் போல’ என்று மரப்பசுவில் தி ஜா எழுதியிருப்பார். ராக ஆலாபனையின் போது அவரது கவனம் முழுக்க ஸ்ருதியில் இருக்கும்; சின்னச் செல்லத் தட்டலுடன் ஒற்றை ஓசை வரும். பிறகென்ன, கலைஞருக்கும் இவருக்குமான கொடுக்கல் வாங்கலில் மொத்தப் பரிசும் ரசிகருக்கே. இரு கைகளின் விரல்கள், விரிந்தும், குவிந்தும் வரும் பாங்கில் மொழியின் ஒலி கேட்கும்

அம்மி அஸ்கரி

இந்த நாடகம் பேகம் அக்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை கோர்வையாக சொல்லிச் செல்கிறது. வசனம் முடிகிற இடத்தில் பாடல் தொடங்கி விடுகிறது. சில இடங்களில் வசனத்தின் கூடவே பாடல் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது. நடிகர் பாடகர் இருவருக்குமே இது மிகவும் சவாலான விஷயம்தான். உரையாடல்களின் வாயிலாக  சம்பவங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு புதிய முயற்சி. நல்ல முயற்சியும் கூட.

முடிவு

அர்ஜுனால் கண்ணை மூடி இருக்க முடியவில்லை. “அம்மா.. அம்மா.” அர்ஜுனின் குரல் நடுங்கியது. அவன் உடல் நாணல் காற்றில் மடங்குவது போல மடங்கியது, கண்கள் விரிந்து, மூச்சு வேகமானது. அடுத்த லேனில் விபத்தில் சிக்கிய கார் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தது. சுற்றிலும் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள் நெடுஞ்சாலை விளக்குகளில் மின்னின.

நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள்

ஆர்கானா ஆய்வுகூடத்தில் வேதியியல் நிபுணர்களுடன் இயங்குவதற்காக இயற்கை மொழி செயலாக்கத்தைக் (Natural Language Processing) கையாளுகிறது, இது பெரிய மொழி மாதிரிகளால் (Large Language Models – LLMs) இயக்கப்படுகிறது. விஞ்ஞானிகள் வாய்மொழியாக ஆர்கானாவுடன் தொடர்பு கொள்கிறார்கள், மேலும் ஆர்கானா அந்த வழிகாட்டுதல்களை χDL போன்ற வேதியியல் விளக்க மொழிகளைப் பயன்படுத்தி பரிசோதனை நடவடிக்கைகளாக மாற்றுகிறது

தருணங்கள்

எப்போதுமே இந்த சாலை இந்த நேரத்தில் கூட்டம் அதிகம். வரிசையாக ஒன்று இரண்டு பெரிய பள்ளிக் கூடங்கள் உள்ளது. குழந்தைகள் வண்ண வண்ண சீருடைகள். மழை என்பதால் வானவில் போன்று எண்ண முடியாத வண்ணங்களில் மழை கோட்டுகள். பூக்கள் சிரித்து கொண்டே நகர்வது போன்று சிறுவர் சிறுமிகள் உற்சாகமாக பள்ளி வகுப்புகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றார்கள். ஊட்டியில் உள்ள ரோஜா தோட்ட கண்காட்சி போன்று இருந்தது. தமிழ் அனைவரையும் பார்த்து கொண்டே நகர்ந்து கொண்டு இருந்தாள்.

மிளகு – அத்தியாயம் 85

மகுடி நாதம் கேட்டு நாகப் பாம்பு படமெடுத்து ஆடுமென்பார்கள். உண்மையா தெரியாது. எனினும் அம்பலத்தில் எடக்க மீட்டி வாசித்து மாரார் பாடும் சோபான சங்கீதம் பரமன்-பிரதிகளை மயக்கியிருக்கிறது. அந்த இசை கேட்டு கோவிலுக்கு என்னோடு வந்த பரமன் ஹிப்நாடிஸ உறக்கத்தில் ஆழ்ந்து உள்மனம் என்னோடு எல்லா செய்தியும் பகிர்ந்து கொண்டது. அவர் ஒரு பிரதி என்பதை அந்தப் பேச்சில் தான் அறிந்து கொண்டேன்.

வில்லோ (Willow)

பல இலட்சக்கணக்கான மின் அணுக்கள் பெரிய அளவில் இப்படி இணைந்து பல உலோகங்களைப் பிறப்பிக்கின்றன. இவை போஸ் ஒடுக்கத்துடன் (Bose Condensation) இணைகையில், நமக்கு சிறந்த திறனுள்ள கணினி கிடைக்கிறது. மிக அதிக வெப்ப நிலையிலும் தடையற்ற மின் கடத்திகளாக இந்தப் போசான் ஒடுக்கத்துடன் இணைந்த மின் அணுக்கள் செயல்படுவதால், அதி திறன் கணினி கிடைக்கிறது. கருந்துளைகளிலும் இந்தக் குவாண்டப் பிணைப்பு உள்ளது என்பது ஒரு வியத்தகு செய்தி.

குமார சம்பவம் மஹா காவ்யம்- 17

அசுர சக்ரவர்த்தி ஆத்திரத்தில் மதியிழந்தவனாக,  ரதத்திலிருந்து இறங்கி த்ரிபுராரி மகனையே, கார்திகேயனையே குறி வைத்து அடிக்கும் எண்ணத்துடன் பயங்கரமான ஆயுதம் ஏந்தி அவர் இருந்த திக்கில் ஓடினான்.  தன்னை நோக்கி வேகமாக ஓடி வருபவனை ஈசன் மகன், கார்த்திகேயன் தூரத்திலிருந்தே பார்த்து, அவன் புஜ பலத்தையும், கோபத்தால் யுகாந்த அக்னி போல ஜொலித்தவனை ,  தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டான்

இனியாவது அமைதி திரும்புமா?

சிரிய அரபு குடியரசு’ ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு. லெபனான், ஈராக், இஸ்ரேல், துருக்கி, ஜோர்டன் என ஐந்து நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேற்குப் பகுதியில் மத்தியதரைக்கடலும் எல்லையாக உள்ளது. எல்லை நாடுகளிலும் கலவரங்களும் போர்களும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வீழ்ச்சி அப்பகுதியின் ஸ்திரமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது

ஸ்கின்ஷிப் – பகுதி 2

This entry is part 1 of 3 in the series ஸ்கின்ஷிப்

ஆரவாரமாக வந்து நுழைந்தவர், நிலவறையில் மறைந்து போனார் எங்கள் அப்பா. சுமார் ஒரு வாரம் நாங்கள் அவரை அனேகமாகக் காணவில்லை. பகல் பூராவும் உறங்கினார், இரவில் அலைந்து திரிந்தார். என் அம்மா அவருக்குச் சாப்பாட்டை வெளியில் வைத்துப் போகத் துவங்கினார், அதை ப்ளாஸ்டிக் விரிப்பில் மூடி வைத்திருந்தார். எங்கள் அப்பா எப்படி இருக்கிறார் என்று பார்க்க அவள் நிலவறைக்குள் போவதை நான் பார்க்கவில்லை

மறம் பழகிய நாஷ்வில் கறுப்பின மாணவர்கள்

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தேவாலயம் செல்வோர் போல் உடையணிந்து இருந்தனர். எங்களுக்கு உணவு பரிமாறல் மறுக்கப்பட்ட நிலையில், நண்பகல் உணவு கவுண்டர்களில் அமர்ந்திருந்தவாறே   பாடங்கள் படித்துக் கொண்டும் வீட்டுப் பாடங்கள் செய்து கொண்டும் எங்கள் எதிர்ப்பைத்  தெரிவித்தோம். உணவக நிர்வாகி நண்பகல் உணவுக் கவுண்டர்களையும்  உணவகங்களையும் மூடிவிட ஆணையிட்டார்

எஸ்கார்ட்

”காலைல ஆடிட் ஆபிஸ்ல பார்ட் டைம் வேல பார்த்துட்டு நைட் இங்க வண்டி ஓட்டிகிட்டு இருந்தேன். அன்னைக்கு கொஞ்சம் தூக்க கலக்கமா இருந்துது. மாத்திவிடுறதுக்கு ஆள் யாரும் இல்ல. நானும் சரி ஒரு ட்ராப் தான, அட்ஜஸ்ட் பண்ணி போயிடலாம்னு நினைச்சு வண்டிய எடுத்துட்டேன். ஒரு டர்னிங்ல மெட்ரோ வேல நடந்துட்டு இருந்த இடத்துல டிவைடர் வெச்சிருந்தானுங்க. எப்படி அசந்தேன்னு தெரியல. கண்ண மூடி திறக்குறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றார்.

நீலதாவணி – நிறம் மாறாத அசல்களின் சித்திரம்

தென் தமிழகத்தில் தனக்கு வயது வந்த மகள் இருக்கிறாள் என்பதை உணர்த்த பெண்கள் கொண்டை போடும் வழக்கம் இருப்பதாக யாரோ கூறக் கேட்டிருக்கிறேன். இது பெண் திருமணமானவள் என்பதை காட்ட நெற்றி உச்சியில் குங்குமத்தை சூட்டி வைப்பதை போல, மெட்டி அணிவிப்பதைப் போல, கணவன் இறந்த பின்னர் கைமை நோன்பெடுக்க சொல்லி கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு சற்றும் குறைந்து போகவியலாத புற அடையாளம். அப்படியாக அடையாளப்படுத்தும் விஷயத்தை நீலதாவணி என்ற கதையில் நுட்பமாக கையாள்கிறார் ரம்யா.  கதையின் இடையிடையே ஊடாடும் ஒரு சில வரிகளில் அப்படி அடையாளப்படுத்துவதன் நோக்கத்தை பகிரங்கமாக வாசகப்பார்வைக்கு வைக்கிறார்.

4. தெய்வீகப் பணியாளன்

பல திக்குகளிலிருந்தும் எதிர்பாராமல் வரும் சவால்களை சந்தித்து வாழ்வதற்கு மனிதப் பிரயத்தனத்தால் இயலாது. எந்த மானுட சக்தியுமே இதனை எதிர்கொள்ளும் வலுவற்றது. ஆத்மாவின் நிரந்தரமான மகிழ்ச்சி தெய்வத்தின் புன்னகை ஒன்றினாலேயே கிடைப்பது. அது அனைவரையும் இன்பம் கொள்ளச்செய்தும் உண்மையின் வடிவாகவும் திகழ்கிறது.

நற்றிணை

எல்லாமும் அறிந்தது நிலவு தான்.பகல் விட இரவுக்கு ஆயிரம் கண்கள். அந்தக் கண்களின் ஒளியாக இரு்பது நிலவு மட்டுமே.நிலவு நினைத்தால் தனக்கு உதவ முடியும்.எல்லா ரகசியங்களையும் அறிந்த , மாண்பும் சான்றாண்மையும் கொண்ட நிலவு மட்டுமே தனக்கு உதவ இயலும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் அவள். அவன் வரக் காலம் தாழ்ந்ததென இவ்வளவு காலம் ஆற்றியிருந்தாள்.ஆனால் ,நாட்கள் மணல் மேட்டில் சரியும் மணலாய் உதிர உதிர,அவளுக்கு இப்போது தன் காதலன் காலம் தாழ்த்தவில்லை,

அறிவிப்புகள்

சொல்வனத்தில் வண்ண நிலவனின் நாவல், ’எம். எல்’ பிரசுரமாகியது. சொல்வனம் வெளியிட்ட முதல் நாவல் தொடர் அது. அரசியல் நாவல்கள் சமீப காலத்தில் நிறையவே தமிழில் வெளி வந்துள்ளன.